எந்த ராசிக்கு எந்த ராசிக்கல் அணிந்தால் அதிஷ்டம் உண்டாகும்

இராசிக்கல் அணிவதால் உண்டாகும் பலன்கள்

ஒவ்வொரு ராசியினருக்கும் – ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு விதமான  ராசிக்கல்  நாம் அணிய வேண்டும். நம் கைவிரல்களில்  அணியும் ராசிக்கல் மோதிரமானது, நமக்கு கூடுதல் பலம் தந்து  நமக்கு சாதகமான சூழல்களை உருவாக்கி, நம்மை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது.

ஒவ்வொரு ராசிக்கும் பொருத்தமான ராசிக்கல்லைத்  தான் அணியவேண்டும். அப்போதுதான்  நமக்கு நல்ல பலன்கள் கிட்டும். துன்பங்கள் விலகும். எந்த ராசிக்காரர்கள் எந்த ராசிக்கல் அணியவேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பவளம்மேஷம் 

மேஷ ராசிக்காரர்கள் அணியவேண்டிய ராசிக்கல் பவளம். மேலும் செவ்வாய் திசை நடப்பவர்களும் பவளம் அணியலாம் . இதை அணிந்தால் தெய்வ அனுகூலம் கிடைக்கும். நம் கோபத்தைக்  குறைத்து மனநிம்மதியைத் தரும்.

பல்வேறு அதிர்ஷ்டங்களைத் தரும். நல்லறிவையும், துணிவையும் கொடுக்கும். தீய சிந்தனைகளை நம் மனதுக்குள் அனுமதிக்காது. நமக்கு தைரியத்தை கொடுக்கும். தொழில் செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்தும். பதவி உயர்வு கிடைக்கும்.

வைரம்ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் அணியவேண்டியது வைரம். மேலும் சுக்கிர திசை நடப்பவர்களும் வைரம் அணியலாம். இதை அணிந்தால் நல்ல மகிழ்ச்சி கிடைக்கும். வசீகரமான தோற்றத்தைத் தரும்.

அதிர்ஷ்டத்தை உருவாக்கும். உடல் மற்றும் மனதுக்கு நல்ல உற்சாகத்தை அளிக்கக் கூடியது.  வெற்றி, செல்வம், அதிர்ஷ்டம் போன்றவற்றை கொடுக்கக் கூடியது . நமக்கு தன்னம்பிக்கையைத் தரக் கூடியது. ஆண்- பெண் உறவை வலுப்படுத்தும்.. நல்ல தூக்கத்தைக் கொடுக்கக் கூடியது. வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

மரகதக்கல்மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். மேலும் புதன் திசை நடப்பவர்களும் மரகதம் அணியலாம். இது தொழில் விருத்தியைக் கொடுக்கும். அதிர்ஷ்டம் தரும்.

நல்ல கற்பனை வளத்தைக் கொடுக்கும். மலட்டுத்தன்மையைப் போக்கும். தீய சக்திகளிடம் இருந்து நம்மைக் காக்கும்.
நல்ல கல்வியைக் கொடுக்கும். பேச்சாற்றல் வளரும். நினைவாற்றலைப் பெருக்கும்.

முத்துகடகம்

கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து. மேலும் சந்திர திசை நடப்பவர்களும் முத்து அணியலாம். இது செல்வ விருத்தியைக் கொடுக்கும். அமைதியையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியது.

ஆண்களுக்கு தன்னம்பிக்கையையும், பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வையும் தரும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமையைத் தரும்.
நீண்ட ஆயுளைத் தரும். உறவுகளை வலுப்படுத்தும். நட்பினைப் பாதுகாக்கும்.

மாணிக்கம்சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம்.  மேலும் சூரிய திசை நடப்பவர்களும் மாணிக்கம் அணியலாம். இது மிகுந்த அதிர்ஷ்டத்தைத் தரும். வாழ்வில் உயர்வைத் தரும்.

புத்தி சாதுர்யத்தைத் தரக் கூடியது. நீண்ட ஆயுளைக் கொடுக்கும். மன உறுதியையும், தன்னம்பிக்ககையையும் தரும்.
கருத்து  வேறுபாடுகளை போக்கும். நல்ல  தூக்கத்தைத்  தரும். உணர்ச்சி வசப்படுதலைக் கட்டுப்படுத்தும். நினைவாற்றலை அதிகப்படுத்தும். தொழிலில் லாபம் கிட்டும்.

மரகதக்கல்கன்னி

கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். மேலும் சுக்கிர திசை நடப்பவர்களும் மரகதம் அணியலாம். இது தொழில் விருத்தியையும், அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது. மலட்டுத் தன்மையைப் போக்கும்.

காதல் உணர்வைத் தரும். சிறந்த கல்வியைக் கொடுக்கும். பில்லி, சூனியங்களில் இருந்து நம்மைக் காக்கும். பேச்சாற்றலை வளர்க்கும்.
உடல் வளர்ச்சி பெரும். மரகதக் கல்லை உற்று நோக்கினாலே புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியது.

வைரம்துலாம்

துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். மேலும் சுக்கிர திசை நடப்பவர்களும் வைரம் அணியலாம். இது மகிழ்ச்சியையும், யோகத்தையும் தரக்கூடியது. நல்ல வசீகரத்தைத் தரும்.

நெஞ்சுறுதியைத் தரும். தன்னம்பிக்கையை வளர்க்கும். ஆண்-பெண் உறவை வலுப்படுத்தும். நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.
பிறருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைப் போக்கும். பேச்சாற்றலைத் தரும். வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் அதிகம்.

பவளம்விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். மேலும் செவ்வாய் மற்றும் கேது திசை நடப்பவர்களும் பவளம் அணியலாம். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிட்டும். கோபம் குறையும். அதிர்ஷ்டம் உண்டாகும். நல்ல துணிச்சலைத் தரும்.

பொறாமை, வெறுப்பு போன்ற தீய குணங்களைப் போக்கி ஞானத்தைக் கொடுக்கும். பயத்தைப்  போக்கும். தொழில் செய்யும் வாய்ப்புகள் உருவாகும். பதவி உயர்வு கிடைக்கும்

கனகபுஷ்பராகம்தனுசு 

தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். குரு திசை நடப்பவர்களும் கனக புஷ்பராகம் அணியலாம். இதை அணிந்தால் மன நிம்மதியைக் கொடுக்கும், நல்ல செல்வத்தைக் கொடுக்கும்.

இந்தக் கல் அணிவது நமக்கு கம்பீரத்தைக் கொடுக்கும். துணிச்சல் பிறக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். திருமணத் தடை நீங்கும். வீடு கட்டும் வாய்ப்பு உண்டாகும். பெரும்புகழ் கிடைக்கும். சூழ்ச்சிகளில் இருந்து நம்மை விடுவிக்கும்.

நீலக்கல்மகரம்

மகர ராசிக்காரர்கள் அணிய வேண்டியது நீலக்கல். மேலும் சனி திசை நடப்பவர்களும் நீலக்கல் அணியலாம். இதை அணிந்தால் சமூகத்தில் நம் செல்வாக்கு உயரும். தெய்வீக சிந்தனையைத் தரும். நல்ல செல்வ வளத்தைக் கொடுக்கும் .

நல்ல பண்புகளைக் கொடுக்கும். உடல்பலத்தை அதிகரிக்கும் . ஆழ்மனது தெளிவை கொடுக்கும். பகையைப் போக்கக் கூடியது.
வம்பு, வழக்கு இருந்தால் நமக்குச் சாதகமான சூழலை உருவாக்கும்.

நீலக்கல்கும்பம் 

கும்ப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது நீலக்கல். ராகு மற்றும் சனி திசை நடப்பவர்களும் நீலக்கல் அணியலாம் இதை அணிவதால் செல்வ வளம் பெருகும். சமூகத்தில் நல்ல செல்வாக்கு கிடைக்கும்.

திருஷ்டியைத் தடுக்கும். ஞானம், சாந்தம் கொடுக்கும். உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரவல்லது. தியானத்துக்கு உகந்தது. திருமண உறவை மேம்படுத்தும். வீண் வம்பு, வழக்குகளில் இருந்து  நம்மைக் காப்பாற்றும். பெருந்தன்மையை வளர்க்கும்.

கனகபுஷ்பராகம்மீனம் 

மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். வியாழன் திசை நடப்பவர்களும் கனக புஷ்பராகம் அணியலாம். இதை அணிந்தால் செல்வ விருத்தியைக் கொடுக்கும். தோற்றத்தில் கம்பீரம் உண்டாகும்.

துணிச்சல் பிறக்கும். பொருளாதார முன்னேற்றம் கிட்டும். திருமணத் தடை நீங்கும். கோபம் குறையும். நிலம், வீடு, வாகனம், வாங்கும் நிலை உருவாகும். பகை, சதி, சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து காக்கும். நல்ல நட்பைக் கொடுக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

coconut barfi preperation

எளிமையான முறையில் தேங்காய் பர்ஃபி செய்வது எப்படி ?

தேங்காய் பர்ஃபி தேவையான பொருட்கள் துருவிய தேங்காய் - 1 கப் சர்க்கரை - 1 கப் தண்ணீர் - 1/4 கப் முந்திரி - 1 டேபிள் ஸ்பூன் நெய் - 4...
மட்டன் மசாலா

மதுரை மட்டன் மசாலா 

மதுரை மட்டன் மசாலா தேவையான பொருட்கள் மட்டன் – ½ கிலோ வெங்காயம் - 2  ( பொடியாக நறுக்கியது ) தனியாத்தூள் - 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 1...
அத்திப்பழம் நன்மைகள்

அத்திப்பழம் பயன்கள் | அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள்

அத்திப்பழம் அத்திப்பழம் மரம் ‘மோரேசி’ Moraceae என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. அத்தியின் அறிவியல் பெயர் Ficus glomerata மற்றும் Ficus auriculate ஆகும். அத்திப்பழம் ஆங்கிலத்தில் 'fig' என அழைக்கபடுகிறது. அத்திமரம் களிமண்...
புலி கனவு பலன்கள்

காட்டு விலங்குகளை கனவில் கண்டால் என்ன பலன்

காட்டு விலங்குகளை கனவில் கண்டால் கனவு என்பது ஆழ்ந்த தூக்கத்தில் நாம் இருக்கும்போது நம்மை அறியாமல் வருவதாகும். குறிப்பிட்ட சில சமயங்களில், நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு....
கண் திருஷ்டி நீங்க

உங்கள் குழந்தைக்கு கண் திருஷ்டி நீங்க செய்ய வேண்டியவை

உங்கள் குழந்தைக்கு திருஷ்டி படாமல் இருக்க பொதுவாக குழந்தைகளுக்கு திருஷ்டி சுற்றி போட... கீழ்கண்ட முறைகளை பெரியோர்கள் தொன்று தொட்டு கடைபிடித்து வந்து உள்ளனர். அவைகள் பின்வருமாறு... 1. ஒருகைப்பிடி உப்பை எடுத்து கையை நன்றாக...
வீட்டில் எங்கு விளக்கு ஏற்ற வேண்டும்

வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டிய இடங்கள்?

வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டிய இடங்கள்? தீபம் ஏற்றி வழிபடுவது இந்துக்களின் வழிபாட்டில் முக்கியமான ஒன்றாகும். ஒளி நிறைந்துள்ள இடத்தில் தான் அதிக நேர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்கும். தினந்தோறும் வீட்டில் காலையும், மாலையும் விளக்கேற்றி...
அரிசி கழுவிய தண்ணீர் நன்மைகள்

அரிசி கழுவிய தண்ணீரில் மறைந்திருக்கும் அற்புத பயன்கள்

அரிசி கழுவிய தண்ணீர் நன்மைகள்  நம் சமையலைறையில் உள்ள பல பொருட்கள் நமது அழகை தக்கவைத்துக் கொள்ள பயன்படுகிறது. உதாரணமாக மஞ்சள் தூள், தயிர், அரிசி மாவு, தக்காளி, வெள்ளரிக்காய், இன்னும் பல உள்ளன....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.