மகர ராசி பொது பலன்கள் – மகர ராசி குணங்கள்

மகர ராசி குணங்கள்

மகர ராசியின் ராசி அதிபதி சனி பகவான் ஆவார். உத்திராடம் நட்சத்திரத்தின் 2, 3, 4 ஆம் பாதங்களும், திருவோணம் நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும், அவிட்டம் நட்சத்திரத்தின் 1, 2 ஆம் பாதங்களும் மகர ராசியில் அடங்கியுள்ளன. கால புருஷனின் அங்க அமைப்பில் இரண்டு முழங்கால்களையும் குறிக்கும் நான்காவது சர ராசி மகர ராசியாகும். இவர்கள் நல்ல வாக்கு சாதுர்யம் படைத்தவர்கள் என்பதால் பேச்சில் தங்களுடைய சாமர்த்தியத்தை வெளிப்படுத்தி எதையும் சாதிப்பார்கள். இவர்கள் வெகுளித்தனமான வெள்ளை மனம் கொண்டவர்கள்.

மகர ராசி

மகர ராசியில் பிறந்தவர்கள் நடுத்தர உயரம் கொண்டவர்கள். புருவங்கள் அடர்ந்து வளைந்து காணப்படும். காதுகள் நீண்டும், தோள்கள் விரிந்தும் அமைந்திருக்கும். எப்பொழுதும் ஆழ்ந்த சிந்தனையுடனே கவலை தேய்ந்த முகத்துடன் இருப்பார்கள். கள்ளம் கபடமில்லாத உள்ளம் கொண்ட இவர்கள் கருத்துகளை கூறும்போது அழுத்தம் திருத்தமாக பேசுவார்கள். பேச்சில் முன்கோபமும், உறுதியும் அவ்வப்போது வெளிப்படும். தன்னை நம்பி வந்தவர்கள் நண்பர்களானாலும் சரி விரோதிகளானாலும் சரி ஆதரித்து ஆறுதல் கூறி உதவி செய்யும் உயர்ந்த பண்பு கொண்டவர்கள்.

மகரம் என்பது கடல் வீடு. கடலின் அலைகள் எப்படி அடுத்தடுத்து வந்துகொண்டு இருக்கின்றனவோ, அது போலவே இவர்கள் மனதிலும் புதுப்புது எண்ணங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். எவ்வளவு சோதனைகள் வந்தாலும் சோர்வு அடையமாட்டார்கள். வாழ்க்கையில் தோல்வி அடைந்து அதலபாதாளத்துக்குச் சென்றாலும், மறுபடியும் வீறுகொண்டு எழுந்து நிற்பார்கள். இவர்களின் ராசிக்கு அதிபதியான சனி பகவான் இரக்க சுபாவத்தை அதிகம் கொடுக்கும் கிரகம் என்பதால் எதிலும் மனிதநேயத்தோடு செயல்பட விரும்புவார்கள். சிரிக்க சிரிக்கப் பேசும் சுபாவமும் கூட இவர்களிடத்தில் காணப்படும்.

மகர ராசிக்காரர்கள் மிகவும் ஈகை குணம் கொண்வர்கள். எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்த மாட்டார்கள். மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டவும் மாட்டார்கள். இவர்களுக்குப் பிடிவாத குணம் அதிகம் இருக்கும். மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். எந்த காரியத்தில் இறங்கினாலும் அதில் இரண்டு விதமான ஆதாயங்களை எதிர்பார்ப்பார்கள்.

மகர ராசியில் பிறந்தவர்களுக்குப் பண வரவுகள் தேவைக்கேற்ப அமையும். உழைப்பாற்றலால் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். வரவேண்டிய பணவரவுகள் தாமதமாக இருந்தாலும் இவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விடுவார்கள். சுகத்தையும், அமைதியை அனுபவிக்க நினைத்த போதிலும் எதையும் அனுபவிக்க முடியாமல் பொருளீட்ட வேண்டியிருக்கும். பூர்வீக சொத்துக்கள் இருந்தாலும் இவர்களுக்குப் பெரும்பாலும் பயன்படாமல் போகலாம். செலவு செய்வதில் தயக்கம் காட்ட மாட்டார்கள். சேமிக்கும் பழக்கம் என்பது இவர்களிடம் குறைவாகவே இருக்கும்.

மகர ராசிகார்களுக்கு குடும்பத்தின் மேல் அதிக பாசம் இருக்கும். பெற்றவர்கள், பிள்ளைகள் மேல் அதிக அன்பு கொண்டிருப்பார்கள். தான் கஷ்டபட்டாலும் மற்றவர்கள் மனம் கோணாத அளவுக்கு நடந்து கொள்வார்கள். இவர்கள் கடுமையான உழைப்பாளிகள். இவர்கள் அவ்வளவு எளிதில் யாருக்கும் வாக்கு கொடுக்க மாட்டார்கள். வாக்கு கொடுத்துவிட்டால் அதை எப்படியாவது முடித்து கொடுத்து விடுவார்கள். மகர ராசிகார்கள் செய்யும் தொழிலை தெய்வமாக கருதுவார்கள். எந்த துறையில் ஈடுபட்டாலும் அதில் முன்னேற்றமும், வெற்றியும் பெறுவார்கள். இவர்களுக்கு வாழ்வின் முற்பகுதியை விட பிற்பகுதி தான் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும்.

மகர ராசிக்கு 2-ம் இடமான தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்துக்கும் சனி அதிபதி என்பதால், அதிக அளவில் பணம் வைத்துக் கொண்டிருந்தாலும், திடீர் என்று ஏற்படும் செலவுகளுக்காகப் பணத்தைத் தேடுவார்கள். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை ஏற்ற இறக்கங்கள் இருக்கவே செய்யும். வாழ்க்கைத் துணையைப் பற்றிச் சொல்லும் 7-ம் இடத்துக்கு அதிபதியாக சந்திரன் வருகிறார். உங்களுடைய வாழ்க்கைத் துணை ரசனை மிக்கவராக இருப்பார். இவர்களை விட நிதானமாக யோசித்துச் செயல்படுபவராக இருப்பார். இவர்களின் வேகமான செயல்பாடுகளை விவேகத்துடன் சமாளிப்பார். வாக்கு சாதுர்யம் பெற்றிருப்பார்.

இவர்கள் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் குடும்பத்தின் மீது அதிக பாசம் வைத்து ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். மண வாழ்க்கையை பொறுத்தவரை இவர்கள் எப்படி நினைக்கிறார்களோ அப்படியே நடக்கும். இவர்கள காதல் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்புகள் மிக அதிகம். எனினும், பெரும்பாலும் நல்ல வாழ்க்கைத் துணையே அமையும். இந்த ராசியில் பிறந்தவர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டவர்கள். எத்தனை துன்பங்கள், துயரங்கள் ஏற்பட்டாலும் கஷ்டப்பட்டாவது வாழ்வை சிறப்பாக அமைத்துக் கொள்வார்கள்.

மகர ராசிக்கு 10-ம் இடத்துக்கு அதிபதியாக சுக்கிரன் வருவதால், வாழ்க்கையின் மத்தியப் பகுதியில் சொந்தத் தொழிலில் இறங்குவீர்கள். கன்ஸ்ட்ரக்‌ஷன் தொழிலில் ஈடுபட்டு லாபம் சம்பாதிப்பீர்கள். எங்கே பணமும் புகழும் சேர்ந்து கிடைக்குமோ அங்கே வேலை செய்யவே விரும்புவார்கள். உயர்ந்த பதவி யோகம் உண்டு. சுக்கிரனின் ஆதிக்கம் காரணமாக கலைத் துறையினருடன் எப்போதும் தொடர்பு கொண்டிருப்பார்கள். மகர ராசிக்கு 12-ம் இடத்துக்கு அதிபதியாக குரு இருப்பதால், இவர்களின் செலவுகள் ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் இருப்பது இவர்களுக்கு நன்மை தருவதாக அமையும்.

மகர ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம்

சனியின் பூரண ஆதிக்கத்தில் பிறந்த இவர்களுக்கு திருமாலிடம் மாறாத பக்தி இருக்கும். சிவாம்சத்தின் சாரமாக சனி இருந்தாலும், பெருமாளை வழிபடுவதையே மிகவும் விரும்புவார்கள். கடல் என்பது சனி பகவானின் ஆதிக்கத்துக்கு உட்பட்டது. மகரத்தை மகரக் கடல் என்றே அழைப்பார்கள்.

பாற்கடலில்தான் மகாவிஷ்ணு சயனக் கோலம் கொண்டிருக்கிறார். எனவே, சயனக் கோலத்தில் மகா விஷ்ணு அரங்கநாதப் பெருமாளாக சேவை சாதிக்கும் கோயில்கள் அனைத்தும் இவர்கள் வழிபட உகந்தவை ஆகும். குறிப்பாக, திருக்கடல்மல்லை என அழைக்கப்படும் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாளை வழிபட, சிறப்பான பலன்கள் உண்டாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் கடக லக்னத்தின் அதிபதி சந்திரன் ஆவார். கடக லக்னத்தில் பிறந்தவர்கள் உடலாலும் மனதாலும் தூய்மையான உள்ளம் கொண்டவர்கள். இவர்கள் அழகான மற்றும் கவர்ச்சியான உடல் அமைப்பை கொண்டவர்கள். வாக்கு...
தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி செய்முறை

தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி பொதுவாக எல்லோருக்கும் பிடித்த ஒரு உணவு என்றால் அது பிரியாணிதான். அதிலும் தலப்பாக்கட்டு பிரியாணியின் சுவையும், மணமும் ஆளை சுண்டி இழுக்கும். அப்படிபட்ட தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணியை வீட்டில் எப்படி...
ஆனியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் தமிழ் மாதங்களில் மூன்றாவதாக வருவது ஆனி மாதமாகும். ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகள், மேலும் மிகுந்த பொறுமைசாலிகள். இவர்கள் சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். இவர்களுக்கு சிந்திக்கும்...
சதுர்த்தசி திதி

சதுர்த்தசி திதி பலன்கள், சதுர்த்தசி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

சதுர்த்தசி திதி சதுர்த்தச என்பதற்கு பதினான்கு என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 14 வது நாள் சதுர்த்தசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் சதுர்த்தசியை...
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் அனுஷம் நட்சத்திரத்தின் இராசி : விருச்சிகம் அனுஷம் நட்சத்திரத்தின் அதிபதி : சனி அனுஷம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : செவ்வாய் அனுஷம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : லக்ஷ்மி அனுஷம் நட்சத்திரத்தின் பரிகார...
இராகு கேது தோஷம்

இராகு கேது தோஷம் என்றால் என்ன? இராகு கேது தோஷ பரிகாரங்கள்

இராகு கேது தோஷம் ராகு மற்றும் கேது ஜோதிடத்தில் நிழல் கிரகங்கள் என கூறப்படுகின்றன. ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாக இருந்தாலும் மிகவும் வலிமை வாய்ந்தவையாகும். ஒருவருடைய ஜாதகத்தில் ராகு மற்றும் கேது...
தண்ணீர்

ஸ்லிம்மான அழகிய உடல் அமைப்பை பெற சில எளிய டிப்ஸ்

அழகான உடல் அமைப்பை பெற எளிய டிப்ஸ்  உடல் எடை அதிகரிப்பால் இன்று பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாம் அனைவரும் எதிர்ப்பார்ப்பது மெலிந்த அழகான உடல் அமைப்பை தான். நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.