Home Tags தேங்காய் போளி

Tag: தேங்காய் போளி

சுவையான தேங்காய் போளி

HOW TO MAKE COCONUT POLI

தேங்காய் போளி

HOW TO MAKE COCONUT POLIதேவையான பொருட்கள்

  1. வெல்லம் – 1 கப்
  2. மைதா மாவு – 1 கப்
  3. மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
  4. துருவிய தேங்காய் – 1 கப்
  5. நெய் – சிறிதளவு
  6. தண்ணீர் – தேவையான அளவு
  7. ஏலக்காய் தூள் – சிறிதளவு
  8. உப்பு – ¼ ஸ்பூன்

செய்முறை

  1. முதலில் மைதா மாவை ஒரு அகன்ற பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.
  2. பின்னர் அதில் சிறிதளவு மஞ்சள் தூள் , சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
  3. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  4. மாவு மிகவும் கெட்டியாக இல்லாமல் சப்பாத்தி மாவை விட சிறிது இலகுவாக பிசைந்து கொள்ளவும்.
  5. பிசைந்து வைத்துள்ள மாவில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து ½ மணி நேரம் மூடி வைத்து விடவும்.
  6. பின்னர் ஒரு பத்திரத்தில் 1 கப் வெல்லத்தை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  7. வடிகட்டிய வெல்ல கரைசலை ஒரு பேனில் சேர்க்கவும்.
  8. அதில் 1 கப் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  9. தேங்காய் துருவல் வெல்லத்துடன் சேர்த்து கெட்டியான பதத்திற்கு வந்ததும் சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
  10. ஊற வைத்துள்ள மைதா மாவை நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்.
  11. பின்னர் உருட்டிய மாவை ஒரு எண்ணெய் தடவிய வாழை இலையில் வைத்து மெல்லியதாக தட்டிக் கொள்ளவும்.
  12. பின் அதன் நடுவில் தேங்காய் பூரணத்தை வைத்து நன்கு தட்டிக் கொள்ளவும்.
  13. தோசை தவாவை சூடு செய்து அதில் கொஞ்சம் நெய் விட்டு தட்டி வைத்துள்ள போளியை போட்டு இரண்டு பக்கமும் நெய் அல்லது எண்ணெய் விட்டு சுட்டு எடுத்தால் சுவையான தேங்காய் போளி ரெடி.