Home Tags இறால் ரோல்

Tag: இறால் ரோல்

இறால் சீஸ் ரோல் – Prawn Cheese Roll

இறால் சீஸ் ரோல்

இறால் சீஸ் ரோல்

இறால் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறால் உணவு பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. காரணம் இது சுவை, மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவாகவும் திகழ்கிறது. அப்படிப்பட்ட இறாலை வைத்து இறால் சீஸ் ரோல் செய்வது எப்படி என பார்ப்போம்.

இறால் சீஸ் ரோல்

தேவையான பொருட்கள்

சப்பாத்தி செய்ய

  1. கோதுமை மாவு – 2 கப்
  2. எண்ணெய் – சிறிதளவு
  3. தண்ணீர் – தேவையான அளவு (வெதுவெதுப்பான நீர் )
  4. உப்பு – தேவையான அளவு

ஸ்டஃப்பிங் செய்ய

  1. இறால் – 250 கிராம்
  2. சீஸ் – 100 கிராம்
  3. பெரிய வெங்காயம் – 2 ( பொடியாக நறுக்கியது )
  4. தக்காளி – 1 ( பொடியாக நறுக்கியது )
  5. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  6. குடைமிளகாய் – 1/4 கப்
  7. கரம் மசாலா – ½ ஸ்பூன்
  8. மிளகாய்த்தூள் – ½ ஸ்பூன்
  9. சிக்கன் மசாலாத்தூள் – ½ ஸ்பூன்
  10. மல்லித்தழை – சிறிதளவு ( பொடியாக நறுக்கியது )
  11. வெண்ணெய் – சிறிதளவு
  12. உப்பு – தேவையான அளவு
  13. எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் கோதுமை மாவினை சேர்த்துக் கொள்ளவும்.
  2. கோதுமை மாவுடன் தேவையான அளவு உப்பு, சிறிதளவு எண்ணெய், கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. 2 மணி நேரத்திற்கு பின் ஊறிய மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பின் சப்பாத்திக் கட்டையில் வைத்து தேய்த்து எடுக்கவும்.
    பின்னர் சப்பாத்தியை தோசைக் கல்லில் பொட்டு சுட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  4. இறாலை சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
    ஸ்டப்பிங் செய்வதற்கு ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  5. எண்ணெய் சூடானதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு குழைவாக வதக்கவும்.
  6. பின் 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.
    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  7. பின்னர் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  8. குடைமிளகாய் வதங்கியவுடன் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்க்கவும்.
  9. இறால் சிறிதளவு வதங்கியதும் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள், சிக்கன் மசாலா சேர்த்து நன்கு கிளறவும்.
  10. மசாலாவின் பச்சை வாசனை போன பின் சிரிதளவு தண்ணீர் தெளித்து கலந்து விடவும்.
  11. கடைசியாக பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி கிளறி இறக்கவும்.
  12. இப்போது சுட்டு வைத்துள்ள சப்பாத்தியில் கொஞ்சம் வெண்ணெய் தடவி அதற்க்கு மேல் இறால் கலவையை வைக்கவும்.
    பின்னர் அதன் மேல் சீஸ் துருவல் சேர்த்து ரோல் செய்து பரிமாறவும்.
    சுவையான இறால் சீஸ் ரோல் தயார்.