பதினெட்டு படிகளின் தத்துவம்

பதினெட்டு படிகளின் தத்துவம்

ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு தனிப்பட்ட சிறப்பு உண்டு. அந்த வகையில், பதினெட்டு என்ற எண்ணிற்கு பல்வேறு வரலாற்று சிறப்புகள் உள்ளன.

பாரதப் போர் நடைபெற்றது 18 நாட்கள். இராமயணப் போர் நடைபெற்றது 18 மாதங்கள், தேவ, அசுரப்போர் நடைபெற்றது 18 ஆண்டுகள். கிருஷ்ண பரமாத்மா அருளிய பகவத் கீதையின் அத்தியாயங்கள் 18. எனவே பதினெட்டு என்ற எண் மிக முக்கியத்துவமானது.

பதினெட்டு படிகளின் சிறப்புகள்நம்முடைய பிறப்பு இறப்புக்குக் காரணமான பிறவிப்பெருங்கடலைக் கடக்க விடாமல், நம்மை முக்தி நெறிக்கு ஆட்படுத்தாமல், நமது வினைகள் நம்மை வாட்டி வதைக்கின்றன. இவற்றைக் களையவே, சபரிமலையில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படியும் நம்முடைய வினைகளை களையும் வகையில், தீய குணங்களை விட்டு விலக்கி, பிறவிப் பெருங்கடலிலிருந்து முக்தி அடைய வழிகாட்டுகிறது.

முதல் படி – பிறப்பு நிலையற்றது:

நாம் செய்யும் நன்மைகளும், தீமைகளும் நமது புண்ணிய பாவங்களை நிர்ணயிக்கும் என்ற உண்மையை உணர்ந்து, இறையருளால் முக்தி அடைய வேண்டும் என்ற ஆத்ம உணர்வினை அளிக்கிறது. இதுவே விஷாத யோகமாகும்.

இரண்டாம் படி – சாங்கிய யோகம்:

பரம்பொருளை குருவாக உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது.

மூன்றாம் படி – கர்ம யோகம்:

உபதேசம் மட்டும் போதாது. மனம் பக்குவம் அடைய வேண்டும். அதாவது, பலனைக் கருதாமல் கடமையைச் செய்யும் பக்குவத்தை மூன்றாம்படி உணர்த்துகிறது.

நான்காம் படி – ஞான யோகம்:

பாவ, புண்ணியங்களைப் பற்றிக் கவலைப்படாமல், எதன் மீதும் பற்றின்றி பரமனை அடையும் வழியில் முன்னேறும் பாதையைக் காட்டுவது.

ஐந்தாம் படி – சன்னியாச யோகம்:

நான் எனது என்ற சிந்தனை இன்றி, எல்லாவற்றையும் துறந்து, இறைச்சிந்தனை ஒன்றையே வாழ்க்கையின் இலட்சியமாகக் கருதி செயல்படும் வழியினைக் காட்டுகிறது.

பதினெட்டு படி சொல்லும் பொருள்ஆறாம் படி – தியான யோகம்:

இறைவனால் அளிக்கப்பட்ட ஐம்புலன்களான மெய், வாய், கண், மூக்கு, காது இவற்றை நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து, இறைச் சிந்தனையால் நிரப்பி நல்வழிப்படுத்தும் வழியினைக் காட்டவே ஆறாம் படி அமைந்துள்ளது.

ஏழாம் படி – ஞானவிஞ்ஞான யோகம்:

அனைத்தும் பிரம்மமே என்ற உண்மையை உணர வைக்கிறது.

எட்டாம் படி – அட்சர பிரம்ம யோகம்:

எப்போதும் இறைச்சிந்தனையில் மூழ்கி, வேறு சிந்தனைகளற்று இருப்பது.

ஒன்பதாம் படி – ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்:

கடவுள் பக்தி மட்டும் இருந்தால் பயனில்லை; உண்மையான பக்தி, ஆன்மிகத்தை உணர வைத்து, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண வைப்பது.

பத்தாம் படி – விபூதி யோகம்:

அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய குணங்களைக் கண்டாலும், அதை இறைவனாகவே உணர்வது.

பதினொன்றாம் படி – விஸ்வரூப தரிசன யோகம்:

உலகில் ஆண்டவனையும் ஆண்டவனில் உலகத்தையும் பார்க்கும் மனப் பக்குவத்தைப் பெறுவது.

பன்னிரண்டாம் படி – பக்தி யோகம்:

இன்ப, துன்ப, விருப்பு வெறுப்பு, ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடுகளை நீக்கி அனைத்திலும் சமத்துவத்தைக் காண வைக்கிறது.

பதிமூன்றாம் படி – க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்:

எல்லா உயிர்களிலும் இறைவனே வீற்றிருந்து, அவ்வுயிர்களை இயக்குகிறார் என்ற உண்மை நிலையினை உணர வைக்கிறது.

பதினான்காம் படி – குணத்ரய விபாக யோகம்:

பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களைக் களைந்து இறையருளுக்குப் பாத்திரமாவதை காட்டுகிறது.

பதினைந்தாம் படி – புருஷோத்தம யோகம்:

தீய குணங்களை விட்டொழித்து, நற்குணங்களை மட்டும் வளர்த்துக் கொண்டு, நமக்குள் தெய்வாம்சத்தை அதிகரித்துக் கொள்ள வழிகாட்டுகிறது.

பதினாறாம் படி – தைவாசுரஸம்பத் விபாக யோகம்:

இறைவனது படைப்பில் அனைவரும் சமமானவர்களே என்ற உண்மை நிலையினை உணர்த்தி யாரிடமும் அகங்காரம் இல்லாமல் இருக்க வைக்க உதவுகிறது.

பதினேழாம் படி – ச்ரத்தாத்ரய விபாக யோகம்:

சர்வமும் பிரம்ம மயம் என்ற நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு பரபிரம்ம ஞானம் பெருவதற்கு வழிகாட்டுகிறது.

பதினெட்டாம் படி – மோட்ச சன்னியாச யோகம்:

பதினெட்டு படிகளையும் படிப்படியாய் அடியெடுத்துக் கடந்து வந்தால் நம் கண் எதிரே காட்சி தரும் மணிகண்டப் பிரபு பேரொளியாய் தரிசனம் தந்து, நமது வாழ்விற்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயப்பனின் பதினெட்டு படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ராசி அதிபதி பொருத்தம் என்றால் என்ன

ராசி அதிபதி பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்க்க வேண்டும்

ராசி அதிபதி பொருத்தம் என்றால் என்ன? ராசி அதிபதி பொருத்தம் என்பது குடும்பம் சந்தோஷமாக இருக்க பார்க்கப்படும் பொருத்தம் ஆகும். ராசி அதிபதி பொருத்தம் இருந்தால் குடும்பம் சுபிட்சமாக இருக்கும். பிறக்கும் பிள்ளைகள் யோகமாக...
நாட்டுக் கோழி குழம்பு செய்வது எப்படி

நாட்டுக் கோழி குழம்பு செய்வது எப்படி?

நாட்டுக் கோழி குழம்பு நாட்டு கோழி குழம்பு உடலுக்கு மிகவும் நல்லது. அது உடலுக்கு மிகுந்த பலத்தை கொடுக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். நாட்டு கோழி குழம்பை எவ்வாறு எளிதாக...
அப்பம் செய்யும் முறை

இனிப்பு அப்பம் செய்வது எப்படி

அப்பம் இறைவனுக்கு படைக்கும் நெய்வேத்தியங்களில் முக்கியமான ஒன்று இனிப்பு அப்பம் ஆகும். இந்த அப்பம் சுவையானது மட்டுமல்லாமல் செய்வதும் மிகவும் எளிதான ஒரு பலகாரம் ஆகும். சுவையான இனிப்பு அப்பம் எப்படி செய்வது என்பதை...
watermelon payasam

உடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி

குளு குளு தர்பூசணி பாயாசம் தேவையான பொருட்கள் தர்பூசணி – 2 கப் ( பொடியாக நறுக்கியது ) நெய் – தேவையான அளவு முந்திரி, திராட்சை – தேவையான அளவு சர்க்கரை –...
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் பரணி நட்சத்திரத்தின் இராசி : மேஷம் பரணி நட்சத்திரத்தின் அதிபதி : சுக்கிரன் பரணி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : செவ்வாய் பரணி நட்சத்திரத்தின் அதிதேவதை – துர்க்கை பரணி நட்சத்திரத்தின் பரிகார தெய்வம்...
ஜாதிக்காய் மருத்துவ நன்மைகள்

ஜாதிக்காய் மருத்துவ குணங்கள்

ஜாதிக்காய் வரலாறு ஜாதிக்காய் முதன் முதலில் மொலுக்கஸ் தீவுகளில் கண்டுபிடிக்கபட்டது. இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சுமார் 3000 எக்டர் பரப்பளவில் ஜாதிக்காய் பயிர் செய்யப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல்...

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் புனர்பூசம் நட்சத்திரத்தின் இராசி : மிதுனம் மற்றும் கடகம் புனர்பூசம் நட்சத்திரத்தின் அதிபதி : குரு புனர்பூசம் 1 முதல் 3 பாத நட்சத்திரத்தின் இராசி அதிபதி - மிதுனம் :...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.