வடக்கே தலை வைத்து படுக்கலாமா?

வடக்கே தலை வைத்து படுக்கலாமா?

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அனைவருக்கும் தூக்கம் அவசியமாகும். அத்தகைய தூக்கம் எளிதில் வரவேண்டுமென்றால், தூங்கும் அறை அமைதியாகவும், வெளிச்சமின்றியும் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.

அதேபோன்று, தூங்கும் திசையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் நல்ல தூக்கம் வர நாம் எந்த திசையில் படுக்கிறோம் என்பதும் ஒரு காரணமாகும்.

எந்த திசையில் படுக்கலாம், எந்த திசையில் படுத்து தூங்க கூடாது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

எந்த திசையில் தலை வைத்து படுக்கலாம் எந்த திசையில் படுக்கக் கூடாது

பொதுவாக வடக்கு திசையில் தலை வைத்து தூங்குவது நல்லதல்ல என கூறப்படுகிறது.

ஒருவர் வடக்கு திசை பக்கம் தலை வைத்து தெற்கு திசை நோக்கி கால்களை நீட்டி தூங்கினால், உடலின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, உடல்நல பிரச்சனைகள் ஏற்படும்.

மேலும், செல்வம், வேலை, குடும்ப நிம்மதி போன்றவற்றை இழக்க வேண்டிய சூழ்நிலை வரும்.

இறந்தவர்களின் தலையை தான் வடக்கு திசையில் வைப்பார்கள். உயிர் பிரிந்ததும் வடக்கு நோக்கி படுக்க வைப்பது நமது மரபு. எனவே எக்காரணம் கொண்டும் வடக்கு திசையில் தலை வைத்து தூங்க கூடாது.

வடக்கு திசையில் ஏன் படுக்கக் கூடாது ?

பூமியின் வடக்கு திசையில் நேர் மின்னோட்டமும், தெற்கு திசையில் எதிர் மின்னோட்டமும் உள்ளது.

அதே போல் மனித உடலின் தலையில் நேர் மின்னோட்டமும், காலில் எதிர் மின்னோட்டமும் கொண்டது.

எப்போதும் எதிரெதிர் துருவங்கள் தான் ஈர்க்கும். ஒரே துருவங்களில் படுக்கும் போது, மின்னோட்டங்களுக்கு இடையே இடையூறு ஏற்பட்டு, உடலின் ஆற்றல் பாதிக்கப்பட்டு, உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும்.

அதனால், எப்போதும் வடக்கு திசை பக்கம் தலைவைத்து படுக்க கூடாது.

தூங்கும்போது தலை வைக்கும் திசை எந்த திசையில் படுத்து தூங்குவது நல்லது

தெற்கு திசையில் தலை வைத்து வடக்கு திசை நோக்கி கால்களை நீட்டி தூங்கினால், புகழ், செல்வம், வெற்றி போன்றவை தேடி வருவதோடு, மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் மேம்படும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

மேற்கு திசையில் தலை வைத்து தூங்கினால், ஒவ்வொரு நாளும் வாழ்வில் ஒரு மாற்றத்தைக் காணக்கூடும். மேலும் இந்த திசையில் தலை வைத்து தூங்குபவர்கள் பணக்காரர்களாகவும், பெயர் புகழுடன் வாழ்வதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.

கிழக்கு திசையில் தலை வைத்து தூங்கும் போது, நினைவாற்றல் அதிகரிப்பதோடு, படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த முடியும்.

கணக்கு வழக்கு பார்ப்பவர்கள் கிழக்கு திசையில் தலை வைத்து தூங்கினால், அவர்களின் மூளை தூக்கத்திலும் சிறப்பாக செயல்படும்.

கிழக்கு திசையில் தலை வைத்து தூங்கும் போது, இந்த திசையில் இருந்து வரும் நேர்மறை ஆற்றல்கள், உடலுக்கு அனைத்து வகையான நேர்மறை ஆற்றலையும் வழங்கும்.

கிழக்கு திசையில் தூங்கினால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதோடு, எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

சமண சமயத்தில் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் உயிரை விட விரும்பினால், வடக்கிருத்தல் என்ற விரதத்தை மேற்கொள்வர்.

நட்புக்கு இலக்கணம் வகுத்த பிசிராந்தையாரும், கோப்பெருஞ்சோழனும் வடக்கிருந்து உயிர் விட்ட செய்தியை பழந்தமிழ் இலக்கியம் கூறுகிறது. எனவே வடக்கு திசையை தவிர மற்ற அனைத்து திசைகளும் படுத்த உறங்க சிறந்த திசையாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஷாக் அடித்தால் என்ன செய்ய வேண்டும்

முதலுதவி பெட்டி யும் அதில் இருக்க வேண்டிய முதலுதவி பொருட்களும்

முதலுதவி பெட்டி முதலுதவி செய்ய மிகவும் முக்கியம் முக்கிய பொருட்கள் நிறைந்த முதல் உதவிப் பெட்டி ஆகும். காயமடைந்தவருக்கு முதன்மையான உதவிகளை செய்வதற்காக சில அத்தியாவசிய மருத்துவப்பொருட்களை கொண்டுள்ள பெட்டியே முதலுதவிப்பெட்டி ஆகும். இது...

தித்திக்கும் கோவில் சர்க்கரை பொங்கல்

சர்க்கரை பொங்கல் தேவையான பொருட்கள் பச்சரிசி – 1 கப் பாகு வெல்லம் – 1 கப் பாசி பருப்பு – ¼ கப் நெய் – 100 கிராம் ஏலக்காய் – சிறிதளவு ...
avoidable food in the morning

காலையில் இந்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

காலையில் சாப்பிடக்கூடாத உணவுகள் காலையில் நாம் சாப்பிடக்கூடிய முதல் உணவு என்ன என்பதை தேர்வு செய்வதில் அலட்சியம் காட்டக் கூடாது. நாம் முதலில் சாப்பிடக் கூடிய உணவு நம் உடலுக்கும், உள்ளுறுப்புகளுக்கும் அந்த நாள்...
எண்ணெய் குளியல் எப்படி செய்ய வேண்டும்

எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பலன்?

எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பயன்? நாம் எல்லோரும் தினமும் குளிக்கிறோம். வாரத்தில் இரு நாட்கள் தலைக்கு குளிக்க வேண்டும். விசேஷ நாட்களிலும், பூஜையில் கலந்து கொள்ளும் போதும் தலைக்கு குளிக்க வேண்டும். இது...

ஆட்டு தலைக்கறி குழம்பு செய்வது எப்படி

ஆட்டு தலைக்கறி குழம்பு ஆட்டுக்கறியில் புரதச் சத்து அதிகளவில் உள்ளது. ஆட்டின் ஒவ்வொரு உறுப்பும் பல்வேறு வித பலன்களை தருகிறது. சிலருக்கு ஆட்டின் தலைக்கறி மிகவும் விருப்ப உணவாக இருக்கும். தலைக்கறியை சாப்பிட்டால் இதயநோய்கள்...
ஆட்டுக்கால் பாயா குருமா

ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி

ஆட்டுக்கால் பாயா ஆட்டுக்கால் கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் மிக பிரபலம். அதிலும் ஆட்டுகாலை வைத்து செய்யப்படும் பாயா டிபன் வகைகளுக்கு சிறந்த சைடுடிஷ் ஆகும். ஆட்டுகால் எப்படி செய்வது என்பதை பின்வருமாறு பார்ப்போம். ஆட்டுக்கால்...
உடல் எடையை குறைக்கும் தேநீர்

உடல் எடையை குறைக்கும் ஒரு அருமையான டீ

உடல் எடையை குறைக்கும் ஒரு அருமையான டீ உடல் எடை அதிகரிப்பு இன்று அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையாக உருவாகியுள்ளது. உடல் எடை அதிகரிப்பால் உடல் சோர்வு, மந்த நிலை, இரத்த அழுத்த்தம், சர்க்கரை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.