Home Tags சிக்கன் கிரேவி செய்வது எப்படி

Tag: சிக்கன் கிரேவி செய்வது எப்படி

ஹோட்டல் சுவையில் தக்காளி சிக்கன் கிரேவி

சிக்கன் கிரேவி

தக்காளி சிக்கன் கிரேவி

இட்லி , தோசை, ஆப்பம், சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடக்கூடிய ருசியான தக்காளி சிக்கன் கிரேவி சுலபமாக எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

சிக்கன் கிரேவிதேவையான பொருட்கள்

  1. சிக்கன் – ½ கிலோ
  2. வெங்காயம் – 3
  3. தக்காளி – 4
  4. மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
  5. மிளகு தூள் – ½ ஸ்பூன்
  6. சீரகம் – ½ ஸ்பூன்
  7. பூண்டு – 10 பல்
  8. உப்பு – தேவையான அளவு
  9. எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

  1. சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
  2. சீரகம், மிளகு, மிளகாய்த்தூள், பூண்டு, தக்காளி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நைசாக பேஸ்ட் போல அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
  4. எண்ணெய் சூடானதும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  5. வெங்காயம் வதங்கியவுடன் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை போட்டு 2 நிமிடத்திற்கு வதக்கிக் கொள்ளவும்.
  6. சிக்கன் ஓரளவிற்கு வதங்கிய பின் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  7. தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும்.
  8. சிக்கன் வெந்து கிரேவி பதத்திற்கு வந்ததும் சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறினால் சுவையான தக்காளி சிக்கன் கிரேவி தாயார்.

செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வது எப்படி

chettinadu special chicken grevy

செட்டிநாடு சிக்கன் கிரேவி

செட்டிநாடு சிக்கன் கிரேவி தேவையான பொருட்கள்

  1. சிக்கன் –  ½ கிலோ
  2. தக்காளி – 2
  3. பெரிய வெங்காயம் – 2
  4. பச்சை மிளகாய் – 3
  5. இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
  6. தேங்காய் துருவல் – ½  கப்
  7. கசகசா – 1 ஸ்பூன்
  8. சோம்பு – 1 ஸ்பூன்
  9. எண்ணெய் – தேவையான அளவு
  10. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  11. மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
  12. மல்லி தூள் – 1 ஸ்பூன்
  13. உப்பு – தேவையான அளவு
  14. பட்டை – 1 பெரிய துண்டு
  15. கிராம்பு – 3
  16. சீரகம் – ¼ டீஸ்பூன்
  17. மிளகு – 1 ஸ்பூன்
  18. கொத்தமல்லித் தழை ஒரு கைப்பிடி

செய்முறை :

  1. முதலில் சிக்கனைச் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
  2. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
  3. சிக்கன் கிரேவி செய்ய ஒரு மசாலா தயார் செய்ய வேண்டும். அதற்க்கு ஒரு மிக்ஸி ஜாரில் ½ கப் தேங்காய் துருவல், சோம்பு, சீரகம்,மிளகு, கசகசா, முந்திரி சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  5. எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சிறிதளவு சோம்பு போட்டு தாளிக்கவும்.
  6. தாளித்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்க்கவும்.
  7. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  8. தக்காளி நன்கு கரையும் அளவிற்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.
  9. இஞ்சி பூண்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
  10. இஞ்சி பூண்டு வதங்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி கொள்ளவும்.
  11. சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து பிரட்டி விடவும்.
  12. மசாலா சிக்கனோடு நன்றாக கலந்து வரும் வரை மிதமான தீயில் வைத்து கிளறி விடவும்.
  13. இப்போது அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  14. பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கினால் சுவையான சிக்கன் கிரேவி தயார்.
  15. இறுதியாக கொஞ்சம் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறினால் சுவையாக இருக்கும்.