வெந்தயக்கீரை மருத்துவ பயன்கள்

வெந்தய கீரை

வெந்தயம் கீரை மற்றும் வெந்தயம் உணவுப்பொருளாகவும், மருத்துவ பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயம் தமிழர்களின் சமையலில் தவறாமல் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருளாகும். இதன் செடி கீரையாகவும், இதன் விதைகளான வெந்தயம் உணவுகளில் சுவையூட்டியாகவும் வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றிற்கான மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

வெந்தயக்கீரை மருத்துவ குணங்கள்

வெந்தயக்கீரை வளரியல்பு

சாதாரணமாகச் சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயத்தின் இலை பகுதிதான் வெந்தயக்கீரை . இது சத்து நிறைந்த கீரையாகும். வெந்தயம் விதைகளின் மூலம் அதன் கீரை பயிரிடப்படுகிறது. இது மூன்று மாதங்களில் பூத்துக் காய்த்துப் பலன் தந்துவிடும். இதை கீரையாகப் பயன்படுத்த, பூக்கும் முன்பே வெந்தயச் செடியைப் பிடுங்கி விட வேண்டும். வெந்தயச் செடி இளம் பச்சை நிறம் கொண்டது.

வெந்தயக்கீரை சுமார் இரண்டரை அடி உயரம் வளரும். வீட்டுத் தோட்டத்திலும் தொட்டியிலும் இதை மிக எளிதாக வளர்க்க முடியும். வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல்வேறு முறைகளில் சமைத்து உண்ணலாம்.

வெந்தயக்கீரையில் உள்ள சத்துக்கள்

வெந்தய கீரையில் புரதச்சத்து, கொழுப்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து, சோடியம், உயிர் சத்துக்கள், நிக்கோடினிக் அமிலம், கயோலின் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் நிறைந்து உள்ளது.

வெந்தயக்கீரையின் மருத்துவப் பயன்கள்

1. வெந்தயக் கீரை ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தை சுத்திகரிக்கிறது. சொறி, சிரங்கு வராமல் தடுக்கிறது.

2. வெந்தயக் கீரையை தேனுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

3. வெந்தயக் கீரையை அரைத்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப் புண், வாய்ப்புண் ஆறும்.

4. மூல நோய், குடல் புண் போன்ற நோய்களுக்கு வெந்தய இந்தக் கீரை மிக சிறந்த மருந்தாகும். மேலும் வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.

5. வெந்தயக் கீரை ஜீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டும்.

6. வெந்தயக் கீரையுடன் சீமைப்புள், அத்திப்பழம், திராட்சை ஆகியவை சேர்த்துக் கஷாயமிட்டு தேன் கலந்து சாப்பிட்டால் மார்பு வலி, மூக்கடைப்பு போன்ற நோய்கள் தீரும்.

7. வெந்தய கீரையை அத்திப்பழத்துடன் சேர்த்துக் கரைத்துக் கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் அவை விரைவில் பழுத்து உடையும்.

8. வெந்தயக் கீரையை உண்டு வந்தால் சிறுநீர் சம்பந்தப்ட்ட கோளாறுகள் தீரும். நரம்புகளை பலப்படுத்தும். வயிற்றுக்கு கட்டி, உடல் வீக்கம், சீத பேதி, குத்திருமல், வயிற்று வலி போன்ற அனைத்தும் குணமாகும்.

9. வெந்தயம், ஓரிதழ் தாமரை, விடத்தலை வேர், சுக்கு, வால் மிளகு வகைக்கு 20 கிராம் எடுத்து கஷாயம் செய்து சாப்பிட்டு வர உடல் அரிப்பு நீங்கும்.

10. முகம் பளபளப்பாக இருக்க வெந்தயத்தை அரைத்து முகத்தில் பேஸ்பேக் போடலாம். பிறகு 10 நிமிடம் கழித்து கழுவவும். இப்படி சில நாட்கள் செய்து வர முகம் பளிச்சிடும்.

11. வெந்தயக் கீரையை மற்றும் வெள்ளைப் பூசணிக்காயை சாம்பாரில் சேர்த்துச் சாப்பிட்டால் பெருத்த உடல் இளைக்கும்.

12. வெந்தய கீரையை வதக்கி அதனுடன் பாதாம் பருப்பு, கசகசா, கோதுமை ஆகியவற்றைச் சேர்த்துப் பால்விட்டு அரைத்து நெய்விட்டுக் கிளறி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலிமையும், தோல் பளபளப்பாகும்.

வெந்தயக்கீரை நன்மைகள்

13. வெந்தயக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குறைக்கும் ஆற்றல் உள்ளது.

14. வெந்தயக் கீரையை அரைத்துச் சூடுபடுத்தி வீக்கங்கள் மீது பூசினால் வீக்கம் குறையும். இவ்வாறு செய்வதால் தீப்புண்களும் குணமாகும்.

15. வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

16. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காசநோய் குணமாகும். இந்தக் கீரை வயிறு பிரச்சனைகளையும் குணப்படுத்துகின்றது.

17. வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். அத்துடன் வெந்தயக் கீரையை உண்டால் குடல் புண்களும் குணமாகின்றன.

18. வெந்தயக்கீரையை வெண்ணெய் சேர்த்து வதக்கி உண்டால் பித்தக் கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும். உடற்சூடும், வறட்டு இருமலும் குணமாகும்.

19. வெந்தயக் கீரை ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. மேலும் சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வை கோளாறுகளைச் சரி செய்கிறது. மலம் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலை வெந்தயக்கீரை குணப்படுத்துகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

திருமண சடங்குகள்

திருமணத்தின்போது பால், பழம் கொடுப்பது எதற்காக?

திருமணத்தின்போது பால், பழம் கொடுப்பது எதற்காக? திருமணம் என்றாலே பல்வேறு சடங்குகள், சம்ப்ரதாயங்கள் நிறைந்திருக்கும். ஒவ்வொரு திருமணத்திலும் அவரவர் குடும்ப வழக்கதிற்கு ஏற்ப சடங்குகள் வேறுபடும். குறிப்பாக இந்து மத திருமணத்தில் பல வகையான...
Brain Games

Brain Teasers with Answers | Tamil Puzzles with Answers | Tamil Puthirgal

மூளைக்கு வேலை கொடுக்கும் வினா விடைகள்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...
சிக்கன் சமோசா

சிக்கன் சமோசா செய்வது எப்படி

சிக்கன் சமோசா செய்வது எப்படி தேவையான பொருள்கள் சிக்கன் – 250 கிராம் (எலும்பில்லாதது) இஞ்சி – 1 துண்டு ( பொடியாக நறுக்கியது ) எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு மைதா...
பிரதமை திதி பலன்கள்

பிரதமை திதி பலன்கள், பிரதமை திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

பிரதமை திதி அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு அடுத்த வரும் திதி பிரதமை திதியாகும். பிரதமை என்பது வடமொழி சொல்லாகும். இதற்கு முதலாவது என்று பொருள். அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமையை சுக்கில பட்ச பிரதமை...
ஓரிதழ்த்தாமரை மருத்துவ பயன்கள்

ஓரிதழ்த்தாமரை மருத்துவ பயன்கள்

ஓரிதழ்த்தாமரை ஓரிதழ்த்தாமரை குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. வயல்வெளிகள், பாழ் நிலங்கள், களர் நிலங்களிலும் சாதாரணமாகக் வளரும். ஈரப்பதம் மிக்க இடங்களில் வளரும். இது நீளமான இலைகளை உடையது. ஓரிதழ்த்தாமரை இலைகள் மாற்றடுக்கில் அமைந்தவை. இது...
சிறுநீரக கற்களை கரைக்க

சிறுநீரகத்தில் கல் வர காரணம் ? வராமல் தடுப்பது எப்படி ?

சிறுநீரகத்தில் கல் வர என்ன காரணம்? முறையற்ற உணவுப்பழக்க வழக்கத்தாலும் மாறிவரும் வாழ்வியலாலும் மனித உடலின் கழிவுகள் வெளியேறும் பாதையில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சிறுநீரகக் கல் பிரச்னை இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.  சிறுநீரகம்...
சிவகரந்தை நன்மைகள்

சிவக்கரந்தை மூலிகையின் மருத்துவ நன்மைகள்

சிவக்கரந்தை சிவக்கரந்தை மருத்துவ குணம் அதிகமுள்ள அரியவகை மூலிகைச் செடியாகும். இது நல்ல வாசனை கொண்டது. சிவகரந்தை கல்லீரல் நோய்கள், இருமல், மூலம், அஜீரணம், தோல் நோய்கள், காமாலை போன்றவற்றிற்கு சிறந்தது. நோய் எதிர்ப்பு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.