வசியப் பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

வசியப் பொருத்தம் என்றால் என்ன?

வசியப் பொருத்தம் என்பது கணவன், மனைவி இருவருக்கும் வசியத்தை ஏற்படுத்தி வாழ்நாள் முழுவதும் பூரண அன்புடன், ஒருவருக்கொருவர் இன்பமுடன் வாழ்வார்களா என்பதை அறிய பார்க்கப்படும் ஒரு பொருத்தம் ஆகும். கணவன், மற்றும் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி, அன்புடன் இரண்டறக் கலக்கும் நிலையை அடைய வசியப் பொருத்தம் சிறப்பாக அமைய வேண்டியது அவசியம்.

வசிய பொருத்தம் அமைந்த தம்பதிகள் வாழ்நாள் முழுவதும் அன்புடனும், நிம்மதியுடனும் வாழ்வார்கள். தம்பதிகளுக்குள் அலட்சியம், மந்தம், சலிப்பு போன்றவை ஏற்படாது. வசிய பொருத்தம் இருந்தால் ஒருவருக்கொருவர் வசியமாகி, எந்த சந்தர்ப்பத்திலும் ஒருவரை மற்றவர் விட்டுக் கொடுக்காமல் பூரண அன்புடன் இனிய வாழ்க்கை நடத்துவார்கள்.

வசியப் பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

ஜோதிட சாஸ்திரத்தின்படி மனதை ஆள்வது சந்திரன் என்பதாலும், சந்திரன் ராசியதிபதி என்பதாலும், இந்த வசியப் பொருத்தத்தின் படி திருமணம் செய்தால் மனப்பொருத்தம் இல்லாத தம்பதிகள் கூட நாளடைவில் ஒருவரை ஒருவர் பிரிக்க முடியாத அன்பும், பிணைப்பும், உறவும் கொண்டு தமது வாழ்நாள் முழுவதும் ஆனந்தமான வாழ்க்கை வாழ்வார்கள். இதற்காகத்தான் வசியப் பொருத்தம் பார்க்கப்படுகிறது.

வசிய பொருத்தம் எவ்வாறு பார்ப்பது?

ஒவ்வொரு ராசியும் அதற்கு ஏற்றார்போல இருக்கும் வசியம் உள்ள ராசியுடன் மட்டும் தான் பொருந்தும். ஒவ்வொரு ராசிக்கும் ஒரு குறிப்பிட்ட ராசி வசியப் பொருத்தம் ஆகும். பெண்ணின் ராசி எந்த மாதிரியான ஆணின் ராசியுடன் பொருந்தும் என்ற அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அவை :

1. மேஷம் – சிம்மம், விருச்சிகம்
2. ரிஷபம் – கடகம், துலாம்
3. மிதுனம் – கன்னி
4. கடகம் – விருச்சிகம், தனுசு
5. சிம்மம் – மகரம்
6. கன்னி – ரிஷபம், மீனம்
7. துலாம் – மகரம்
8. விருச்சிகம் – கடகம், கன்னி
9. தனுசு – மீனம்
10. மகரம் – கும்பம்
11. கும்பம் – மீனம்
12. மீனம் – மகரம்.

பெண் ராசிக்கு ஆண் ராசி வசியம் என்றால் வசியப் பொருத்தம் உண்டு.
பெண் ராசிக்கு ஆண் ராசி வசியம் இல்லை என்றால் வசியப் பொருத்தம் இல்லை.
பெண் ராசிக்கு ஆண் ராசி வசியமானால் உத்தமம்.
ஆண் ராசிக்கு பெண் ராசி வசியமானால் மத்திமம்.

வசிய பொருத்தம் இல்லையென்றால் திருமணம் செய்யலாமா?

பொதுவாக பெண் ராசி மற்றும் நட்சத்திரத்தை வைத்தே பொருத்தம் பார்க்கபடுகிறது. பத்து பொருத்தங்களில் மற்ற எல்லா பொருத்தங்களும் பொருந்தி வசியப் பொருத்தம் மட்டும் இல்லை என்றால் திருமணம் செய்யலாம் என்பது பொதுவான கருத்து. வசீகரிக்கும் சுக்கிரனும், மனதுக்கு அதிபதியான சந்திரனும் அவரவர்களின் ஜாதகத்திற்குரிய புத்தி ஸ்தானமான 5ம் இடத்தை பொறுத்து அமைகிறது.

அதே போல ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானத்தையும், ஆயுள்காரகனாகிய சனி பகவான், லக்னாதிபதி பலம் ஆகியவற்றை கொண்டுதான் ஆயுளை தீர்மானிக்க முடியும். அது போல வசியப் பொருத்தம் ஆனது, ஜோதிட சாஸ்திரப்படி ஒரு பொது விதியே தவிர முக்கியம் என்று இல்லை. அதனால் வசிய பொருத்தம் இல்லாவிட்டாலும் திருமணம் செய்யலாம்.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் அனுஷம் நட்சத்திரத்தின் இராசி : விருச்சிகம் அனுஷம் நட்சத்திரத்தின் அதிபதி : சனி அனுஷம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : செவ்வாய் அனுஷம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : லக்ஷ்மி அனுஷம் நட்சத்திரத்தின் பரிகார...
கண் திருஷ்டி நீங்க

உங்கள் குழந்தைக்கு கண் திருஷ்டி நீங்க செய்ய வேண்டியவை

உங்கள் குழந்தைக்கு திருஷ்டி படாமல் இருக்க பொதுவாக குழந்தைகளுக்கு திருஷ்டி சுற்றி போட... கீழ்கண்ட முறைகளை பெரியோர்கள் தொன்று தொட்டு கடைபிடித்து வந்து உள்ளனர். அவைகள் பின்வருமாறு... 1. ஒருகைப்பிடி உப்பை எடுத்து கையை நன்றாக...
ஐப்பசியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள் ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் தெய்வ பக்தி அதிகம் கொண்டவர்கள். தேசபக்தியும் அவர்களிடம் நிறைந்து காணப்படும். ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் மற்றும் அறிவில் சிறந்தவர்கள் மேலும் மிகுந்த பொறுமைசாலிகள்....
சுறா புட்டு செய்வது எப்படி

சுவையான சுறா புட்டு செய்வது எப்படி

சுவையான சுறா புட்டு செய்வது எப்படி கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சுறா புட்டு மிக சிறந்த உணாவாகும். குழந்தை பெற்ற தாய்மார்கள் சுறா புட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால்...
HOW TO MAKE COCONUT POLI

சுவையான தேங்காய் போளி

தேங்காய் போளி தேவையான பொருட்கள் வெல்லம் – 1 கப் மைதா மாவு – 1 கப் மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன் துருவிய தேங்காய் – 1 கப் நெய் –...
இரத்தத்தை சுத்தப்படுத்துவது எப்படி

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்யும் வழிகள் நம் உடலில் நடைபெறும் அனைத்து செயல்களுக்கும் இரத்தம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இரத்தம் சுத்தமாக இருந்தால் தான் உடலின் செயல்பாடுகள் சரியாக நடக்கும். இரத்தம் சுத்தமில்லாமல்...
புரட்டாசி மாத வழிபாடு

புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி?

புரட்டாசி சனிக்கிழமை விரதம் தமிழ் மாதங்கள் மொத்தம் 12. அதில் பெருமாளுக்கு உகந்த மாதம் என்றால் அது புரட்டாசி மாதம் தான். புரட்டாசி மாதம் தமிழ் மாதங்களில் ஆறாவதாக இருக்கும் மாதம் ஆகும். புரட்டாசி...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.