பழங்கள் கனவில் வந்தால்
கனவு என்பது எல்லோருக்கும் பொதுவானது. தூக்கத்தில் பல்வேறு விதமான கனவுகள் ஒவ்வொரு நாளும் தூக்கத்தில் வரும். அவற்றில் சில விடை தெரியாத கனவுகள் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த கனவு வந்தது, இதற்கு அர்த்தம் என்ன என்று தெரியாமல் குழம்பி போவோம். அவற்றில் ஒன்றுதான் பழங்கள் பற்றிய கனவு. அப்படி பல்வேறு விதமான பழங்கள் கனவில் வந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.
1. பழங்கள் கனவில் வந்தால் நல்ல சகுனமாகும். நமக்கு ஏற்பட்ட தடைகள் விலகும் என்று அர்த்தம்.
2. பழங்களை மற்றவர்களுக்கு நீங்கள் கொடுப்பது போல கனவு கண்டால் உங்களின் சந்தோஷத்தை பங்கு போட இன்னொரு நபர் வந்து கொண்டு இருக்கிறார் என்று அர்த்தம்.
3. பழங்களை வெட்டுவது போல் கனவு வந்தால், மனதில் இருந்து வந்த தேவை இல்லாத குழப்பங்களும், பிரச்சனைகளும் இருந்த இடம் தெரியாமல் மறைய போகிறது என்று அர்த்தம்.
4. நாவல் பழம் கனவில் வந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். பணம், புகழ், செல்வம், செல்வாக்கு உயரும் என்று அர்த்தம்.
5. நாவல் பழத்தை பறிப்பது போல கனவு கண்டால், உங்கள் மனதில் நினைத்து இருந்த காரியங்கள் சில தடைகளுக்கு பிறகு நடக்கும் என அர்த்தம்.
6. ஆரஞ்சு பழம் கனவில் வந்தால் எதிர்பாராத பொருள் இழப்பு ஏற்படும் என்று பொருள்.
7. ஆரஞ்சுப் பழத்தை கனவில் கண்டால் எதிர்பாராத பொருள் இழப்பு ஏற்படலாம். நோய் அல்லது விபத்தினால் காயம் உண்டாகலாம்.
8. கொய்யா பழம் கனவில் வந்தால் மிகவும் நல்லதாகும்.
9. கொய்யா பழம் சாப்பிடுவது போல் கனவு வந்தால் நோய்கள் விலகும். தொழில் மேன்மை அடையும் என்று அர்த்தம்.
10. பழங்கள் நிறைந்த செடி அல்லது மரம் உங்கள் கனவில் வந்தால் புதிய சொத்து சேர்க்கையும், புது வாரிசும் உண்டாகும் என்று அர்த்தம்.
11. பழங்கள் உள்ள மரம் கனவில் வந்தால் நீங்கள் ஆரம்பிக்கும் செயல்களில் நல்ல பலன்கள் உண்டாகும் என்று அர்த்தம்.
12. மாதுளை பழத்தை சாப்பிடுவது போல கனவு வந்தால் கெட்ட சம்பவங்கள் நடைபெற போகிறது என்று அர்த்தம்.
13. வாழைப்பழம் கனவில் வந்தால் உங்களுக்கோ, உங்கள் மகன் அல்லது மகளுக்கோ அழகான பெண் குழந்தை பிறக்கலாம் என்று அர்த்தம்.
14. திராட்சைப்பழத்தை கனவில் கண்டால் மனதிலும், உடலிலும் புது உற்சாகம் ஏற்படும் என்று அர்த்தம்.
15. பழங்களை கனவில் கண்டால் நல்ல சந்தர்ப்பம் ஒன்று உங்களைத் தேடி வரும் என்று அர்த்தம்.
16. கிவி பழத்தை கனவில் கண்டால் மனச்சோர்வு நீங்கி புத்துணர்வு பெற வேண்டும் என்று அர்த்தம்.
17. ஈ மொய்த்த பழங்கள் கனவில் வந்தால் செய்யும் வேலைகளில் மோசமான முடிவுகள் ஏற்படும் என்று அர்த்தம்.
18. பலாப்பழம் கனவில் வந்தால் பெரிய அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம்.
19. சீதாப்பழம் கனவில் வந்தால் ஆன்மிக எண்ணங்கள் அதிகம் தோன்ற போகிறது என்று அர்த்தம்.