விரதம் இருப்பது ஏன்?

விரதம் இருப்பது ஏன்?

நாம் கடவுளை நினைத்து, பக்தியோடு விரதம் இருக்கும் போது சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

விரதம் இருப்பது மனதின் அமைதிக்கும், உடலின் ஆரோக்கியத்திற்கும், நினைத்த காரியங்கள் நிறைவேறவும், இறைவனை நெருங்கவும் உதவுகிறது.

விரதம் என்ற சொல்லுக்கு கஷ்டப்பட்டு இருத்தல் என்று பொருள்.
விரதமிருப்பவர், அன்று முழுவதும் சுவாமியின் அருகிலேயே இருப்பதாக எண்ண வேண்டும்.

விரதம் இருக்கும் முறை கடவுளை எண்ணி விரதம் மேற்கொள்வதால் நமது உள்ளம் தூய்மை அடைவதுடன் அறியாமையினால் நாம் செய்த தீவினைகளும், பாவங்களும் நம்மை விட்டு விலகும் என்பது நம்பிக்கை.

விரதம் மேற்கொள்ளும் போது கடைப்பிடிக்க வேண்டியவை :

சதாசர்வ காலமும் மனதில் இறைவனை மட்டுமே எண்ணி துதித்தல் வேண்டும்.

தம்மை விதவிதமாக அலங்காரம் செய்து கொள்ளாமலும், நாவிற்கு சுவையான உணவு வகைகளை உண்ணாமலும் இருத்தல் வேண்டும்.

இன்முகத்தோடு நாள்முழுவதும் இருத்தல் வேண்டும்.

கேளிக்கைச் செயல்களிலோ, கோபம் கொள்வதோ,வீண் விவாதங்களிலோ ஈடுபடுதலோ கூடாது.

பிறரைப்பற்றி புறம் பேசுவதோ, குறை கூறுவதோ கண்டிப்பாக கூடாது.

அடுத்தவர் மனம் துன்பப்படும்படியான தீய சொற்களைப் பேசக்கூடாது.

விரதம் இருப்பது ஏன் மனதில் தான் என்ற கர்வத்தை அறவே அகற்ற வேண்டும். விரும்பத்தகாத செயல்களை செய்யக்கூடாது.

அதிகமாக தான தர்மம் செய்ய வேண்டும். அது பொருளாகவோ அல்லது உணவாகவோ பிறர் தேவை அறிந்து தானம் செய்ய வேண்டும்.

விரதம் மேற்கொள்ளும் போது அரிசி சாதம், வெங்காயம், பூண்டு இவற்றையும் தவிர்த்து விட வேண்டும். ஏன் என்றால் அரிசி, வெங்காயம், பூண்டு இவற்றைச் சாப்பிட்டால் தூக்கம் வரும். சிந்தனை தடுமாறும். இதனால் தான் இவற்றை வேண்டாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

விரத காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே உயர்வானது.

அப்படி இருக்க இயலாதவர்கள் பாலும் பழமும் அருந்தலாம். சமஸ்கிருதத்தில் ஃபல் என்றால் பழம் என்று பொருள்படும். ஆஹார் என்பது ஆகாரம் அல்லது உணவு என்பதாகும். ஃபல் + ஆஹார் = பலஹார் என்று ஆகிறது.

காலபோக்கில் பழத்தை உணவாகக் கொள்வதே பலகாரம் என்பதாயிற்று. இதற்குப் பதிலாக சாதம் தவிர்த்த பலவித ஆகாரங்களைச் சாப்பிடுவது தான் பலகாரம் என்ற சொல்லின் பொருளாக இக்காலத்தில் கருதப்படுகிறது. இது தவறு. இது உண்மையான விரதம் ஆகாது.

ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலைப் புதுப்பிப்பதே இறை விரதத்தின் நோக்கமாகும்.

எனவே சிற்றுண்டிகளைச் சாப்பிட்டு விரதம் இருப்பதை விட, பழங்களையும் பாலையும் மட்டும் அருந்தி இறைவனை நினைத்து விரதம் இருப்பதே சிறந்த விரதம் ஆகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பிறந்த தேதி பலன்

நீங்கள் இந்த தேதியில் பிறந்தவரா, உங்கள் பிறந்த தேதி பலன்கள் இதோ

பிறந்த தேதி பலன்கள் ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதிரியான குணநலன்கள் இருக்கும் என்பது போல், குறிப்பிட்ட எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கும் குணநலன்கள் மாறுபடும். அதன்படி அவர்களின் செயல்பாடும், பலன்களும் அமையும்...

ஆட்டு தலைக்கறி குழம்பு செய்வது எப்படி

ஆட்டு தலைக்கறி குழம்பு ஆட்டுக்கறியில் புரதச் சத்து அதிகளவில் உள்ளது. ஆட்டின் ஒவ்வொரு உறுப்பும் பல்வேறு வித பலன்களை தருகிறது. சிலருக்கு ஆட்டின் தலைக்கறி மிகவும் விருப்ப உணவாக இருக்கும். தலைக்கறியை சாப்பிட்டால் இதயநோய்கள்...
நாடி பொருத்தம் என்றால் என்ன

நாடி பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

நாடி பொருத்தம் என்றால் என்ன? நாடி பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். குடும்பம் வாழையடி வாழையாக தழைக்கும். ஆண், பெண் இருவருக்கும் நாடி பொருத்தம் பார்த்து திருமணம் செய்து முடித்தால் நோய் நொடி...
watermelon payasam

உடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி

குளு குளு தர்பூசணி பாயாசம் தேவையான பொருட்கள் தர்பூசணி – 2 கப் ( பொடியாக நறுக்கியது ) நெய் – தேவையான அளவு முந்திரி, திராட்சை – தேவையான அளவு சர்க்கரை –...
கேழ்வரகு முறுக்கு செய்வது எப்படி

சத்தான கேழ்வரகு முறுக்கு செய்முறை

கேழ்வரகு முறுக்கு தேவையான பொருட்கள் கேழ்வரகு மாவு – 500 கிராம் அரிசி மாவு - 50 கிராம் உடைத்த கடலை மாவு – 50 கிராம் சீரகம் – 1 ஸ்பூன் வெண்ணை...
துவிதியை திதி பலன்கள்

துவிதியை திதி பலன்கள், துவிதியை திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

துவிதியை திதி ‘துவி’ என்றால் இரண்டு, இது ஒரு வடமொழி சொல்லாகும். இது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து இரண்டாவது நாள் ஆகும். அமாவாசைக்கு அடுத்து வரும் துவிதியை சுக்கில பட்ச துவிதியை என்றும்,...
ஜோதிடத்தில் யோகங்கள்

யோகங்கள் என்றால் என்ன? பலவகையான ஜாதக யோகங்கள்

ஜாதகத்தில் யோகங்கள் யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் ஏற்படும் யோக பலனை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது அதற்கு எதிரான கெடு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.