தனுசு ராசி பொது பலன்கள் – தனுசு ராசி குணங்கள்

தனுசு ராசி குணங்கள்

தனுசு ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். தனுசு ராசியில் மூலம், மற்றும் பூராடம் நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும், உத்திராடம் நட்சத்திரத்தின் 1-ம் பாதமும் இதில் அடங்கியுள்ளன. இந்த ராசி 12 ராசிகளில் உபயராசியாகும். பொன்னிற மஞ்சள் நிறமுடைய இந்த ராசி ஒரு ஆண் ராசியாகும். இரவில் வலுப்பெற்றிருக்கும். குருவை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்கள் எந்த ஒரு விஷயத்தையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவார்கள். எந்த ஒரு விஷயத்திலும், தொடர்ந்து போராடி வெற்றி பெறுவார்கள்.

தனகாரகரான குருவின் ராசியில் இவர்கள் பிறந்திருப்பதால், பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். ஏனெனில், இவர்களுக்கு பணத்தைவிட மனம்தான் பெரிதாக இருக்கும். நட்புக்கும் குணத்துக்கும் மட்டுமே மரியாதை தருவார்கள். மிகப் பெரிய செல்வந்தரே ஆனாலும், இவர்களை அவமரியாதை செய்தால் அவரை அறவே ஒதுக்கி விடுவார்கள். சிறு வயதில் எதிர்பாராத கண்டங்கள் ஏற்பட்டாலும் பூரண ஆயுளுடன் பெரும்பாலும் வாழ்வார்கள். எல்லோருக்குமே மரியாதை கொடுப்பார்கள். கள்ளம் கபடமின்றி அனைவரிடமும் ஆத்மார்த்தமாகப் பழகும் சுபாவம் கொண்டவர்கள்.

தனுசு ராசி குணநலன்கள்

பெரும்பாலும் இந்த ராசியில் பிறந்தவர்கள், நல்ல உயரமும் கூர்மையான மூக்கும், கனிவான பார்வையும் கொண்டு இருப்பார்கள். இந்த ராசிக்காரர்களில் பெரும்பாலோர் நல்ல உயரமாகவே இருப்பார்கள். நடக்கும் போதும், நிற்கும்போதும் ஒரு பக்கம் சாய்ந்திருப்பார்கள். பேசும் போதும் சத்தமாக பேசும் குணம் படைத்தவர்கள் என்பதால் இவர்கள் பேசினால் மற்றவர் பார்வைக்கு கட்டளையிடுவது போல இருக்கும்.

தனுசு ராசிக்கு அதிபதியான குருவை கோதண்ட குரு என்றும் அழைப்பார்கள். எனவே, குறுக்கிடும் போராட்டாங்களால் அவ்வப்போது சந்தோஷத்தை இழந்து நிற்பார்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள், பொதுவாகவே பல சாதனையை செய்யக் கூடியவர்கள். தற்பெருமை அதிகம் உடையவர்கள். எதிர்காலத்தில் நடக்கப் போவதை கூட முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவராக இருப்பார்கள். சுயநலம் பாராமல் எதையும் துணிந்து செய்வார்கள். இவர்களுக்கு பொய் பேசுபவர்களையும், தீய பழக்க வழக்கம் உள்ளவர்களையும் கண்டால் பிடிக்காது. இவர்களுக்கு கோபம் வந்தால் எதிரில் யாரும் நிற்க முடியாது. சுறுசுறுப்பாக எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிப்பார்கள்.

கள்ளம் கபடமின்றி எல்லோரிடமும் ஒரே மாதிரியாக தான் பழகுவார்கள். இவர்களிடம் நயமாக பேசினால் எதையும் சாதித்து கொள்ளலாம். தெய்வ பக்தி, கருணை, தர்ம சிந்தனை அதிகம் கொண்டவர்கள். இந்த ராசியில் பிறந்தவர்களுக்குத், திருமணம் சற்று தாமதமாக அமைவது தான் நல்லது. சீக்கிரமாக மண வாழ்க்கை அமைந்தால் பலவகையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையின் உடல் நிலையும் அடிக்கடி பாதிப்படையும். இதனால் குடும்பத்தில் பிரிவும் துயரமும் ஏற்படும்.

தனுசு ராசிகார்ரகள் பெரும்பாலோனோர் வசதியான குடும்பங்களில் பிறந்தவர்களாக இருப்பார்கள். உடல் உழைப்பை அதிகம் விரும்ப மாட்டார்கள். இவர்களின் பொருளாதார நிலையை பொறுத்தவரை, சிறு வயதிலிருந்தே எல்லாவிதமான வசதி வாய்ப்புகளுடன் வாழ்வார்கள். பண நடமாட்டம் எப்பொழுதும் இவர்களுக்குத் தடையின்றி கிடைக்கும். புதிய வீடு மனை வாங்குவதிலும், பழுது பார்க்கவும் திட்டமிட்டு செயல்பட்டாலும் அதனால் கடன் வாங்கவும் நேரிடும். இவர்களுடைய வாழ்க்கை வசதிக்கு ஏற்றவாறு எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வார்கள்.

எடுத்து கொண்ட செயல்களில் தோல்வி அடைந்தால் எளிதில் துவண்டு விடுவார்கள். பண வரவுகளில் தடை ஏற்பட்டாலும் தங்கள் வாழ்க்கை வசதிகளை குறைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள். வெகுதூரம் நடப்பது கூட இவர்களுக்கு சிரமம் என்பதால் அதற்கேற்றவாறு வண்டி, வாகன வசதிகளை பெருக்கிக் கொள்வார்கள். இந்த ராசியில் பிறந்தவர்களுக்குப் புத்திர பாக்கியம் அதிகம் ஏற்படுவதில்லை. அதிக பட்சம் இரண்டு பிள்ளைகள் இருக்கலாம். எனினும், பிள்ளைகளால் சமுதாயத்தில் நற்பலன்களையே பெறுவார்கள்.

இவர்களிடம் எந்த ரகசியமும் இருக்காது. யாருக்கும் கீழ் படிந்து அடிமையாக இருக்க மாட்டார்கள். கெட்டவர்களையும் திருத்தி நல்வழிப்படுத்த இவர்களால் முடியும். இவர்களிடம் அன்பாகப் பழகினால் எதையும் சாதித்துக் கொள்ளலாம். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்புடையவர்களாதலால் அடிக்கடி ஏதாவது பிரச்சனையில் மாட்டிக் கொள்வார்கள். சிறு வயதிலிருந்தே தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் இவர்களிடம் நிறைந்து இருக்கும்.

இவர்களின் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்துக்கு அதிபதியாக சுக்கிரன் வருவதால், ரியல் எஸ்டேட், கார் வாங்கி விற்பது போன்ற தொழில்கள் உங்களுக்கு நல்ல லாபத்தை தரும். சயன, மோட்ச ஸ்தானமான 12-ம் இடத்துக்கு அதிபதி செவ்வாய் என்பதால், மகான்களின் ஜீவ சமாதிக்குச் சென்று வருவதிலும், சித்தர் வழிபாடுகளிலும் அதிக ஈடுபாடு இருக்கும்.

தனுசு ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம்

இறைவனே மனிதனாக வாழ்ந்து, போராடி, அதில் வெற்றி பெற்று, அந்த வெற்றிக்குப் பிறகு மகிழ்ச்சிக் கோலத்தில் இருக்கும் தலங்களுக்குச் சென்று வரும்போது உங்கள் வாழ்வின் அர்த்தம் புரியும். அதனால் அமைதியும் பெருகும். அப்படிப்பட்ட தலமே திருப்புட்குழி ஆகும். திருப்புள்குழி என்பதே மருவி திருப்புட்குழி என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தலம் ஜடாயு எனும் கழுகுக்கு ஸ்ரீராமர் தன் கைகளாலேயே ஈமக் கிரியைகள் செய்த தலமாகும். மேலும், ராவணனை வதம் செய்த வெற்றிக் கோலத்தில், விஜயராகவன் எனும் திருநாமத்தோடு அருள்பாலிக்கும் தலமாகும். ஜடாயுவுக்காக அந்த வெற்றிக் கோலத்திலேயே ஸ்ரீதேவி, பூதேவியோடு காட்சியளிக்கிறார். அந்த கோதண்டராமனான விஜயராகவன் கோதண்ட குருவில் பிறந்த உங்கள் வாழ்வை நிச்சயம் மாற்றுவார், மன நிம்மதியைத் தருவார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

banana halwa recipe

வாயில் வைத்த உடன் கரையும் வாழைப்பழ அல்வா

வாழைப்பழ அல்வா தேவையான பொருள்கள் வாழைப்பழம் – 3 பால் – 1 கப் சர்க்கரை – ½ கப் நெய் – ¼ கப் ஏலக்காய் தூள் – சிறிதளவு சோள மாவு...
நவமி திதி

நவமி திதி பலன்கள், நவமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

நவமி திதி நவ என்றால் ஒன்பது என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் ஒன்பதாவது நாள் நவமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் நவமியை சுக்கில...
spicy chickkan grevy

ஆந்திரா ஸ்டைல் ​​சிக்கன் கிரேவி

ஆந்திரா ஸ்டைல் ​​சிக்கன் கிரேவி தேவையான பொருட்கள் சிக்கன் – ½ கிலோ வெங்காயம் – 2  ( பொடியாக நறுக்கியது ) தக்காளி – 2 ( பொடியாக நறுக்கியது ) பச்சை...
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் விசாகம் நட்சத்திரத்தின் இராசி : துலாம், விருச்சிகம் விசாகம் நட்சத்திரத்தின் அதிபதி : குரு விசாகம் நட்சத்திரத்தின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பாதத்தின் இராசி அதிபதி (துலாம்) : சுக்கிரன் விசாகம்...
ஆட்டுக்கால் பாயா குருமா

ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி

ஆட்டுக்கால் பாயா ஆட்டுக்கால் கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் மிக பிரபலம். அதிலும் ஆட்டுகாலை வைத்து செய்யப்படும் பாயா டிபன் வகைகளுக்கு சிறந்த சைடுடிஷ் ஆகும். ஆட்டுகால் எப்படி செய்வது என்பதை பின்வருமாறு பார்ப்போம். ஆட்டுக்கால்...
வைகாசியில் பிறந்தவர்களின் குணங்கள்

வைகாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

வைகாசி மாதத்தில் பிறந்தவரா நீங்கள் பன்னிரண்டு மாதங்களில் இரண்டாவதாக வரும் தமிழ் மாதம் வைகாசியாகும். சூரியன் ரிஷப ராசியில் நுழையும் மாதமே வைகாசியாகும். வைகாசி மாதம் மங்களகாரமான காரியங்கள் செய்ய ஏற்ற மாதம் என...
பிறந்த தேதி பலன்

நீங்கள் இந்த தேதியில் பிறந்தவரா, உங்கள் பிறந்த தேதி பலன்கள் இதோ

பிறந்த தேதி பலன்கள் ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதிரியான குணநலன்கள் இருக்கும் என்பது போல், குறிப்பிட்ட எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கும் குணநலன்கள் மாறுபடும். அதன்படி அவர்களின் செயல்பாடும், பலன்களும் அமையும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.