சுவையான தேங்காய் போளி

தேங்காய் போளி

HOW TO MAKE COCONUT POLIதேவையான பொருட்கள்

  1. வெல்லம் – 1 கப்
  2. மைதா மாவு – 1 கப்
  3. மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
  4. துருவிய தேங்காய் – 1 கப்
  5. நெய் – சிறிதளவு
  6. தண்ணீர் – தேவையான அளவு
  7. ஏலக்காய் தூள் – சிறிதளவு
  8. உப்பு – ¼ ஸ்பூன்

செய்முறை

  1. முதலில் மைதா மாவை ஒரு அகன்ற பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.
  2. பின்னர் அதில் சிறிதளவு மஞ்சள் தூள் , சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
  3. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  4. மாவு மிகவும் கெட்டியாக இல்லாமல் சப்பாத்தி மாவை விட சிறிது இலகுவாக பிசைந்து கொள்ளவும்.
  5. பிசைந்து வைத்துள்ள மாவில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து ½ மணி நேரம் மூடி வைத்து விடவும்.
  6. பின்னர் ஒரு பத்திரத்தில் 1 கப் வெல்லத்தை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  7. வடிகட்டிய வெல்ல கரைசலை ஒரு பேனில் சேர்க்கவும்.
  8. அதில் 1 கப் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  9. தேங்காய் துருவல் வெல்லத்துடன் சேர்த்து கெட்டியான பதத்திற்கு வந்ததும் சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
  10. ஊற வைத்துள்ள மைதா மாவை நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்.
  11. பின்னர் உருட்டிய மாவை ஒரு எண்ணெய் தடவிய வாழை இலையில் வைத்து மெல்லியதாக தட்டிக் கொள்ளவும்.
  12. பின் அதன் நடுவில் தேங்காய் பூரணத்தை வைத்து நன்கு தட்டிக் கொள்ளவும்.
  13. தோசை தவாவை சூடு செய்து அதில் கொஞ்சம் நெய் விட்டு தட்டி வைத்துள்ள போளியை போட்டு இரண்டு பக்கமும் நெய் அல்லது எண்ணெய் விட்டு சுட்டு எடுத்தால் சுவையான தேங்காய் போளி ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

உணவை சிந்தாமல் சாப்பிட வேண்டும்

உங்கள் வீட்டின் வறுமைக்கு காரணம் நீங்கள் சாப்பிடும் பொழுது இந்த தவறை செய்வது தான்

உங்கள் வீட்டின் வறுமைக்கு காரணம் நீங்கள் சாப்பிடும் பொழுது இந்த தவறை செய்வது தான்   சமைக்கும் பொழுது இன்முகத்துடன் சமைத்தால் தான் அந்த சமையல் ருசி அதிகரிக்கும். அது போல உணவு சாப்பிடும் பொழுதும் பேசாமல்,...
ஐப்பசியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள் ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் தெய்வ பக்தி அதிகம் கொண்டவர்கள். தேசபக்தியும் அவர்களிடம் நிறைந்து காணப்படும். ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் மற்றும் அறிவில் சிறந்தவர்கள் மேலும் மிகுந்த பொறுமைசாலிகள்....
சுப ஓரைகள் என்றால் என்ன

ஓரைகள் என்றால் என்ன ? எந்த ஓரையில் என்னென்ன செய்யலாம்?

ஓரைகள் என்றால் என்ன? தினமும் அந்தந்த ஊர்களில் சூரியன் உதிக்கும் நேரம் முதல் ஒவ்வொரு மணி நேரம் வரையில் ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆதிபத்திய காலம் நடைபெறும். அதுவே, அந்த கிரகத்தின் ஆதிபத்தியம் உள்ள ஓரை...

சதாவரி என்னும் தண்ணீர்விட்டான் கிழங்கு-ன் மருத்துவ பயன்கள்

சதாவரி என்னும் தண்ணீர்விட்டான் கிழங்கு சதாவரி என்பது இந்தியா, இலங்கை, இமயமலை ஆகிய இடங்களில் காணப்படும் அஸ்பராகஸ் இனத் தாவரம் ஆகும். இது பல வியாதிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இதை வடமொழியில் சதாவரி...
prawn katlet

இறால் கட்லட் செய்வது எப்படி

இறால் கட்லட் தேவையான பொருட்கள் இறால் -  ½ கிலோ பெரிய வெங்காயம் – 1 ( பொடியாக நறுக்கியது ) இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் பச்சைமிளகாய் – 1...
மச்ச சாஸ்திரம் என்றால் என்ன

மச்ச சாஸ்திரம் என்றால் என்ன? மச்ச பலன்களை எவ்வாறு கணிப்பது

மச்சம் என்றால் என்ன? நமது உடலில் தலையில் இருந்து கால் பாதம் வரை உள்ள தோலில் அமைந்துள்ள சிறு சிறு புள்ளிகள் தான் மச்சங்கள் ஆகும். இது மஞ்சள், நீலம், சிவப்பு, வெளுப்பு, கருப்பு...
ரவா லட்டு செய்முறை

சுவையான ரவா லட்டு

ரவா லட்டு தேவையான பொருட்கள் ரவை - ½ கிலோ சர்க்கரை – ¼ கிலோ முந்திரி – தேவையான அளவு திராட்சை – தேவையான அளவு நெய் – சிறிதளவு ஏலக்காய் தூள்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.