இறால் குழம்பு

இறால் குழம்புஇறால் குழம்பு செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

  1. இறால் – ½ கிலோ
  2. உருளைக்கிழங்கு –  1 ( பெரியது )
  3. முருங்கைக்காய் – 1
  4. கொத்தமல்லி – சிறிதளவு
  5. மிளகாய் தூள் –  2 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் – ¼  ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  8. எண்ணெய் – தேவையான அளவு
  9. உப்பு – தேவையான அளவு

அரைக்க

  1. தேங்காய் துருவல் – ¼ கப்
  2. தக்காளி – 1
  3. இஞ்சி – 1 துண்டு
  4. பூண்டு – 10 பல்
  5. பட்டை – 2
  6. சோம்பு – ½ ஸ்பூன்

தாளிக்க

  1. கடுகு – ½ ஸ்பூன்
  2. சீரகம் – ½ ஸ்பூன்
  3. கறிவேப்பிலை – சிறிதளவு

prawn recipes செய்முறை

  1. இறாலை சுத்தம் செய்து  உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஊற வைக்கவும்.
  2. உருளைக்கிழங்கு மற்றும் முருங்கைக்கையை வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  3. தேங்காய் துருவல், தக்காளி, சோம்பு, பட்டை ஆகியவற்றை மிக்சியில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
  5. பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை நன்கு வதக்கவும்.
  6. வெங்காயம் வதங்கியவுடன்  இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  7. பின் அரைத்த தேங்காய் விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், முருங்கைக்காய்  உருளைக்கிழங்கு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  8. பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும். வேறு ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இறாலை சேர்த்து வதக்கவும் (இறாலை வதக்கி சேர்ப்பதால், குழம்பு சுவையாக இருக்கும்).
  9. வதக்கிய இறாலை குழம்பில் சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்தவுடன் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். சுவையான இறால் குழம்பு தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் குருவை அதிபதியாக கொண்ட மீன லக்னகாரர்கள் அன்பும், கனிவும் கொண்டவர்கள். இவர்கள் தங்கள் கணவன் அல்லது மனைவியிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு காதல் கொள்வார்கள். இவர்கள் துடுக்குத்தனம் மிக்கவர்கள்....
மட்டன் குருமா குழம்பு வைப்பது எப்படி

மட்டன் குருமா செய்வது எப்படி

மட்டன் குருமா ஆட்டுக்கறி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது, கூடவே ஆரோக்கியமும் நிறைந்தது. மட்டனை வைத்து விதவிதமான உணவுகள் செய்யப்படுகிறது. அதில் ஒன்றுதான் மட்டன் குருமா. இந்த மட்டன் குருமா செய்வதற்கு மணமானது மற்றும் எளிதானது,...
லக்ன பலன்கள் என்றால் என்ன

லக்னம் என்றால் என்ன? லக்னம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

லக்னம் என்றால் என்ன? ஒருவரிடம் அவரின் ராசி எதுவென்று கேட்டால் எளிதாக சொல்லி விடுவார்கள். ஆனால் அவரின் லக்னம் என்னவென்று கேட்டால் திணறுவார்கள். ஒருவருடைய ஜாதகத்தில் 'ல' என்றும் 'ராசி' என்றும் ஜோதிடர்கள் குறிப்பிட்டு...
சதுர்த்தசி திதி

சதுர்த்தசி திதி பலன்கள், சதுர்த்தசி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

சதுர்த்தசி திதி சதுர்த்தச என்பதற்கு பதினான்கு என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 14 வது நாள் சதுர்த்தசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் சதுர்த்தசியை...
அன்னாபிஷேகம் செய்யும் முறை

அன்னாபிஷேகம் சிறப்புகள் மற்றும் பலன்கள்

அன்னாபிஷேகம் சிறப்புகள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.  இந்த ஆண்டு 07.11.2022 அன்று அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்த உலகில் சகலத்தையும்...
அட்சதை போடுவது எதற்காக

திருமணத்தில் அட்சதை தூவி வாழ்த்துவது ஏன்?

திருமணத்தில் அட்சதைப் போடுவது ஏன்? திருமணம், சீமந்தம், பிறந்தநாள், பூப்புனித நீராட்டு விழா, கிரகப்பிரவேசம் என எந்த மங்களகரமான நிகழ்ச்சிகள் நடந்தாலும் பெரியவர்களின் ஆசி அட்சதை மூலமாகத்தான் நமக்கு கிடைக்கிறது. அட்சதையை தூவி ஆசீர்வதிக்கும்...
திருமணமான பெண்கள் காலில் மெட்டி அணிவது ஏன்?

திருமணமான பெண்கள் காலில் மெட்டி அணிவது ஏன்?

திருமணமான பெண்கள் காலில் மெட்டி அணிவது ஏன்? உலகிலேயே இந்தியாவில் உள்ள மணமான பெண்கள் மட்டும் தான் மெட்டி அணியும் கலாச்சாரத்தை காலங்காலமாக வழக்கமாக வைத்துள்ளனர். மெட்டி அணிவது வெறும் திருமணம் ஆனதற்கான அடையாளம்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.