ஜாதகத்தில் யோகங்கள்
யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் ஏற்படும் யோக பலனை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது அதற்கு எதிரான கெடு பலனையும் தரலாம். பெரிய அதிகாரி முதல், பிச்சைக்காரர் வரை யோகங்களால் தான் அந்த நிலையை அடைய முடியும். அந்த வகையில் பலவிதமான யோகங்கள் பற்றி நாம் பார்த்து வருகிறோம். இந்த பகுதியில் ஒரு சில யோகங்களையும் அவற்றின் பலன்களையும் பார்க்கலாம்.
சரள யோகம் :
8ம் அதிபதி 8ல் பலம் பெற்று இருந்தால் சரள யோகம் ஏற்படுகிறது.
சரள யோகத்தின் பலன்கள் :
இவர்கள் நீண்ட ஆயுளை உடையவர்கள். எதற்கும் பயப்பட மாட்டார்கள். தன்னம்பிக்கை உடையவர்கள். சிறந்த கல்விமான். எதிரிகளை வெல்லும் திறமை இவர்களிடம் நிறைந்திருக்கும்.
அசுர யோகம் :
லக்னத்தில் குருவும், சந்திரனும் கூடி இருந்து லக்னாதிபதி சுப கிரகத்துடன் இணைந்து இருந்தால் அசுர யோகம் உண்டாகிறது.
அசுர யோகத்தின் பலன்கள் :
பொதுச்சேவையில் ஈடுபட்டு கீர்த்தி உண்டாகும். தலைமை பதவிக்கான வாய்ப்புகள் கிட்டும். இந்த யோகம் 40 வயதுக்கு மேல் சிறந்த பலனை கொடுக்கும்.
பாதாள யோகம் :
லக்னத்திற்கு பனிரெண்டில் சுக்கிரன் இருந்து பனிரெண்டாம் வீட்டுக்கு உரியவர் உச்சம் பெற்று குருவுடன் இணைந்திந்தால் பாதாள யோகம் உண்டாகிறது.
பாதாள யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
செல்வ செழிப்புடன் வாழ்வார்கள். வாழ்வின் பிற்பகுதியில் செல்வம், சிறப்பு பெற்று வளமுடன் வாழ்வார்கள்.
கவுரி யோகம் :
மனோகாரகனான சந்திரன் உச்சம் பெற்று குரு பார்த்தால் கவுரி யோகம் உண்டாகிறது.
கவுரி யோகத்தின் பலன்கள் :
தெய்வீக வழிபாடு, நல்ல குடும்ப வாழ்க்கை உண்டாகிறது. இறை வழிபாட்டில் அதிக ஈடுபாடு இருக்கும்.
இந்திர யோகம் :
லக்னத்திற்கு 5ம் வீட்டில் சந்திரன் அமையப்பெற்று 5 மற்றும் 11ம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றால் இந்திரயோகம் உண்டாகிறது.
இந்திர யோகத்தின் பலன்கள் :
இவர்கள் தைரியம் மிக்கவர்கள், புகழ் மிகுந்த வாழ்க்கை வாழ்வார்கள்.
பிரபை யோகம் :
லாபாதிபதி சுக்ரனுடன் சேர்ந்து 1,4,7,1௦ ஆகிய இடங்களில் இருக்க பிரபை யோகம் உண்டாகிறது.
பிரபை யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
யோகம் உடையவர்கள். பொதுச் சேவையில் ஈடுபாடு இருக்கும். கீர்த்தி உடையவர்கள். அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள்.
காஹள யோகம் :
4ம் வீட்டு அதிபதியும், 9ம் அதிபதியும் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருந்து லக்னாதிபதி பலமடைந்து இருந்தால் காஹள யோகம் உண்டாகிறது.
காஹள யோகத்தின் உண்டாகும் பலன்கள் :
இவர்கள் பிடிவாதகாரராகவும், தைரியம் மிக்கவராகவும் இருப்பார்கள்.
மகாலட்சுமி யோகம் :
ஒன்பதாம் அதிபதியும், சுக்கிரனும் 1,5,9,4,7,10 ல் அமர்ந்து இருந்தால் மகாலட்சுமி யோகம் உண்டாகிறது.
மகாலட்சுமி யோகத்தின் பலன்கள் :
வாழ்க்கை துணைவி மூலம் லாபம் உண்டாகும். தலைமை பதவி உண்டாகும். வாகன வசதிகள் ஏற்படும். அதிகாரம் செய்யும் பதவி அடைவர்.
சதா சஞ்சார யோகம் :
லக்னாதிபதி சரராசியில் இருந்தால் சதா சஞ்சார யோகம் உண்டாகும்.
சதா சஞ்சார யோகத்தின் பலன்கள் :
அதிக அலைச்சல், அதிகப்படியான பயணங்கள் மேற்கொள்ளும் நிலை உண்டாகிறது
பாக்கிய யோகம் :
லக்னத்திற்கு 10ம் வீட்டில் சுப கிரகம் இருப்பது அல்லது 10ம் அதிபதியான பாக்கியாதிபதி ஆட்சியோ உச்சமோ பெற்று சுபகிரக பார்வை பெற்றால் பாக்கிய யோகம் உண்டாகிறது.
பாக்கிய யோகத்தின் பலன்கள் :
இவர்கள் புத்திக்கூர்மை உடையவர்களாக இருப்பார்கள். உதவும் குணம் கொண்டவர்கள். வாகன பிரியர்கள். அழகு, அறிவு, தயாளகுணம் உடையவர்.
அங்கஹீன யோகம் :
12ம் அதிபதி கேந்திர திரிகோண வீடுகளில் ராகுவுடன் இணைவதால் உண்டாவது அங்கஹீன யோகம் ஏற்படுகிறது.
அங்கஹீன யோகத்தின் பலன்கள் :
உடல் உறுப்புகளில் ஏதாவது குறை இருக்கும்.
லக்ன கர்மாதிபதி யோகம் :
லக்னாதிபதியும் 10ம் அதிபதியும் ஏதாவது வீடுகளில் இணைவது அல்லது பார்வை மற்றும் சேர்க்கை மூலம் பலம் பெற்றால் லக்ன கர்மாதிபதி யோகம் உண்டாகிறது.
லக்ன கர்மாதிபதி யோகத்தின் பலன்கள் :
பிறரின் உதவியின்றி தன் வாழ்க்கையில் தானே முன்னேறுவார்கள்.
உங்கள் ஜாதகத்தில் உள்ள யோகங்கங்களை பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.