ஸ்ரீராமநவமி சிறப்புகளும் வழிபடுவதால் உண்டாகும் நன்மைகளும்

ஸ்ரீராமநவமி சிறப்புகள்

ஸ்ரீமன் நாராயணனின் அவதாரங்களில் மிக முக்கியமான அவதாரம் ராம அவதாரமாகும். பங்குனி மாத வளர்பிறை நவமியும் புனர்பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீராமர் அவதரித்த தினம் ஆகும். இந்த ஆண்டு ஸ்ரீராமநவமி நாளை 21.04.2021 அன்று கொண்டாடப்படுகிறது.

ராம நவமி என்றால் என்ன ஸ்ரீராமபிரான் அவதார தினமான ஸ்ரீராமநவமி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் விமர்சையாகவும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுவது வழக்கமாகும்.

இந்த விழா ஒரு நாள் மட்டுமல்லாது தொடர்ந்து பத்து நாட்களுக்கு விஷ்ணு ஸ்தலங்களில் கொண்டாடப்படுகிறது.

ராமர் ராம அவதாரத்தில் ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என்பதற்கேற்றார் போல் ஏக பத்தினி விரதனாகவும், அவதாரப் புருஷனாகவும் உலகிற்கு வாழ்ந்து காட்டி ராம பக்தர்களுக்கு ஒரு எடுத்துகாட்டாக விளங்கினார்.

ஸ்ரீராமநவமி என்று பெயர் வர காரணம்

ராமர் அவதரித்த நாளை நாம் ராமநவமி என்று அழைப்பதற்கு ஒரு காரணம் உண்டு.  ‘நாளும், கோளும் நலிந்தோருக்கு இல்லை‘ என்பது பழமொழி. இருப்பினும் பொதுவாக அஷ்டமி, நவமி ஆகிய திதிகளுடன் கூடிய நாட்களில் பக்தர்கள் நல்ல காரியங்களை தொடங்கமாட்டார்கள்.

இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் மஹாவிஷ்ணுவிடம் சென்று மக்கள் எங்களை புறக்கணிக்கின்றனரே என்று கூறி கண்ணீர் விட்டு முறையிட்டனர்.

இதனால் உங்கள் இரு திதிகளையும் கொண்டாட ஏற்பாடு செய்கிறேன் என்று பகவான் வாக்களித்தாராம். இதனால் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி கோகுலாஷ்டமி என்றும்  ஸ்ரீராமர் அவதரித்த நவமி ஸ்ரீராமநவமி என்றும், கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீராமநவமி வழிபடும் முறைகள்

ஸ்ரீராமநவமி அன்று வீடு, வாசல், பூஜை அரை அனைத்தையும் சுத்தம் செய்து இறைவனுக்கு விளக்கேற்றி புதிய மலர்கள் அணிவிக்க வேண்டும். ஸ்ரீராமநவமி அன்று ராமர் பட்டாபிஷேகம் படத்தை வைத்து வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும்.

ராம நவமி விரதம் இருப்பது எப்படி அன்றைய தினம் ஒரு வேளையாவது விரதம் இருந்து ஸ்ரிராமநாமத்தை உள்ளன்போடு சொல்ல வேண்டும். ராமநாமத்தை சொல்வதோடு மட்டுமல்லாமல் எழுதுவதும் மிக சிறந்ததாகும்.

இவ்வாறு செய்வதன் மூலம் அனைத்து கஷ்டங்களும் நீங்கி வாழ்வில் பல்வேறு சிறப்புகள் உண்டாகும். ராமநவமி அன்று ராமரை வழிபடுவதோடு மட்டுமல்லாமல் ராம பக்தரான அனுமனை வழிபடுவதும் சிறப்பான ஒன்றாகும்.

சுவாமிக்கு நெய்வேத்தியமாக நீர்மோர், பானகம், பாயாசம் வைத்து வழிபடலாம். வழிபாடு முடிந்த பின் தீப ஆரதானை காண்பித்த பின்னர் பானகத்தை அனைவருக்கும் கொடுத்து நாமும் உண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

ஸ்ரீராமநவமி அன்று அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று ராம பஜனைகள் நடைபெறுவதை கேட்கலாம். இறுதியாக ராமர், சீதா கல்யாண வைபோகத்தை கண்டுகளிக்க வேண்டும். திருமணம் ஆகாதவர்கள், திருமண வாழ்வில் சங்கடங்கள் உள்ளவர்கள் அனைவரும் திருக்கல்யாணத்தை கான வேண்டும். இதனால் திருமண தடைகள் அனைத்தும் தகர்ந்து விரைவில் திருமணம் நடைபெறும்.

அன்றைய தினம் ராம பக்த்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் செய்து நீர்மோர், பானகம் கொடுப்பது சிறப்பாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சாப்பிடும் முறை

சாப்பிடும் போது எந்த திசையை நோக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும்?

சாப்பிடும் போது எந்த திசையை நோக்கி சாப்பிட வேண்டும்? அன்றாட பழக்கவழக்கங்களில் நம் முன்னோர்கள் பல சாஸ்திரங்கள் கூறியிருப்பதை இன்றும் நாம் கடைபிடித்து வருகிறோம். நாம் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்று உணவு. அதுமட்டுமின்றி...
துளசி மருத்துவ நன்மைகள்

துளசி மருத்துவ குணங்கள்

துளசி துளசி மூலிகைகளின் ராணி என அழைக்கபடுகிறது. துளசியில் உள்ள மருத்துவ குணங்களால் மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துளசியின் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. துளசி...
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் பூரட்டாதி நட்சத்திரத்தின் இராசி : கும்பம் மற்றும் மீனம் பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி : குரு பூரட்டாதி நட்சத்திரத்தின் 1, 2 மற்றும் 3ம் பாதத்தின் இராசி அதிபதி (கும்பம்) :...

முகப்பொலிவையும் இளமையான தோற்றத்தையும் தரும் பீட்ரூட்

முகப்பொலிவையும் இளமையான தோற்றத்தையும் தரும் பீட்ரூட் இயற்கையான அழகை பெற விரும்பும் பெண்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த தீர்வாகும். பீட்ரூட்டில் நம் உடலுக்கும், உள்ளுருப்புகளுக்கும் மிகவும் தேவையான ஒன்றாகும். நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும்...
அதிரசம் செய்முறை

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் செய்வது எப்படி

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் தீபாவளி அன்று நம் அனைவரது வீடுகளிலும் செய்யகூடிய பாரம்பரிய இனிப்பு வகையில் முக்கியமான ஒன்று அதிரசரமாகும். அதிரசத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று வெல்ல அதிரசம் மற்றொன்று சர்க்கரை அதிரசம்....
பற்கள் பலம் பெற

பற்கள் வெண்மையாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டுமா?

பற்கள் வெண்மையாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டுமா? நம் முகத்தோற்றத்தை அழகாக காட்டுவதில் பற்களும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அனைவருக்குமே பற்கள் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். அனால் அப்படி இருப்பதில்லை. பற்கள்...
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் பூசம் நட்சத்திரத்தின் இராசி : கடகம் பூசம் நட்சத்திரத்தின் அதிபதி : சனி பூசம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சந்திரன் பூசம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை -: சூரியன் பூசம் நட்சத்திரத்தின் பரிகார...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.