Home Tags செடிகள் கனவில் வந்தால்

Tag: செடிகள் கனவில் வந்தால்

மரங்கள் அல்லது செடிகள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

பூக்கள் கனவு பலன்கள்

மரங்கள் அல்லது செடிகள் கனவில் வந்தால்

பலருக்கும் பலவிதமான வித்தியாசமான கனவுகள் ஒவ்வொரு நாளும் வரும். அதில் ஒரு சில விசித்திரமான கனவுகள் அவர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த கனவு வந்தது, இதற்கு அர்த்தம் என்ன என்று தெரியாமல் குழம்பி போவார்கள். அவற்றில் ஒன்றுதான் மரங்கள் மற்றும் செடிகள் பற்றிய கனவு. அப்படி பல்வேறு விதமான மரம் மற்றும் செடிகள் கனவில் வந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.

மரம் கனவு பலன்கள்

1. அத்தி மரம் கனவில் வந்தால் குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அர்த்தம்.
2. ஈச்ச மரத்தை கனவில் கண்டால் சொந்த பந்தங்களிடம் விரோத மனப்பான்மை ஏற்படும் என்று பொருள்.
3. மலர் தோட்டம் அல்லது காய்கறி தோட்டம் கனவில் வருவது குடும்பம் விருத்தியடைய போவதற்கான அறிகுறியாகும்.
4. செடிகளுக்கும், மரங்களுக்கும் தண்ணீர் ஊற்றுவது போல கனவு வந்தால், நமக்கு நல்லது நடக்க போகிறது என்று பொருள்.
5. மரம் மற்றும் செடிகளில் இருந்து பூக்களை பறிப்பது போல கனவு வந்தால், நல்ல பலன்கள் கிடைக்கும் என்று அர்த்தம்.
6. துளசிச்செடியை கனவில் கண்டால் கடவுளின் ஆசீர்வாதம் முழுமையாக உங்களுக்கு கிடைக்கும் என்று அர்த்தம்.
7. தோட்டத்தில் பூக்கள், மற்றும் பழங்கள் கொத்து கொத்தாக இருப்பது போல கனவு கண்டால் குடும்பம் விருத்தி அடையும் என்று அர்த்தம்.
8. தோப்பில் இலை, பூ, காய் மற்றும் பழங்களை பறிப்பது போல கனவு வந்தால் வியாதிகள் வரும் என்று அர்த்தம்.
9. சப்பாத்திக்கள்ளி செடி அழிவது போல கனவில் வந்தால் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை நீங்கும் என்று பொருள்.
10. பட்டுப்போன மரம் கனவில் வந்தால், சோக நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடக்கும் என்று அர்த்தம்.
11. பூக்கள் நிறைந்த மரம் அல்லது செடிகள் கனவில் வந்தால், எண்ணிய செயல்கள் நல்லபடியாக நிறைவேறும் என்று அர்த்தம்.
12. பழங்கள் நிறைந்த மரம் அல்லது செடியைக் கனவில் கண்டால், பொன் பொருள் சேர்க்கை ஏற்படும், மற்றும் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்றும் அர்த்தம்.
13. காய்கறிகள் உள்ள செடி கனவில் வந்தால் காரியக் தடை, பொருள் நஷ்டம் ஏற்படும் என்று பொருள்.
14. பூச்செண்டு கனவில் வந்தால் பொருளாதாரத்தில் தோய்வு ஏற்படும் என்று அர்த்தம்.
15. மரம், செடி கொடிகள் பச்சை பசேல் என்று இருப்பது போல் கனவு கண்டால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்க போகிறது என்று பொருள்.
16. அடர்ந்த காட்டில் தனியாக நடந்து செல்வது போல் கனவு கண்டால் மிக பெரிய நல்ல விஷயம் ஒன்று நடக்க போகிறது என்று பொருள்.
17. மரத்தில் ஏறுவது போல் கனவு கண்டால் உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு வரப்போகிறது என்று பொருள் அர்த்தம்.
18. தோட்டத்தில் பூக்கள் பூத்துக் குலுங்குவதை போல கனவு கண்டால், நல்ல பலன்கள் ஏற்படும் என்று பொருள்.
19. வாடி, வதங்கிய மலர்களை கனவில் கண்டால், வியாதிகள் உண்டாகும் என்று அர்த்தம்.

பூக்கள் கனவு பலன்கள்
20. மலர்கள் கொத்தாக இருப்பது போல கனவு கண்டால் சொத்து சேர்க்கை ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
21. மலர்கள் நிறைந்த பூந்தோட்டத்தை கனவில் கண்டால் உங்கள் வருங்காலம் சிறப்பாக இருக்க போகிறது என்று அர்த்தம்.
22. மருதாணி செடியை கனவில் கண்டால் நெடு நாட்களாக இருந்த நோய் நொடிகள் விலகி உடல் பலமடையும் என்று அர்த்தம்.
23. முள்செடியில் துணி மாட்டி கொண்டது போல கனவு கண்டால், பழைய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள் என்று அர்த்தம்.
24. ஆலமரம் கனவில் வந்தால், செய்கின்ற தொழில் மேன் மேலும் வளரும், பொருள் வரவு அதிகரிக்கும் என்று அர்த்தம்.
25. கொய்யாமரம் அல்லது கொய்யாபழம் கனவில் வந்தால் நோய்கள் நீங்கும் என்று அர்த்தம்
26. சந்தன மரம் கனவில் வந்தால் வாழ்வில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். உறவினர்களால் பொருள் உதவி கிடைக்கும் என்று அர்த்தம்.
27. தோட்டத்தில் நடந்து செல்வது போல கனவு வந்தால், மன மகிழ்ச்சி ஏற்படும் என்று அர்த்தம்.