மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்
மிதுன லக்னத்தின் அதிபதி புதன் பகவானவார். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் அழகானவர்கள், மற்றும் அறிவாளிகள் என்பதால் சாதுரியமான செயல்களை செய்வார்கள். நல்ல பேச்சாற்றல் மிக்கவராகவும், கணக்கில் ஆர்வம் மிக்கவராகவும் இருப்பார்கள். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலோனோர் சற்று மாநிறமாக இருப்பார்கள். எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற மனதை கொண்டவர்கள். இவர்களுக்கு கற்பனை சக்தி அதிகம் இருக்கும். சிற்றின்பங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.
நல்ல கம்பீரம், மற்றும் மிடுக்கான தோற்றம் கொண்டவராக இருப்பார்கள். எதையும் அலசி ஆராயும் மனபோக்கு கொண்டவர்கள். பல தொழில் செய்பவராகவும், சுறுசுறுப்பு மிக்கவர்களாவும், அதேநேரம் எடுத்த காரியத்தை முடிப்பவர்களாவும் இருப்பார்கள். ஆனால் இவர்களிடம் காணப்படும் முக்கிய குறை என்னவென்றால் எதையும் முழு மூச்சாக செய்ய மாட்டார்கள். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போலதான் இவர்களின் மனநிலை இருக்கும். இதை சரிசெய்து விட்டால் இவர்கள் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் முகத்தில் புன்சிரிப்பு எப்போதும் இருக்கும். எதையும் பேசி பேசியே சாதித்து விடுவார்கள். செல்வம் ஈட்டுவதில் ஆதிக விருப்பம் கொண்டவர்கள். யாரையும் அவ்வளவு எளிதில் நம்ப மாட்டார்கள். வாழ்கையின் முற்பகுதியை விட பிற்பகுதி அதிக சிறப்பாக இருக்கும். எல்லா விதமான சுகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்னும் விருப்பம் கொண்டவர்கள். புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். இவர்கள் சகல கலைகளையும் மற்றும் விஞ்ஞான அறிவையும், பெற்று விளங்குவார்கள்.
மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் புகழ் பெற வேண்டும் என்னும் விருப்பம் கொண்டவர்கள். தன் குடும்பம் நன்றாக இருப்பதற்காக கடுமையாக உழைக்கும் உழைப்பாளிகள். சுயகௌரவதிற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். யாராவது இவர்களை மரியாதை குறைவாக நடத்தினால் பொறுத்து கொள்ள மாட்டார்கள். இவர்களுக்கு சமுகத்தில் நல்ல பெயர் இருக்கும். இவர்கள் உடல் ஆரோக்கியதிற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் நல்ல உடல்வாகையும், உறுதியான மனநிலையையும் பெற்றவராக இருப்பார்கள். இவர்களுக்கு குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வரலாம். இவர்கள் சுறுசுறுப்பும், புத்திசாலித்தனமும் ஒருசேர கொண்டவர்கள்.
இவர்களின் வாழ்க்கைதுணை வடக்கு மற்றும் கிழக்கு திசையிலிருந்து வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. இவர்களின் வாழ்க்கைத் துணையானவர் தெய்வ நம்பிக்கை மிக்கவர்களாவும், பழைமையான விஷயங்களின் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் வாழ்க்கைத் துணை அதிக சிக்கனம் கொண்டவராக இருப்பார். மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குழந்தைகள் பிறந்த பிறகு தான் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இவர்கள் திருமணத்தடைகள் அகல சிவபெருமான் மற்றும் அம்மனை வணங்கி வரலாம்.
மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.