திருமணத்தில் கூறைப்புடவை அணிவது ஏன்?

கூறைப்புடவை அணிவது ஏன்?

திருமணத்தில் இருக்கும் பல்வேறு சடங்களில் ஒன்று மணமகள் கூறைப்புடவை அணிவது. எத்தனையோ விலை உயர்ந்த சேலைகள் இருக்கும்போது ஏன் கூறைப்புடவையை மட்டும் திருமணத்தில் அணிகின்றனர் என்ற கேள்வி பலருக்கும் எழாமல் இல்லை. அதற்கான பதிலை இந்த பதிவில் காண்போம்.

நமது திருமண கலாச்சாரத்தில் இன்றும் கடைபிடிக்கப்படும் ஒரு முக்கிய விஷயம் திருமணத்தின்போது மணமகன் வீட்டார் மணமகளுக்கு கூறைப்புடவையை அளிப்பது. திருமணங்களில் மாங்கல்யம் கட்டுவதற்கு முன்பு மணமகன் வீட்டார் மணமகளுக்கு முகூர்த்த புடவையான கூறைப்புடவையை அளிக்கின்றனர். அதை மணமகள் உடுத்திக் கொள்வதற்கு தேவையான உதவும் உரிமைகள் அனைத்தும் மணமகனின் சகோதரிக்கு மட்டுமே தர வேண்டும் என சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

கூறைபுடவை அணிவது ஏன்

இது ஏன் என்றால் மணமகனான, தன் சகோதரன் இல்லற சுகங்களை அனுபவித்து மகிழ இந்த மணமகள் ஏற்றவள் தானா என்பதை அறிய அந்த நேரத்தில் உறுதி செய்யவே மணமகனின் சகோதரிக்கு இந்த உரிமையை சாஸ்திரம் வழங்குகிறது. மணமகளுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் இதன் மூலம் தெரிய வரும்.

இந்த முகூர்த்தப்புடவையை தான் கூறைப்புடவை என்று அழைக்கின்றனர். அப்படிப்பட்ட இந்த முகூர்த்தப்புடவையான கூறைபுடவையை திருமணம் முடிந்த பின், திருமண மந்திரத்தின் பொருளும், மகிமையும் அறிந்த ஒருவருக்கு தானமாக அளித்துவிட வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், இன்று யாரும் இதை கடைபிடிப்பதில்லை.

திருமணத்தில் பட்டுப்புடவை ஏன் தவிர்க்கபடுகிறது?

இன்றைய காலத்தில் மணமகன் வீட்டார் தங்கள் வசதி, மற்றும் அந்தஸ்தை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முகூர்த்த புடவையாக விலை உயர்ந்த பட்டுப்புடவைகளை வாங்குவதால், அதை மற்றவர்களுக்கு தானமாக வழங்க மனம் வருவதில்லை. மேலும் பட்டுத்துணிகள் அனைத்தும் உயிர் வதையால் உருவாக்கப்படுகிறது. மேலும், பலவிதமான ரசாயன நூல்களால் செய்யப்பட்ட துணிகள் இயற்கைக்கு உகந்தது அல்ல.

பருத்தி புடவை ஏன்?

இயற்கையாக உருவாகும் பருத்தி நூலால் ஆன புடவையே சாஸ்திர சம்பிரதாயம். இப்படி சுத்தமான பருத்தி நூலால் நெய்யப்பட்ட புடவையை மஞ்சள் நீரில் நனைத்து பின்பு அதை உலர்த்தி மங்களமாக்கி, அதை முகூர்த்தப் புடவையாக(கூறைபுடைவையாக) பயன்படுத்தும் வழக்கம் இன்றும் பல கிராமங்களில் பரவலாக பின்பற்றப்படுகிறது.

கூறைப்புடவை அணிவதன் அர்த்தம்

ஏன் புடவையை தானம் செய்ய வேண்டும்?

திருமண நிகழ்ச்சியில் பலரும் மணமகளை, அவளது சிறப்பை பார்த்தவாறு அமர்ந்திருப்பார்கள். அதனால் மணமகள் மீது திருஷ்டி படிந்திருக்கும். ஆகையால், அனைவரும் தங்களின் திருமணத்தில் முகூர்த்தப் புடவையாக பருத்தியால் நெய்யப்பட்ட புடவையையே பயன்படுத்தி, அதை திருமணத்திற்கு பின் தானமும் செய்தால், தம்பதிகளின் வாழ்வு மேன்மை அடையும்.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

யோகங்கள் 27

ஜாதகத்தில் உள்ள யோகங்கள் – ஜாதக யோகங்கள் பகுதி #5

ஜாதகத்தில் யோகங்கள் யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் ஏற்படும் யோக பலனை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது அதற்கு எதிரான கெடு...
வயிறு மச்ச பலன் பெண்கள்

ஆண் மற்றும் பெண் இருவருக்கும் பொதுவான மச்ச பலன்கள்

ஆண் பெண் இருவருக்கும் பொதுவான மச்ச பலன்கள் ஆண் மற்றும் பெண்ணின் கழுத்தின் முன் பக்கம், பின் பக்கம் போன்ற இடங்களில் இருக்கும் மச்சம் நீண்ட ஆயுளைத் தரும். இவர்கள் மந்தமான போக்கு கொண்டவர்களாக...
கோலம் போடுவதால் உண்டாகும் பயன்கள்

கோலத்தின் பாரம்பரியமும் அதன் சிறப்புகளும்

கோலத்தின் பாரம்பரியமும் அதன் சிறப்புகளும் எந்தவொரு மங்கள நிகழ்வையும் அழகாக்குவது முதலில் அங்கு இடப்படும் கோலம்தான். பண்டிகைகள், திருமண விழாக்கள், கோயில் திருவிழா போன்ற எந்த ஒரு விசேஷம் என்றாலும் அவற்றில் முக்கியமாக இடம்பெறுவது...
வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை

வெறும் வயிற்றில் எந்த உணவை சாப்பிடுவது நல்லது

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய உணவுகள்  உடல் ஆரோக்கியத்தில் காலை உணவு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு நாளுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் காலை உணவின் மூலமே நமக்கு கிடைக்கிறது. அன்றைய நாள் முழுவதும்...
மகர ராசி

மகர ராசி பொது பலன்கள் – மகர ராசி குணங்கள்

மகர ராசி குணங்கள் மகர ராசியின் ராசி அதிபதி சனி பகவான் ஆவார். உத்திராடம் நட்சத்திரத்தின் 2, 3, 4 ஆம் பாதங்களும், திருவோணம் நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும், அவிட்டம் நட்சத்திரத்தின் 1, 2...
கண் திருஷ்டி நீங்க

உங்கள் குழந்தைக்கு கண் திருஷ்டி நீங்க செய்ய வேண்டியவை

உங்கள் குழந்தைக்கு திருஷ்டி படாமல் இருக்க பொதுவாக குழந்தைகளுக்கு திருஷ்டி சுற்றி போட... கீழ்கண்ட முறைகளை பெரியோர்கள் தொன்று தொட்டு கடைபிடித்து வந்து உள்ளனர். அவைகள் பின்வருமாறு... 1. ஒருகைப்பிடி உப்பை எடுத்து கையை நன்றாக...

திருமண தடை நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

திருமண தடை  நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இரு மணங்கள் இணையும் வைபவமே திருமணமாகும். அந்த திருமணம் சரியான காலத்திலும் சரியான வயதிலும் நடைபெறுவது முக்கியமானதாகும்.  சிலரது ஜாதகத்தில் இருக்கும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.