சீத்தாப்பழம்
சீத்தாப்பழம் அல்லது சீதாப்பழம் அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகளை தாயகமாகக் கொண்டது. சீத்தாப்பழம் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும், அதனுள் உள்ள சதைப்பகுதி மிகவும் சுவையாக இருக்கும். மேலும் இப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக நிறைந்துள்ளது. இப்பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது மில்க் ஷேக் அல்லது ஸ்மூத்தி செய்தும் சாப்பிடலாம். ஒரு சிலருக்கு பால் பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். அப்படியானவர்கள் சீத்தாபழம் சாப்பிட்டு வந்தால் பால் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் சத்துக்கள் இதில் கிடைக்கும்.
சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, பட்டை, அனைத்துமே மருத்துவ பண்புகளை கொண்டது. சீத்தாப்பழத்தில்-நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக உள்ளன. சீத்தாப்பழம் ஆங்கிலத்தில் ‘Custard Apple’ என அழைக்கபடுகிறது.
சீத்தாபழம் வளரியல்பு
சீத்தா 18 அடிமுதல் 26 அடி உயரம் வரை வளரக்கூடியது .இது கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரம் வரை தான் வளரும் தன்மையுடையது. இலைகள் பச்சையாக எதிர்அடுக்கில் அமைந்திருக்கும் .அகலம் சிறிதாகவும் நீளம் அதிகமாகவும் இருக்கும்.சிறு கிளைகள் அதிகமாக இருக்கும். பூக்கள் முதலில் பச்சையாகவும் பின் மஞ்சள் நிறமாக மாறும்.
பூக்கள் தடிப்பான மூன்று இதழ்களைக் கொண்டிருக்கும்.பின் பிஞ்சுகள் விட்டு காயாக மாறும். காய்கள் ஆப்பிள் போன்று உருண்டையாக இருக்கும். ஆனால் மேல் தோல் சிறு சிறு அரைகள் போன்று அமைந்திருக்கும். காய் முற்றினால் சாம்பல் நிறமாக மாறும். பழத்தைப் பறித்தால் வெண்மையான சதை கொட்டைகளை மூடியிருக்கும். அந்த மிருதுவான பாகம் தான் சுவையாக இருக்கும்.
சீத்தாபழத்தின் வகைகள்
சீத்தாபழத்தில் நாட்டுசீத்தா, முள்சீத்தா, ராம்சீத்தா என முக்கியமான மூன்று வகைகள் உள்ளன. சாதாரண சீத்தா மற்றும் முள் சீத்தா பச்சை நிறத்திலும், ராம் சீத்தா இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும்.
சீத்தாப்பழத்தில் உள்ள சத்துக்கள்:-
சீத்தாப்பழத்தில் கலோரி – 94%, புரத சத்து – 2.51 கிராம், நார்ச்சத்து – 4.8 கிராம், இரும்பு சத்து – 0.43 மில்லி கிராம், கால்சியம் – 16 மில்லி கிராம்,சோடியம் – 9 மில்லி கிராம், பொட்டாசியம் – 247 மில்லி கிராம் போன்றவை அடங்கியுள்ளன.
சீத்தாப்பழத்தின் நன்மைகள்:-
இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும்
பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் இந்த பழத்தில் நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் நிலையாக இருக்கும்.
முகத்தில் கரும்புள்ளிகளை நீக்கும்
சீத்தாப்பழத்தை சாப்பிடுவதால் செரிமானம் ஏற்படும், மலச்சிக்கல் நீங்கும். சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பருக்கள் மேல் பூசிவர பருக்கள் பழுத்து உடையும். இதனால் சருமம் கரும்புள்ளிகள் நீங்கி பளபளபடையும்.
ஆரோக்கியமான சருமம் மற்றும் முடி
தலைமுடி மற்றும் சருமம் ஆரோக்கியமாக இருக்க சீத்தாப்பழம் உதவும். சீத்தாபழத்தில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது ஸ்கால்ப் மற்றும் சருமத்தின் ஈரப்பசையைப் பராமரிப்பதில் முக்கிய பங்கினை வகிக்கிறது. எனவே தவறாமல் சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வாருங்கள்.
பேன் மற்றும் பொடுகை ஒழிக்கும்
சீத்தாப்பழ விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். இதனால் பேன் மற்றும் பொடுகு ஒழியும்.
எடை அதிகரிக்கும்
எடை கூட வேண்டும் என நினைப்பவர்கள் சீத்தாபழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். சீத்தாபழத்துடன் தேன் சேர்த்து கலந்து குடித்து வர அதில் உள்ள அதிகப்படியான கலோரி, உடல் எடையை அதிகரிக்க உதவும்.
செரிமானத்தை அதிகரிக்கும்
சீத்தாப்பழத்தில் காப்பர் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது செரிமானத்திற்கு நல்லது. மேலும் இப்பழத்தை அடிக்கடி உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
முடி உதிர்வை கட்டுபடுத்தும்
சீத்தாப்பழ விதைகளை பொடியாக்கி, கடலைமாவு, எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.
எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாகும்
சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு மற்றும் பற்கள் உறுதியாகும். ஏனெனில் இதில் அதிகபடியான கால்சியம் நிறைந்துள்ளது.
ஆஸ்துமாவைத் தடுக்கும்
இப்பழத்தில் வைட்டமின் பி6 இருப்பதால், மூச்சுக்குழாயில் ஏற்பட்டுள்ள புண்களைக் ஆற்றும். மேலும் இது ஆஸ்துமா உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.
சிசுவின் ஆரோக்கியம் மேம்படும்
கர்ப்பிணிகள் சீத்தாப்பழத்தை சாப்பிட்டால், கருவில் வளரும் குழந்தையின் மூளை, நரம்பு மண்டலம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் போன்றவை வலிமையடையும். மேலும் இப்பழம் கருச்சிதைவு மற்றும் பிரசவ வலி நீண்ட நேரம் இருப்பதைத் தடுக்கும்.
மாரடைப்பு வராமல் தடுக்கும்
சீத்தாப்பழத்தில் மக்னீசியம் சத்து நிறைந்துள்ளதால், மாரடைப்பு வரும் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும் இது தசைகளை தளர்த்தி ரிலாக்ஸ் அடையவும் செய்யும். அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் பி6 இருப்பதால், இது ஹோமோசைஸ்டீன் சேகரிப்பைத் தடுத்து, இதய நோயில் இருந்து குறைக்கும்.
இதயத்தை பலபடுத்தும்
சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோயின் தீவிரத்தை கட்டுபடுத்தும்.
பக்க விளைவுகள்:-
1. இதில் சர்க்கரை அதிகமாக இருப்பதால் அதிகம் சாப்பிட கூடாது, நீரழிவு நோயாளிகள் இதை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.