வெறும் வயிற்றில் எந்த உணவை சாப்பிடுவது நல்லது

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய உணவுகள் 

உடல் ஆரோக்கியத்தில் காலை உணவு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு நாளுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் காலை உணவின் மூலமே நமக்கு கிடைக்கிறது. அன்றைய நாள் முழுவதும் நமக்கு ஆற்றலை தரக்கூடியது காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு தான். காலை உணவை தவிர்ப்பது மிகவும் தவறானதாகும்.

வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை காலையில் நாம் சாப்பிடக்கூடிய உணவு தான் அந்த நாள் முழுவதும் நமக்கு சக்தியை அளிக்கிறது. இரவு உணவு சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் கழித்து தான் நாம் காலை உணவை சாப்பிடுகிறோம். கிட்டத்தட்ட பத்து மணி நேரத் திற்குப் பிறகு தான் காலை உணவை சாப்பிடுகிறோம். எனவே காலை உணவை கண்டிப்பாக நம் தவிர்க்க கூடாது.

காலையில் நாம் சாப்பிடும் உணவுகளைத் தேர்வு செய்வதில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அமிலச் சுரப்பை அதிகரிக்கும் உணவுகளை காலையில் அறவே தவிர்த்து விட வேண்டும். காலையில் நம் உடலுக்கு சக்தி அளிக்க கூடிய சிறந்த உணவுகள் என்ன என்பதை பார்க்கலாம்.

காலையில் சாப்பிட சிறந்த உணவுகள்

முட்டை

காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட சிறந்த உணவுகளில் முட்டை சிறந்தது. இதில் புரதச் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளன. மெட்டபாலிசம் அதிகரித்து  ஆற்றலைத் தரும் உணவுகளில் முட்டையும் ஒன்று.

வெந்நீர்

காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான நீர் அருந்துவதன் மூலம் உடல் எடை குறையும். கழிவுகள் வெளியேறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சருமம் இளமையாகும். புத்துணர்வு கிடைக்கும். செரிமானம் சீராகும். மலச்சிக்கல் சீராகும்.

பப்பாளி

பப்பாளி பழம் காலையில் பப்பாளி பழத்தை சாப்பிடுவது உடலில் தேங்கி இருக்கும் கெட்ட கழிவுகளை வெளியேற்றி உடலை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.  இதில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. கெட்ட கொழுப்பை குறைத்து பல்வேறு இதய நோய்களைத் தடுக்கவும், வீக்கம் மற்றும் மலச்சிக்கலைக் குறைக்கவும் உதவி செய்கிறது.

தேங்காய் பால்

வெறும் வயிற்றில் தேங்காய் பால் குடிப்பது உடலுக்கு நல்லது. வெறும் வயிற்றில் தேங்காய் பால் அருந்தி வர வயிற்றில் உள்ள புண்கள் விரைவில் ஆறும்.

தர்பூசணி

தர்பூசணிதர்பூசணி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட ஒரு சிறந்த பழம். ஏனெனில் இது எலக்ட்ரோலைட் சமநிலையை மேம்படுத்துகிறது மற்றும் உங்கள் உடலை ஹைட்ரேட் செய்கிறது. நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள ஒரு பழமாகும்.

தேன்

தேன்

வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பது உடலுக்கு பலம் தரும். சளி மற்றும் இருமலுக்கு நல்ல மருந்தாகும். இரத்தத்தைச் சுத்தம் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும். உடல் எடையைக் குறைக்கும்.

வெந்தயம்

சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்த நோய்களுக்கு வெந்தயத்தை, முந்தைய நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள், வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து அருந்துவது மிகவும் நல்லது.

இஞ்சி

இஞ்சித் தோலை நீக்கிவிட்டு, சாறு எடுத்து அதோடு தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு குறைவதுடன் நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும்.

நீராகாரம்

காலையில் எழுந்த உடன் நீராகாரம் அருந்துவதால், உடலுக்குக் குளிர்ச்சியும், தேவையான கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கிறது. நீராகாரத்துடன் கடைந்த மோர் சேர்த்துக் குடிப்பது நல்லது.

நெல்லிக்காய்

நெல்லிக்காய் ஜூஸ்

தினமும் வெறும் வயிற்றில், நெல்லிக்காய் சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

முளைகட்டிய பயறு

முளைகட்டிய பயறில் வைட்டமின்கள், தாது உப்புக்கள், புரோட்டின், என்சைம்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதய நோயில் இருந்து நம்மைக் காக்கும். இதை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.

ஓட்ஸ்

காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஓட்ஸ் சாப்பிடலாம். இது வயிற்றில் எரிச்சல் அல்லது பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது. கரையக்கூடிய நார் சத்துகள் இருப்பதால் கொழுப்பு குறைவதுடன், வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது.

நல்லெண்ணெய்

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நல்லெண்ணெய்யை ஒரு ஸ்பூன் வாயில் ஊற்றி சிறிது நேரம் கொப்பளித்து வந்தால் பல உடல் உபாதைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆயில் புல்லிங் என அழைக்கப்படும் இந்த பயிற்சி தற்போது மிகப் பிரபலமாக உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

வரகு நெல்லிக்காய் சாதம்

வரகு நெல்லிக்காய் சாதம்

வரகு நெல்லிக்காய் சாதம் வரகரிசியில் மாவுச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து மிகுதியாகவும் உள்ளது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனையும் உண்டாவதில்லை. நார்ச்சத்தும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கும் குறைக்கிறது. உடல் எடை குறையவும் அதிலும் ஆரோக்கியமான...
யோகங்களின் வகைகள்

ஜாதக யோகங்கள் எவை? யோகங்கள் பகுதி # 3

ஜாதக யோகங்கள் யோகங்கள் என்பது நமது ஜாதகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைந்து இருப்பதால் ஏற்படும் ஏற்படும் யோக பலன்களை குறிக்கும். இந்த கிரக இணைப்புகள் அமைந்துள்ள இடத்தை பொருத்து நற்பலன்...
திப்பிலி மருத்துவ குணங்கள்

திப்பிலி மருத்துவ பயன்கள்

திப்பிலி திப்பிலி ஒரு மிளகு சாதியைச் சேர்ந்த புதர் போல் வளரும் பல பருவச் செடியாகும். இது ஒரு மூலிகைத் தாவரமாகும். இது ஆங்கிலத்தில் ‘Long Pepper’ என அழைக்கபடுகிறது. இது இந்தியாவின் வெப்பமான...
சீத்தாபழம் மருத்துவ பயன்கள்

உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும் சீத்தாப்பழம்

சீத்தாப்பழம் சீத்தாப்பழம் அல்லது சீதாப்பழம் அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகளை தாயகமாகக் கொண்டது. சீத்தாப்பழம் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும், அதனுள் உள்ள சதைப்பகுதி மிகவும் சுவையாக இருக்கும். மேலும் இப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் இதர...
அமாவாசையில் ஏன் கோலம் போடக்கூடாது

அமாவாசை அன்று வீட்டில் ஏன் கோலம் போடக் கூடாது?

அமாவாசையில்  வீட்டில் ஏன் கோலம் போடக் கூடாது? தினசரி காலை, மாலை என இரண்டு வேளையும் கோலம் போடுவதை  நாம் வழக்கமாக கொண்டுள்ளோம். தினந்தோறும் கோலமிடுவதால் வீட்டில் தெய்வகடாட்சம்  நிறைந்திருக்கும் என்பது ஐதீகம். நமது...
4ம் எண்ணின் குணநலன்கள்

4ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

4ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 4ம் எண் ராகு பகவானுக்குரிய எண்ணாகும். இந்த எண் எங்கும், எதையும் பிரம்மாண்டமாகவும், பெரிதுப்படுத்தி எண்ணக்கூடிய மாபெரும் ஆற்றல் கொண்ட எண்ணாகும். 4, 13, 22, 31 ஆகிய...
சருமம் அழகாக

உங்கள் சருமம் பால் போன்று வெண்மையாக வேண்டுமா?

சருமத்தை வெண்மையாக மாற்றும் பால் பால் நம் தினசரி வாழக்கையில் இடம்பெரும் ஒரு முக்கிய பொருளாகும். பாலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு அதிக அளவிலான ஆரோக்கியத்தை அளிக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததாகும். பாலில்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.