Home Tags கோழி ரசம் வைப்பது எப்படி

Tag: கோழி ரசம் வைப்பது எப்படி

செட்டிநாடு கோழி ரசம்

செட்டிநாடு கோழி ரசம்

செட்டிநாடு கோழி ரசம்

செட்டிநாடு கோழி ரசம் தேவையான பொருட்கள்

  1. சிக்கன் – ½ கிலோ
  2. பட்டை – 1 துண்டு
  3. புளி – சிறிதளவு
  4. தனியாத் தூள் – ½ ஸ்பூன்
  5. மிளகாய்த் தூள் – ½ ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
  7. மிளகுத்தூள் – ½ ஸ்பூன்
  8. பச்சை மிளகாய் – 1
  9. இலவங்கம் – 2
  10. ஏலக்காய் – 2
  11. இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  12. வெங்காயம் – 2
  13. தக்காளி – 2
  14. கருவேப்பிலை – சிறிதளவு
  15. உப்பு – தேவையான அளவு
  16. எண்ணெய் – தேவையான அளவு
  17. கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை

  1. சிக்கனை முதலில் நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
  2. சுத்தம் செய்த வைத்துள்ள சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  3. ஒரு சிறிய எலுமிச்சை அளவு புளியை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.தேவையான அளவு தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
  4. வெங்காயம் மற்றும் தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  5. ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அது நன்கு காய்ந்ததும் அதில் ஏலக்காய், பட்டை, லவங்கம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  6. பின் அரைத்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்துக் கொள்ளவும். இத்துடன் பச்சை மிளகாயை கீரி சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம் தக்காளியின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  7. நன்கு வதங்கியதும் தனியாத் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள், மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வெட்டி வைத்துள்ள சிக்கனையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
  8. சிக்கன் நன்கு வதங்கியவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிக்கனை வேக விடவும்.
  9. சிக்கன் பாதி அளவிற்கு வெந்தவுடன் அதில் கரைத்து வடிகட்டி வைத்திருக்கும் புளித்தண்ணீரை சேர்த்துக் கொள்ளவும்.
  10. கடைசியாக கொஞ்சம் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான சுவையான செட்டிநாடு கோழி ரசம் தயார்.