Home Tags சிக்கன் சூப் வகைகள்

Tag: சிக்கன் சூப் வகைகள்

சிக்கன் சூப் எளிதாக வீட்டிலேயே செய்வது எப்படி

சிக்கன் சூப் செய்வது எப்படி

சிக்கன் சூப்

உடல் நலிவுற்றவர்கள் காய்கறிகள் மற்றும் சூப்கள் அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். சூப் குடிப்பதால் உடல் பலப்படும், பசியை தூண்டும், ஜீரண சக்தியை அதிகரிக்கும், இளைத்த உடலை தேற்றும். மேலும் மழை மற்றும் பனி காலங்களில் ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகளை போக்க சூப்கள் உதவி புரிகின்றன. பல வகையான சூப்கள் இருந்தாலும் சிக்கன் சூப் விலை மலிவானது மற்றும் ஆரோக்கியமானது. அந்த வகையில் சிக்கன் சூப் எவ்வாறு எளிதாக வீட்டிலேயே செய்வது என்பதை பார்ப்போம்.

சிக்கன் சூப் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

1. கோழிக்கறி (எலும்புடன்) – 1/4 கிலோ
2. வெங்காயம் – 1
3. தக்காளி – 1
4. இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி
5. கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
6. மஞ்சள்தூள் – ¼ மேஜைக்கரண்டி
7. உப்பு – தேவையான அளவு
8. சீரகம் – ½ மேஜைக்கரண்டி
9. மிளகு தூள் – ½ மேஜைக்கரண்டி

செய்முறை

1. வெங்காயம், தக்காளி, மற்றும் கொத்தமல்லியை நன்றாக பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

2. கோழிக்கறியை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும்.

3. குக்கரில் 3 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு தாளிக்கவும்.

4. வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, சீரகம், மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கவும்.

5. மேற்கூறியவை நன்றாக வதங்கிய பிறகு அதனுடன் வெட்டி வைத்த கோழிக்கறி மற்றும் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி பின்னர் மூடி போட்டு 2 விசில் வரும் வரை நன்கு வேக விடவும்.

6. 2 விசில் வந்ததும் குக்கரை திறந்து அதனுடன் கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும். சுவையான சிக்கன் சூப் தயார்.