நட்சத்திர கணங்கள் மற்றும் அவற்றின் பண்புகள்

நட்சத்திர கணங்கள்

ஜோதிடத்தில் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் உள்ளன. 27 நட்சத்திரங்களுக்கு உண்டான கணங்கள் பற்றிய சில பொதுவான விஷயங்கள் குறித்து இப்பகுதியில் சற்று விரிவாக பார்ப்போம்.
பொருத்தம் பார்த்து திருமணம் செய்யும் வழக்கம் இன்றளவும் நடைமுறையில் உள்ளது. பொருத்தம் பார்ப்பதில் ஒருவரின் பிறந்த நட்சத்திரம் முக்கிய இடம் வகிக்கிறது. 10 பொருத்தங்களில் முக்கியமான ஒன்று கண பொருத்தம் ஆகும். கண பொருத்தம் என்றால் என்ன? அவை எவ்வகையான குணாதாசியங்கள் கொண்டிருக்கும் என பின்வருமாறு பார்ப்போம்.

நட்சத்திர கணங்கள்

27 நட்சத்திரங்களையும் மூன்று வகையான கணங்களாக பிரித்திருக்கிறது ஜோதிடம். அவை,
1. தேவ கணம்
2. மனுஷகணம்
3. ராட்சஸ கணம்

தேவகண நட்சத்திரங்கள் :

1) அஸ்வினி
2) மிருகசீரிடம்
3) புனர்பூசம்
4) பூசம்
5) அஸ்தம்
6)சுவாதி
7) அனுஷம்
8) திருவோணம்
9) ரேவதி

இந்த ஒன்பது நட்சத்திரங்களும் தேவ கண நட்சத்திரங்களாகும்.

மனுஷ கண நட்சத்திரங்கள் :

1) பரணி
2) ரோகிணி
3) திருவாதிரை
4) பூரம்
5) உத்திரம்
6) பூராடம்
7) உத்திராடம்
8) பூரட்டாதி
9) உத்திரட்டாதி.

இந்த ஒன்பது நட்சத்திரங்களும் மனுஷ கண நட்சத்திரங்களாகும்.

ராட்சஸ கண நட்சத்திரங்கள் :

1) கிருத்திகை
2) ஆயில்யம்
3) மகம்
4) சித்திரை
5) விசாகம்
6) கேட்டை
7) மூலம்
8) அவிட்டம்
9) சதயம்
இந்த ஒன்பது நட்சத்திரங்களும் ராட்சஸ கண நட்சத்திரங்கள்.

தேவகண நட்சத்திரங்கள் என்றால் உயர்ந்தவை, மனுஷ கண நட்சத்திரங்கள் என்பவை மத்திமமானவை, ராட்சஸ கண நட்சத்திரங்கள் என்பவை தாழ்ந்தவை என்ற எண்ணம் வேண்டாம். நட்சத்திரத்தில் உயர்ந்த நட்சத்திரம், தாழ்ந்த நட்சத்திரம் என்று இல்லை. ஒவ்வொரு நட்சத்திரத்திற்க்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.

தேவ கண நட்சத்திரக்காரர்களின் பண்புகள்

தேவ கண நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் உடல் மெலிந்திருக்கும். மிருதுவான தோலைக் கொண்டிருப்பார்கள். இரக்க குணம் கொண்டவர்கள். எவரையும் பகை உணர்வோடு பழக மாட்டார்கள். இவர்கள் பெரும்பாலும் எதிரிகளே இல்லாதவர்களாகத்தான் இருப்பார்கள். கோபத்தை அவ்வளவு எளிதில் வெளிக்காட்ட மாட்டார்கள். எதையும் உள்ளுக்குள்ளேயே வைத்து கொண்டிருப்பார்கள்.

இருக்கும் இடத்தை நேர்த்தியாக அழகுடன் பளிச்சென்று வைத்திருப்பார்கள். அலுவலகத்தில் இவர்களுடைய இடம் எப்போதும் சுத்தமாக, அழகாக வைக்கப்பட்டு இருக்கும். அதைத்தான் அவர்களும் விரும்புவார்கள். இவர்கள் புகழ்ச்சிக்கு மயங்குபவர்களாக இருப்பார்கள். அதனாலேயே எளிதில் மற்றவர்களிடம் ஏமாறுவார்கள். அதேபோல் யார், எதைச் சொன்னாலும் நம்பிவிடுவார்கள். கொஞ்சம் புகழ்ந்து பேசினால், இவர்களிடம் காரியம் சாதித்துக் கொள்ளலாம்.

தேவ கண நட்சத்தித்தில் பிறந்தவர்கள், நோய் தாக்கினால் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். சின்ன மழையில் நனைந்தாலே காய்ச்சல், சளி வந்துவிடும் இவர்களுக்கு. மது, புகை முதலான கெட்டபழக்கங்கள் இல்லாதவர்களாக இருப்பார்கள். ஆனால் அதற்குப் பழகினால், அதில் இருந்து மீளமுடியாதவர்களாக இருப்பார்கள். உறவினர்களால் பாதிப்புக்கு ஆளாவார்கள். ஆனால் மனதில் எதையும் வைத்துக்கொள்ளமாட்டார்கள்.

இவர்கள், பல திறமைகளைக் தன்னகத்தே கொண்டிருப்பார்கள். தெய்வ நம்பிக்கை அதிகம் கொண்டவர்கள். பலன் எதிர்பார்க்காமல் கடமையைச் செய்பவர்கள். முயற்சிகள் தோற்றுப் போனால், சோர்ந்து போய்விடுவார்கள். பசி தாங்கமாட்டார்கள்.

நட்சத்திர கணங்களின் குணாதிசியங்கள்

இவர்கள், குடும்பத்தின் மீது அதிக பாசமும், நேசமும் கொண்டிருப்பார்கள். குழந்தைகளை திட்டமிட்டு வளர்ப்பார்கள். அவர்களின் வளர்ச்சிக்காக, ரொம்பவே மெனக்கெடுவார்கள். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொண்டிருப்பார்கள்ள். எளிமையான உடற்பயிற்சிகளை மட்டும் மேற்கொள்வார்கள். நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பார்கள்.

மனுச கண நட்சத்திரக்கார்களின் பண்புகள்

இவர்கள் நடுத்தரமான உடல்வாகு கொண்டவர்கள். சராசரியான உயரம் உடையவர்கள். உழைப்பிற்கு அஞ்சாதவர்கள். தனக்கு ஆதாயம் இருந்தால் மட்டுமே மற்றவர்களுக்கு உதவுவார்கள். பொன், பொருள் சேர்க்க எந்த ஊருக்கும், இடத்திற்கும் செல்ல தயங்க மாட்டார்கள்.

குடும்ப நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள். தனி மனித ஒழுக்கம் என்பது இவர்களை பொறுத்தவரை குறைவு. தீய பழக்க வழக்கங்கள் எளிதில் இவர்களை ஆட்கொள்ளும். ஆனால் அதேசமயம், விட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் வந்த அடுத்த கணமே அதை விட்டுவிடுவார்கள்.

இவர்களை எளிதில் எந்த நோயும் தாக்காது. அப்படியே நோய் வந்தாலும் சில நாட்களிலேயே குணமாகிவிடுவார்கள். பயணங்களில் அதிக ஆர்வம் உடையவர்கள். அதற்காகவே தனியாக சேமிப்பார்கள். எதிலும் திட்டமிடல் என்பது இருக்கும். குடும்பச் செலவுகளைக்கூட சரியாகத் திட்டமிட்டு செய்வார்கள். தங்களின் தகுதிக்கு மேல் கடன் வாங்க மாட்டார்கள். அளவுக்கு அதிகமாக கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்த முடியாமல் திண்டாடுவார்கள்.

மனச்சோர்வு, மற்றும் மனசஞ்சலம் உடையவர்கள். தோல்வி மற்றும் அனுபவங்களில் இருந்து பாடம் கற்று கொள்வார்கள். கடினமாகப் போராடி வாழ்வில் முன்னேறுவார்கள். ஒரு கட்டத்தில் சம்பாதித்தது போதும் என்ற எண்ணம் வந்து வாழ்வை அமைதியாகக் கழிக்கும் மனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ராட்சஸ கண நட்சத்திரக்கார்களின் பண்புகள் :

ராட்சஸ கணம் கொண்டவர்கள் நீண்ட நெடிய உருவம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதே போல தடித்த உடல்வாகு உடையவர்கள் மற்றும் தடித்த தோல் உடையவர்கள். இவர்களின் தலைமுடி கோரை போன்று இருக்கும். முன்கோபம் அதிகம் கொண்டவர்கள். கடின உழைப்பாளிகள். தோல்விகளை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வெற்றியடையும் வரை விடாமுயற்சியுடன் தொடர்ந்து போராடுபவர்கள்.

யோகங்களின் வகைகள்

ஒரு செயலினால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி பெரிதாக யோசிக்க மாட்டார்கள். எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள். பொன், பொருள் தேடி உலகம் சுற்றுபவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் சொந்தத் தொழில் செய்வதில் ஆர்வமுள்ளவர்கள். ஒரு இடத்தில் வேலை செய்து கொண்டிருந்தாலும் அதிகாரம் செலுத்தும் பதவியில் இருப்பவர்கள்.

நோயினால் ஏற்படும் இவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்பது இவர்களுக்கு குறைவாகவே இருக்கும். கெட்டபழக்கங்கள் எளிதில் இவர்களை பற்றிக்கொள்ளும். அதிலிருந்து மீளமாட்டார்கள். ஆனால் தீயபழக்கத்தால் குறைந்த பாதிப்புகளை மட்டுமே பெறுவார்கள். மன தைரியம் அதிகம் கொண்டவர்கள். துணிச்சலான முடிவுகளை எடுப்பார்கள். இறை நம்பிக்கை அளவோடு இருக்கும். முயற்சியே வெற்றி தரும் என்பதில் நம்பிக்கை உடையவர்கள்.

இவர்களுக்கு குடும்பப் பாசம் என்பது அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை சரியாக செய்து கொடுப்பார்கள். அதிக பொருள் சேர்க்கும் ஆசை உடையவர்கள். அனைத்து சுகபோகங்களையும் அனுபவிக்க ஆசைப்படுபவர்கள். நீண்ட ஆயுள் உடையவர்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

யோனி பொருத்தம் என்றால் என்ன

யோனிப் பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

யோனிப் பொருத்தம் என்றால் என்ன? திருமணத்தைப் பொருத்தவரை யோனிப் பொருத்தம் என்பது மிக மிக முக்கியமான பொருத்தம் ஆகும். திருமணத்தின் முக்கிய குறிக்கோளே வம்சத்தை விருத்தி செய்வது ஆகும். ஆண், மற்றும் பெண்ணின் தாம்பத்திய...
அரிசி கழுவிய தண்ணீர் நன்மைகள்

அரிசி கழுவிய தண்ணீரில் மறைந்திருக்கும் அற்புத பயன்கள்

அரிசி கழுவிய தண்ணீர் நன்மைகள்  நம் சமையலைறையில் உள்ள பல பொருட்கள் நமது அழகை தக்கவைத்துக் கொள்ள பயன்படுகிறது. உதாரணமாக மஞ்சள் தூள், தயிர், அரிசி மாவு, தக்காளி, வெள்ளரிக்காய், இன்னும் பல உள்ளன....
இறால் வடை செய்முறை

சுவையான இறால் வடை

இறால் வடை தேவையான பொருட்கள் இறால் - 100 கிராம் கடலைபருப்பு – 250 கிராம் வெங்காயம் – 2 ( பொடியாக நறுக்கியது ) பச்சை மிளகாய் -  5 ( பொடியாக...
ரிஷப ராசி குணங்கள்

ரிஷப ராசி பொது பலன்கள் – ரிஷப ராசி குணங்கள்

ரிஷப ராசி குணங்கள் ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவானாவர். ரிஷப ராசியில் கிருத்திகை 2, 3, 4 ஆம் பாதங்களும், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2 பாதங்களும் அடங்கியுள்ளன. ராசிகளில், ரிஷப ராசி...
துருதுருவென இருக்கும் குழந்தைகளுக்கு

குழந்தைகளின் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் உணவுகள்

குழந்தைகளை சுறுசுறுப்பாக்கும் உணவுகள் குழந்தையின் நினைவாற்றலை அதிகரிக்கவும், அவர்கள் அனைத்திலும் சிறப்பாக கவனம் செலுத்தவும்,  சரியான சீரான உணவு அவசியமாகிறது. குறிப்பாக துருதுருவென சுறுசுறுப்பாக இருக்கும்  குழந்தைகளுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. குழந்தையின் அறிவாற்றல் மற்றும்...
sinus remedies

சைனஸ் பாதிப்பின் அறிகுறிகள், மற்றும் அதற்கான தீர்வுகள்

சைனஸ் பாதிப்பிற்கான தீர்வுகள் சைனஸ் என்றால் என்ன ? சைனஸ் என்பது மூக்கின் இரு பக்கங்களிலும் சளி நிறைந்து இருப்பதே ஆகும். இது ஒரு விதமான ஒவ்வாமையாகும். அடிக்கடி தும்மல், மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, தலைவலி...
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் பூரம் நட்சத்திரத்தின் இராசி : சிம்மம் பூரம் நட்சத்திரத்தின் அதிபதி : சுக்கிரன் பூரம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சிம்மம் : சூரியன் பூரம் நட்சத்திரத்தின் நட்சத்திர தேவதை : பார்வதி பூரம்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.