ஆப்பிள் பழத்தின் மருத்துவ குணங்கள் | ஆப்பிள் பயன்கள் மற்றும் நன்மைகள்

ஆப்பிள்

ஆப்பிள் அல்லது குமுளிப்பழம் குளிர்ப் பிரேதேசத்தில் வளரக்கூடிய பழமாகும். இது வருடத்திற்கு ஒரு முறை இலையுதிரும் ரோசாசிடே என்ற குடும்பத் தாவரமாகும். ஆப்பிள் பழத்தினுடைய தோல் பகுதியானது மெல்லியதாயும், பழச்சதை உறுதியானதாகவும் இருக்கும். ஆப்பிள் பழத்தின் நடுபகுதியில் கருப்பு நிற சிறு சிறு விதைகள் இருக்கும். ஆப்பிள் பல பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகின்றது.

ஆப்பிள் மருத்துவ பயன்கள்

ஆப்பிளின் வெளிப்புறம் பெரும்பாலும் சிவப்பு நிறமாகவும், ஒரு சில இரகங்களில் இளம்பச்சை, மஞ்சள் மற்றும் ஊதா நிறங்களிலும் இருக்கும். ஆப்பிளைக் கொண்டு சுவையான பழரசங்களும், ஆப்பிள் சிடர் வினிகர் (Apple Cider Vinegar) என்னும் பானமும் தயாரிக்கப்படுகின்றது. சிடர் வகை ஆப்பிள்கள், பெரும்பாலும் அதிக உவர்ப்புத்தன்மை கொண்டவை. இந்த பண்பின் காரணமாகவே இவை சிடர் பானத்திற்கு நல்ல சுவையும், மணத்தையும் தருகின்றன.

மத்திய ஆசிய பகுதிகளிலி தான் ஆப்பிள் முதன் முதலில் பயிர் செய்யப்பட்டது. தற்போது, ஆப்பிள் உலகில் உள்ள அனைத்து குளிர்ப் பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது. ஆப்பிளின் அறிவியல் பெயர் Malus sp ஆகும்.

ஆப்பிள் பழத்தின் வேறு பெயர்கள்

ஆப்பிளானது குமளிப்பழம், ஆப்பழம், சீமையிலந்தம்பழம், அரத்திப்பழம், ஆப்பிள் அல்லது அப்பிள் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

ஆப்பிள் பழத்தின் வகைகள்

ஆப்பிள் பழங்களில் சுமார் 7500 வகைகள் உள்ளன. அவைகள் பழங்களாகவும், அவை பதப்படுத்தப்படும் முறைகளைக் கொண்டும் பிரிக்கப்படுகின்றன. அவற்றில் முக்கியமான சில வகைகள் பின்வருமாறு,

முக்கியமான ஆப்பிள் வகைகளும், பயிரிடப்படும் இடங்களும் கீழ்வருமாறு:

பழமாக உண்ணப்படும் இரகங்கள்:

அன்டனோவ்கா (Antonovka) – ரஷ்யா
பால்ட்வின் (Baldwin) – அமெரிக்கா: மாசசூசெட்சு
ப்ராபொர்ன் (Brabourne) – நியுசிலாந்து
ப்ராம்லே (Bramley) – இங்கிலாந்து
கோர்ட்லான்ட் (Courtland) – அமெரிக்கா: நியுயார்க்
ப்யூஜி (Fuji) – ஜப்பான் மற்றும் ஆசியா எங்கும், ஆஸ்திரேலியா
கோல்டன் டெலிசியஸ் (Golden Delicious) – அமெரிக்கா: வாஷிங்டன்
க்ரானி ஸ்மித் (Granny Smith) – ஆஸ்திரேலியா
க்ராவென்ஸ்டீன் (Gravenstein) – ஜெர்மனி
மக் இன்டோஷ் (McIntosh) – கனடா
ராயல் காலா (Royal Gala) – நியுசிலாந்து

ஆப்பிள் ரகங்கள்

சிடர் இரகங்கள்:

டைமாக் ரெட் (Timek Red)
கிங்ஸ்டன் பிலாக் (Kingston Block)
ஸ்டோக் ரெட் (Stoke Red)

ஆப்பிள் பழத்தில் உள்ள சத்துக்கள்

கலோரி – 52%, புரத சத்து – 0.47 கிராம், நார்ச்சத்து – 4.4 கிராம், இரும்பு சத்து – 0.48 மில்லி கிராம், கால்சியம் – 11 மில்லி கிராம், சோடியம் – 1 மில்லி கிராம், பொட்டாசியம் – 107 மில்லி கிராம், சர்க்கரை – 10 கிராம் மற்றும் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் இதில் நிறைந்துள்ளன.

அப்பிள் பழத்தின் மருத்துவ நன்மைகள்

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது என சொல்கிறது ஆங்கில பழமொழி. அதற்கேற்றார் போல மனிதனுக்கு தேவையான ஊட்டசத்துகளை ஆப்பிள் பழம் தன்னுளே கொண்டுள்ளது. அவற்றை பற்றி சற்று விரிவாக காண்போம்.

நுண்கிருமிகளை அழிக்கிறது

ஆப்பிளில் உள்ள மாலிக் அமிலம் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. குடல் பாதையில் உள்ள தேவையற்ற நுண்கிருமிகளை கொல்கிறது. ஆப்பிளை நன்கு மென்று சாப்பிட்டால் வாய் மற்றும் தொண்டைப் பகுதிகளில் உள்ள நுண்கிருமிகள் அழிக்கிறது.

நீர்சத்து நிறைந்தது

நீர்ச்சத்து அதிகம் கொண்ட ஆப்பிள் பழத்தை கோடைக் காலத்தில் அதிகம் சாப்பிடலாம். அப்பிளில் மாவுச்சத்து அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின் படி ஒன்று அல்லது இரண்டு ஆப்பிள் துண்டுகளை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

இதயத்தை பாதுகாக்கும்

ஆப்பிளில் உள்ள ஃபைபர் ரத்த அழுத்தத்தை ஒரே சீராக வைத்திருக்க உதவும். ரத்த நாளங்களை தளர்த்துவதற்கு ஆப்பிள் பழத்தில் உள்ள பொட்டாஷியம் உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆப்பிள் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். ஆப்பிள் பழத்தில் உள்ள ‘வைட்டமின் சி’ சத்து இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.

இளமையை தக்கவைக்கும்

வயதானவர் போன்ற தோற்றத்தை கொடுக்கும் முகச்சுருக்கங்களை போக்க ஆப்பிள் ஒரு சிறந்த நிவாரணியாகும். ஆப்பிளை மையாக அரைத்து முகத்தில் தேய்த்துவந்தால், விரைவில் முகச்சுருக்கங்கள் நீங்கி சருமம் புதுப்பொலிவு பெறும்.

புற்றுநோயை விரட்டும்

ஆப்பிள் பழமானது குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பலவித ஆபத்தான புற்று நோய்கள் நம்மை அண்ட விடாமல் தடுக்கிறது.

மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும்

தினமும் இரண்டு ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய்கள் நெருங்க விடாமல் தடுக்கும்.

ஆப்பிள் நன்மைகள்

இரத்த சோகையை நீக்கும்

ரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் தொடர்ந்து ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை விரைவில் விடுபடலாம்.

ஞாபக சக்தி அதிகரிக்கும்

ஆப்பிளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டால், கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம். ஆப்பிள் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், மூளையில் நோய் தாக்கம் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.

நீரிழிவு நோய்க்கு சிறந்தது

அப்பிளில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. எனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆப்பிள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

குறிப்பு

1. அப்பிளை அதிகம் சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கும், பல்லின் எனாமலை பாதிக்கும்.

2. வயதானவர்களுக்கு ஆப்பிளின் மேற்புறத் தோல் செரிமானம் அடைய கடினமாக இருக்கும். அதனால் அவர்கள் அதன் மேற்புறத் தோலை நீக்கி சாப்பிடுவது நல்லது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

how to reduce belly fat

உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க உதவும் சில உணவுகள்

உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க உதவும் சில உணவுகள் உடலை ஆரோக்கியமாகவும் உடல் எடையை சரியான முறையில் வைத்திருக்கவும் உணவு முறை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் எந்த வகையான உணவுகளை...
செம்பருத்திப் பூ டீ

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலிகை டீ வகைகள்

ஆரோக்கியமான  மூலிகை டீ வகைகள் தண்ணீருக்கு பிறகு நாம் அதிக அளவில் குடிக்க கூடிய பானம் என்ன என்றால் அது டீ தான். டீ குடிக்காமல் அன்றைய நாளே முழுமை பெறாது என்று நினைப்பவர்களும்...
களத்திர தோஷம் பரிகாரம்

களத்திர தோஷம் என்றால் என்ன? களத்திர தோஷத்திற்கான நிவர்த்தி / பரிகாரம்

களத்திர தோஷம் என்றால் என்ன? ஜாதகத்தில் லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து 1,2,4,7,8,12 ஆகிய இடங்களில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் இருந்தாலோ அல்லது ஒன்றுடன்...
நாட்டுக் கோழி குழம்பு செய்வது எப்படி

நாட்டுக் கோழி குழம்பு செய்வது எப்படி?

நாட்டுக் கோழி குழம்பு நாட்டு கோழி குழம்பு உடலுக்கு மிகவும் நல்லது. அது உடலுக்கு மிகுந்த பலத்தை கொடுக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். நாட்டு கோழி குழம்பை எவ்வாறு எளிதாக...
புத்திர தோஷம் நீங்க

புத்திர தோஷம் ஏன் ஏற்படுகிறது? புத்திர தோஷத்தை நீக்கும் பரிகாரங்கள்

புத்திர தோஷம் திருமணமான அனைவருமே தங்களுக்கு ஒரு வாரிசு பிறக்க வேண்டும் என விரும்புவர். ஒரு சிலருக்கு திருமணமான ஒரு வருடத்திற்குள் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஒரு சிலருக்கு சற்று தாமதமாக குழந்தை பேறு...
சிக்கன் சூப் செய்வது எப்படி

சிக்கன் சூப் எளிதாக வீட்டிலேயே செய்வது எப்படி

சிக்கன் சூப் உடல் நலிவுற்றவர்கள் காய்கறிகள் மற்றும் சூப்கள் அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். சூப் குடிப்பதால் உடல் பலப்படும், பசியை தூண்டும், ஜீரண சக்தியை அதிகரிக்கும், இளைத்த உடலை தேற்றும்....
சிக்கன் சமோசா

சிக்கன் சமோசா செய்வது எப்படி

சிக்கன் சமோசா செய்வது எப்படி தேவையான பொருள்கள் சிக்கன் – 250 கிராம் (எலும்பில்லாதது) இஞ்சி – 1 துண்டு ( பொடியாக நறுக்கியது ) எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு மைதா...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.