அறுபதாம் கல்யாணம் செய்வதற்கான காரணங்கள்

அறுபதாம் கல்யாணம் செய்வதற்கான காரணங்கள்

 கணவருக்கு அறுபது வயது பூர்த்தியானதும் மீண்டும் மணவிழா நடத்தி இணைவதே அறுபதாம் கல்யாணம். இதை சஷ்டியப்த பூர்த்தி, மணிவிழா என்றும் குறிப்பிடுவர். உலகவாழ்வில் ஈடுபட்டிருக்கும் மனிதன் ஆசாபாசங்களை ஏற்று அனுபவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறான். அவனுடைய அறுபதாம் வயது வாழ்வின் திருப்புமுனையாக அமைகிறது.

அறுபதாம் கல்யாணம் எப்படி செய்வது முன்னோர்களின் பாரம்பரியம்

ஒரு மனிதன் முதல் திருமணத்தில் இல்லற வாழ்க்கைக்குள் நுழைகிறான். அன்று முதல் குடும்ப பொறுப்புகளை சுமக்கிறான். அதுபோல அறுபதாம் திருமணத்தில் இல்லறக் கடமைகளை நிறைவு செய்து துறவற வாழ்க்கைக்குள் நுழைகிறான். இவற்றை நினைவுபடுத்தும் நிகழ்ச்சியே அறுபதாம் திருமணம். இவற்றை திருக்குறளும் வலியுறுத்துகிறது.

அதாவது இளமையில் செய்த திருமணத்தின் அடிப்படையில் குடும்பத்தைப் பேணுதல், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குதல் போன்ற இல்லறக் கடமைகள் நிறைவேறுகின்றன. அதன்பின் பிள்ளை மற்றும் உறவுகளையும், வாழ்வியல் இன்பங்களையும் சுதந்திரமாக விடுத்து, கடவுளை முழுமையாகச் சரணடைய வேண்டும். இந்த ஆன்மிகக் கடமையை நினைவுபடுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

மேலும், அதுவரை ஒரு பெண் மனைவியாக வந்து துணையிருந்து குடும்பத்தையும், பிள்ளைகளையும் தாங்கினாள். பிறகு குடும்பத்தை துறந்த பின் கணவர் துணை இருந்து தாங்க வேண்டும் என்பதே இதன் பாரம்பரியமாகும்.

அறுபதாம் கல்யாணம் என்றால் என்ன வயதும், வாழ்க்கையும்

20 வயது வரை நம்மை தயார் செய்து கொள்ளும் வாழ்க்கை.

20 – 40 வரை சிகரத்தை அடைய தொடத் துடிக்கின்ற வாழ்க்கை.

40 – 60 வரை பொறுப்பான குடும்பத் தலைவனின் வாழ்க்கை.

60 க்கு மேல் தெளிவான , அமைதியான , பொறுப்புகளை முடித்து நிம்மதியான வாழ்க்கை.

60 க்கு மேலான வாழ்க்கையில் ஆரோக்கியமான ஒவ்வொரு நாளும் நமக்கு அளிக்கப்பட்ட வரங்கள்.

அறுபதாம் கல்யாணம் செய்யத் தவறினால் பெரிய தவறு ஒன்றும் நிகழப்போவதில்லை. நம்முடன் வாழ்ந்து நம்மைத் தாங்கிய மனைவியின் தியாகங்களை எண்ணிப் பார்ப்பதற்காகவே இத்திருமணம் செய்யப்படுகிறது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கடக ராசி பொது பலன்கள் – கடக ராசி குணங்கள்

கடக ராசி குணங்கள் கடக ராசியின் அதிபதி சந்திர பகவானாவார். கடக ராசியில் புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களின் அனைத்து பாதங்களும் அடங்கியுள்ளன. 12 ராசிகளில் இது 2வது சர...
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் மிதுன லக்னத்தின் அதிபதி புதன் பகவானவார். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் அழகானவர்கள், மற்றும் அறிவாளிகள் என்பதால் சாதுரியமான செயல்களை செய்வார்கள். நல்ல பேச்சாற்றல் மிக்கவராகவும், கணக்கில் ஆர்வம் மிக்கவராகவும்...
அபிஜித் நட்சத்திர நேரம்

தொட்டதெல்லாம் துலங்கும் அபிஜித் நட்சத்திர நேரம்

அபிஜித் நட்சத்திரம் வெற்றி, முன்னேற்றம், செல்வம் இவற்றை அடைய சிறந்த நேரம் அபிஜித் நட்சத்திர நேரமாகும். ஜோதிடத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் பழங்காலத்தில் முதல் நட்சத்திரம்...
raagi recipes

உடலுக்கு வலுசேர்க்கும் கேழ்வரகு பர்பி

கேழ்வரகு பர்பி தேவையான பொருட்கள் ராகி மாவு – 1 கப் ரவை – ¼ கப் வெல்லம் – 1 கப் நெய் – தேவையான அளவு முந்திரி – தேவையான அளவு ...
மச்ச சாஸ்திரம் என்றால் என்ன

மச்ச சாஸ்திரம் என்றால் என்ன? மச்ச பலன்களை எவ்வாறு கணிப்பது

மச்சம் என்றால் என்ன? நமது உடலில் தலையில் இருந்து கால் பாதம் வரை உள்ள தோலில் அமைந்துள்ள சிறு சிறு புள்ளிகள் தான் மச்சங்கள் ஆகும். இது மஞ்சள், நீலம், சிவப்பு, வெளுப்பு, கருப்பு...
துவிதியை திதி பலன்கள்

துவிதியை திதி பலன்கள், துவிதியை திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

துவிதியை திதி ‘துவி’ என்றால் இரண்டு, இது ஒரு வடமொழி சொல்லாகும். இது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து இரண்டாவது நாள் ஆகும். அமாவாசைக்கு அடுத்து வரும் துவிதியை சுக்கில பட்ச துவிதியை என்றும்,...
prawn podimas

இறால் பொடிமாஸ்

இறால் பொடிமாஸ் தேவையான பொருட்கள் இறால் -1/2 கிலோ வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 1 இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் கடுகு – ¼ ஸ்பூன் உளுத்தம்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.