கீழாநெல்லி மருத்துவ குணங்கள்

கீழாநெல்லி

கீழாநெல்லி என்பது ஒரு மருத்துவ குணமுடைய மூலிகை செடியாகும். இந்த செடி முழுவதும் மருத்துவப் பயன்பாடு கொண்டதாகும். இது வெப்பமண்டல பகுதிகளில் வளரும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்தது. கீழாநெல்லி செடி சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும். இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய் நெல்லி என அழைக்கபட்டது. பின்னர் பேச்சு வழக்கில் கீழாநெல்லி என அழைக்கபடுகிறது.

கீழாநெல்லி மருத்துவ நன்மைகள்

காலம் காலமாக தமிழர்கள் மஞ்சள் காமாலை நோய்க்கு இம்மூலிகையை பயன்படுத்தி வந்துள்ளனர். இன்றும் கீழாநெல்லி பல்வேறு நோய்கள் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கீழாநெல்லி மிகுந்த குளிர்ச்சி தன்மை கொண்டதாகும். இது இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்புச் சுவைகளைக் கொண்டது. கபத்தை தணித்து வாதத்தை அதிகரிக்கும். இதனை பச்சையாகக் கூட சாப்பிடலாம். ஆனால் லேசான கசப்பு சுவை கொண்டது.

கீழாநெல்லியின் வேறு பெயர்கள்

கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி, இளஞ்சியம், அவகதவாய், கீழ்க்காய், காதமாதாநிதி, மாலறுது, மாலினி, வித்துவேசரம், பூதாத்திரி, பெருவிரியகா, காமாலை நிவர்த்தி போன்ற பல பெயர்களால் கீழாநெல்லி அழைக்கபடுகிறது.

கீழாநெல்லியின் மருத்துவப் பயன்கள்

வழுக்கை மறையும்

சிலருக்கு இளம் வயதிலேயே முடி கொட்டி தலையில் வழுக்கை விழும். அப்படியானவர்கள் வழுக்கை தலையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தடவி வந்தால் வழுக்கை மறைந்து முடிகள் உருவாகும்.

தோல் நோய்களை குணமாக்கும்

கீழாநெல்லி இலை சிறிது எடுத்து அதனுடன் உப்பு சேர்த்து மையாக அரைத்து சொறி, சிரங்கு, அரிப்பு உள்ள இடங்களில் தடவினால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

மனஅழுத்தத்தை குறைக்கும்

கீழாநெல்லிவேர், நல்லெண்ணைய், கருஞ்சீரகம், சீரகம் இவை தலா 10 கிராம் அளவு எடுத்து பசும்பால் விட்டு அரைத்து கலக்கிக் காய்ச்சி வடிகட்டி தலைக்கு குளிக்கலாம். இதனால் உச்சி குளிர்ந்து மன அழுத்தத்தை குறைக்கும்.

பல வகை நோய்களை தீர்க்கும்

மஞ்சள் காமாலை, சீறுநீரக நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிறு சம்பந்தமான நோய்கள், காய்ச்சல், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், புரை, வீக்கம், ரத்தம் வடிதல் போன்ற நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் கீழாநெல்லி பயன்படுகின்றது.

சூட்டை குறைக்கும்

கீழாநெல்லியை அரைத்து பசும்பாலுடன் கலந்து காலை, மாலை என இருவேளை தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலின் சூடு தணிந்து உடல் குளிர்ச்சி பெறும்.

நீர் கடுப்பை சரியாக்கும்

நாள்பட்ட நீர் கடுப்பு நோயினால் அவதிப்படுபவர்கள் கீழா நெல்லி இலையுடன் கற்கண்டு சேர்த்து மைப் போல அரைத்து 1 வாரத்திற்கு இரண்டு வேளைகள் வீதம் சாப்பிட்டு வந்தால் உடனே சரியாகி விடும்.

கண் பார்வை தெளிவு பெறும்

கீழாநெல்லி, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு எடுத்து அரைத்து சிறிது மோரில் கலக்கி 45 நாள்கள் உட்கொண்டால் மாலைக்கண், பார்வை மங்கல் பிரச்சனை, வெள்ளெழுத்து பிரச்சனைகள் தீரும்.

பல் கூச்சத்தை போக்கும்

எதை சாப்பிட்டாலும் பல் கூச்சம் பிரச்சனை சிலருக்கு இருக்கும். அப்படியானவர்கள் கீழா நெல்லியின் வேரை வாயில் போட்டு இரண்டு நிமிட நேரம் மென்றால் உடனே பல் கூச்சம் போய்விடும்.

வெள்ளைபடுதல் குணமாகும்

கீழாநெல்லி வேர், அசோகப்பட்டை, அத்திப்பட்டை ஆகியவற்றை இடித்து தூள் செய்து சம அளவு கலந்து வேளைக்கு 10 கிராம் வீதம் காலை மாலை வெந்நீருடன் 40 நாள் உட்கொண்டால் வெள்ளைப்படுதல், மாதவிடாய் தாமதமாக வருதல், உதிரச்சிக்கல் போன்றவை தீரும்.

சீதபேதி குணமாகும்

கீழாநெல்லி இலையுடன் மாதுளம்பழம், நாவல் கொழுந்து இலை சம அளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் 1 டம்ளர் மோரில் கலக்கிக் குடித்து வர சீதபேதியை குணமாகும்.

கீழாநெல்லி வேர் பயன்கள்

உயிரணுக்களை அதிகரிக்கும்

கீழாநெல்லி இலையுடன், ஓரிதழ் தாமரையை சம அளவாக சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு அதிகாலையில் 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உயிரணுக்கள் அதிகரிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

கீழாநெல்லி பொடி, நெல்லிக்காய் பொடி, கரிசலாங்கண்ணி பொடி ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து. தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை, ரத்த சோகை குணமாகும். மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஈறு நோய்கள் குணமாகும்

கீழாநெல்லி இலையை நன்றாக மென்று பல்துலக்கி வந்தால் பல்வலி ஈறு நோய்கள் குணமாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

தேங்காயில் குடுமி ஏன் வைக்க வேண்டும்

சாமிக்கு உடைக்கும் தேங்காயில் குடுமி அவசியமா?

சாமிக்கு உடைக்கும் தேங்காயில் குடுமி அவசியமா நாம் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிப்பதற்கு தேங்காய், பூ, பழம், கொண்டு முதலானவற்றைக் கொண்டு செல்வது வழக்கம். அவ்வாறு சாமிக்கு தேங்காய் உடைத்து வழிபாடு செய்யும்போது தேங்காயை...

சகட தோஷம் என்றால் என்ன? சகட தோஷ பரிகாரங்கள்

சகட தோஷம் சகட அல்லது சகடை என்றால் சக்கரம் என்று அர்த்தம். சக்கரம் எப்படி கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் செல்கிறதோ அது போல் இந்த சகட தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையும் ஏற்ற இறக்கமாகச்...
தரை பசலை கீரை நன்மைகள்

தரை பசலை கீரையின் மகத்தான மருத்துவ பயன்கள்.

தரை பசலை என்கிற சிறு பசலை தரையில் படரும் கீரை வகைகளுள் பசலை கீரை முக்கியமான ஒன்றாகும். இதற்கு சிறு பசலை, தரை பசலை என்ற வேறு பெயர்களும் உண்டு. உடலின் நோய் எதிர்ப்பு...
ஆண் உடல் மச்ச பலன்கள்

ஆண் உடல் பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

ஆண் உடல் மச்ச பலன்கள் எல்லோருக்கும் உடலின் வெவ்வேறு பகுதிகளில் மச்சங்கள் இருக்கும். இவ்வாறு உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று கூறுவார்கள். அந்த வகையில் ஆணின் உடலில் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மச்சங்களின்...
சேமியா கேசரி செய்முறை

கல்யாண வீட்டு சேமியா கேசரி

சேமியா கேசரி தேவையான பொருட்கள் சேமியா – 1 கப் சர்க்கரை – 1/2  கப் நெய் – தேவையான அளவு முந்திரி – தேவையான அளவு திராட்சை – தேவையான அளவு ஏலக்காய்...
சிக்கன் வறுவல் செய்வது எப்படி

ஆனியன் பெப்பர் சிக்கன் வறுவல்

ஆனியன் பெப்பர் சிக்கன் வறுவல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு அசைவ உணவு என்றால் அது சிக்கன் தான். சிக்கனில் பல வகைகள் உள்ளன. அதில் நாம் இன்று...
கொய்யா பழம் மருத்துவ குணங்கள்

கொய்யா பழம் பலன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்

கொய்யா கொய்யாப் பழம் வெப்ப மண்டலங்களிலும் துணை வெப்ப மண்டலங்களிலும் பயிரிடப்படும் பழமாகும். கொய்யா மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்டது. இந்தியா, இலங்கை,சீனா ,தாய்லாந்து,மியான்மர் நாடுகளில் கொய்யா...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.