சாக்லெட் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா ?
குட்டீஸ் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்குமே சாக்லெட் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். குறிப்பாக குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம். கடைக்கு அழைத்து சென்றால், அவர்களது கை சாக்லெட்டை பார்த்து நீட்டும். பெரியவர்களும் குழந்தைகளுக்கு நிகராக சாக்லெட் சாப்பிட ஆசை கொள்வர்.
இருந்தாலும் உடல் பருமன் மற்றும் பல உடல் உபாதைகள் காரணமாக பெரியவர்கள் சாக்லெட் சாப்பிடுவதை தவிர்த்துவிடுவார்கள். எப்போதாவது ஒரு நாள் சாப்பிடுவது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது அதன் பாதிப்பும் அதிக அளவில் இருக்கும்.
குழந்தைகள் சாக்லேட்டை கடித்து சாப்பிடுவதால் அவர்களின் பற்களும் சிறு வயதிலேயே பாதிப்படைய ஆரம்பிக்கும். சாக்லெட்டில் அதிக கலோரி நிறைந்துள்ளது. ஆகவே இதனை சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்படும் என்று எண்ண வேண்டாம். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் தான் அவ்வாறு ஆகும்.
ஆனால் அளவாக சாப்பிட்டு வந்தால், எந்த பிரச்சனையும் இருக்காது. மேலும் சாக்லெட் சாப்பிட்ட பிறகு நன்கு வாய் கொப்பளிக்க வேண்டும். குழந்தைகளுக்கும் இதை அறிவுறுத்த வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு இரவு தூங்கும் முன் சாக்லெட் சாப்பிட கொடுக்க வேண்டாம்.
டார்க் சாக்லெட் மாரடைப்பு அபாயத்தை 50 சதவீதமும், இதய நோய்களை 10 சதவீதமும் குறைக்கும். எனவே தினமும் ஒரு துண்டு சாக்லெட் சாப்பிடுவது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
சாக்லெட்டால் மனநிலையை மேம்படுத்த முடியும். ஏனெனில் மன அழுத்தத்தை குறைக்கும் செரடோனின் இதில் அதிகம் உள்ளது.
சாக்லெட்டின் முக்கிய மூலப்பொருள் கொக்கோ தூள். இதில் குறைந்த கொழுப்பே உள்ளது. சாக்லெட் சாப்பிட விரும்புகிறேன். ஆனால் எடை போட விரும்பவில்லை” என்று எண்ணுபவர்கள் குறைந்த கொழுப்பு கொண்ட சாக்லெட் சாப்பிட வேண்டும். ஆனால் அதையும் அளவோடு சாப்பிட வேண்டும். மேலும், சாக்லெட்டில் கொக்கோ 60 சதவீதத்திற்கு மேல் இருப்பதை தேர்ந்துதெடுத்து சாப்பிட வேண்டும்.
சாக்லெட் சாபிட்டால் சில காலத்திற்கு முதுமையை ஒத்தி வைக்கலாம். அதாவது சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களையும், வரிகளையும் சாக்லெட் குறைக்கின்றது. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது.
சாக்லேட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தீமைகள்
- கருப்பு சாக்லெட்டில் அதிகப்படியான சாக்லெட் மூலப் பொருள் சேர்க்கப்பட்டிருக்கும். இனிப்பு குறைவாக கலந்திருக்கும். எனவே கருப்பு சாக்லெட்டுகளை குழந்தைகளுக்கு நம்பிக்கையுடன் வழங்கலாம். அவை குழந்தைகளுக்கு பல நன்மைகளையும் வழங்கக்கூடியது.
- கருப்பு சாக்லெட்டில் உள்ள அதிகப்படியான நோய் எதிர்பொருட்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்புமண்டலத்தை பலமாக்கும். ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதுடன், இதய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலும் இவற்றுக்கு உண்டு. மூளை சுறுசுறுப்பாக செயல்படவும் சாக் லெட் மூலப்பொருள் உந்துதல் அளிக்கிறது.
- அளவுக்கு அதிகமாக சாக்லெட் உண்பதால் தலைவலி ஏற்படலாம். அதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் சாக்லெட் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
- தினமும் ஒரு சாக்லெட் சாப்பிடுவதன் மூலம் இதய நோய் வராமல் தடுக்கலாம்.
- சாக்லெட் நிறைய கலோரிகள் ஆற்றலைத் தருவதால் குழந்தைகளுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். அதே நேரம் நீண்ட நேரம் பசியெடுக்காமல் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள்.
- 30 கிராம் கருப்பு சாக்லெட்டில் அதிகபட்சம் 10 மில்லிகிராம் காபின் ரசாயனப் பொருளும், பால் சாக்லெட்டில் 5 மில்லி கிராம் காபின் மூலப்பொருளும் உள்ளன. மூளைக்கு உகந்த செரோடானின், என்டார்பின் மூலப்பொருட்களும் சாக்லெட்டில் உள்ளன.
- மனஅழுத்தம் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு ஆற்றலும் சாக்லெட் சாப்பிடுவதால் கிடைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
- 65 முதல் 70 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை உள்ள இடத்தில் சாக்லெட்டுகளை பராமரிப்பதே அதன் சுவைக்கும், ஆரோக்கியத்திற்கும் நல்லது.
- ஒரு கடி அளவு சாக்லெட் உங்களுக்கு 150 அடிகள் நடக்கும் ஆற்றலைத் தரும்.
- குழந்தைகள் தினமும் சாக்லெட் சாப்பிடுவதால் எந்த தீங்கும் ஏற்படுவதாக ஆய்வுகளில் அறியப்படவில்லை. தினசரி குறைந்த அளவு சாக்லெட் உண்பதால் நோய் எதிர்ப்பாற்றலும், உடலுக்குத் தேவையான ஆற்றல்களும் கிடைப்பதாகவே தெரியவந்துள்ளது.
- வழக்கமான சாக்லெட் கட்டிகளில் (25 கிராம் அளவுடையது) 6 கரண்டி சர்க்கரையும், சுமார் 2 கரண்டி சாக்லெட் பவுடரும் சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால் ஒரு நாளைக்கு 4 கிராம் சர்க்கரையும், 1 கரண்டி சாக்லெட் பவுடருமே குழந்தைகளுக்குப் போதுமானதாகும். எனவே தினமும் சுமார் 15 கிராம் அளவுடைய சாக்லெட் சாப்பிடுவதால் எந்த பிரச்சினையும் இல்லை.
- அளவுக்கு அதிகமாக சாக்லெட் சாப்பிடுவதால் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. பல்சொத்தை, தலைவலி, உடல் பருமன், மூளை பாதிப்பு, நீரிழிவு போன்ற பல பிரச்சினைகள் ஏற்படும். எனவே அளவாக சாக்லெட் சாப்பிட்டு ஆரோக்கியம் பெறுவோம்.
சாக்லெட் யார் சாப்பிடலாம் ?
- தினமும் காலை எழுந்தவுடன் மில்க் சாக்லெட் என்று அழைக்கப்படும் பாலினால் தயாரிக்கப்பட்ட சாக்லெட் சாப்பிட்டால் உடல் கொழுப்பு எரிக்கப்படுவதுடன், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைக்கவும் உதவும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
- அதிலும் காலையில் எழுந்ததும் பெண்கள் சாக்லெட் சாப்பிட்டால், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை எரிக்க உதவும்.
- அதேபோல், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை மாற்றவும் விரும்பினால் தினமும் காலை, மாலை என இருவேளையும் சாக்லெட் சாப்பிட்டால் போதும்.
- காலை அல்லது இரவு நேரங்களில் மில்க் சாக்லெட் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்து பார்த்ததில் . காலை அல்லது இரவு நேரத்தில் சாக்லெட் எடுத்துக் கொள்வது உங்களின் உடல் எடை குறையுமே தவிர அதிகரிக்கும் வாய்ப்புகள் குறைவு தான்.
- காலையில் எழுந்து 1 மணி நேரம் ஆன பிறகு சாக்லெட் சாப்பிடுவது நல்லது, அதே போல் இரவு தூங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு சாக்லேட் எடுத்துக் கொள்வதும் செரிமானத்திற்கு சிறந்தது.
- சாக்லேட்டை குழந்தைகளுக்கு கொடுப்பதால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது. அனால் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
- சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாக்லெட் சாப்பிட்டவுடன் வாயை நன்கு கொப்பளித்து சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதின் மூலம் நமது பற்களை பாதுகாக்க முடியும்.