Home Tags பசலை கீரை பயன்கள்

Tag: பசலை கீரை பயன்கள்

தரை பசலை கீரையின் மகத்தான மருத்துவ பயன்கள்.

தரை பசலை கீரை நன்மைகள்

தரை பசலை என்கிற சிறு பசலை

தரையில் படரும் கீரை வகைகளுள் பசலை கீரை முக்கியமான ஒன்றாகும். இதற்கு சிறு பசலை, தரை பசலை என்ற வேறு பெயர்களும் உண்டு. உடலின் நோய் எதிர்ப்பு திறன் வயது கூடிக்கொண்டு செல்லும் போது குறைந்து கொண்டே வரும். சிறு பசலை கீரை சாப்பிடுவதால் அதிலிருக்கும் சத்துகள் ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது.

தரை பசலை கீரை நன்மைகள்

தரை பசலை கீரையில் உள்ள சத்துக்கள்

பசலைக்கீரையில் மிக அதிக அளவில் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் சத்துக்களான ‘ஏ’, ‘பி’, ‘சி‘ ஆகியவை அதிக அளவில் இந்த கீரையில் நிறைந்துள்ளன. மேலும் இதில் பொட்டாசியம், இரும்புச் சத்து, சோடியம், போலாசின், கால்சியம் போன்றவை நிறைந்துள்ளன.

தரை பசலையின் மருத்துவ பயன்கள்

தோல் வியாதிகளை குணமாக்கும்

சிறு பசலை கீரையை மையாக அரைத்து அதை தோல் நோய்களான சொறி, சிரங்கு போன்றவற்றின் மீது பற்று போட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மலச்சிக்கலை குணமாக்குகிறது

சிறு பசலை கீரையை குழம்பாகவும், கூட்டு போன்றும் செய்து சாப்பிட்டு வந்தால் குடலில் ஏற்பட்ட புண்களை ஆற்றும். மேலும் இறுகிய மலத்தை இளக செய்து மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்குகிறது.

மாதவிடாய் பிரச்சனைகளை குணமாகும்

தினமும் சிறிது சிறு பசலை கீரையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும். சிறு பசலை கீரையை கடுமையான இரத்தப் போக்கு மற்றும் அடி வயிற்று வலி ஏற்படும் மாதவிடாய் காலங்களில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனைகள் நீங்கும்.

சீறுநீரக கற்களை நீக்குகிறது

சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை மற்றும் அதை சார்ந்த உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட சிறு பசலை கீரை உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இந்த உதவுகிறது. சிறுநீரகங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் சிறப்பாக செயல்பட வாரம் ஒருமுறை சிறு பசலை கீரை சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

கல்லீரல் பிரச்சனைகளை நீக்குகிறது

சிறு பசலை கீரையை வாரம் இரண்டு, மூன்று முறை சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகளை நீக்குகிறது.

காசநோயை குணமாக்கும்

தினமும் சிறிது சிறு பசலை கீரை மற்றும் அதன் பழங்களை சாப்பிட்டு வந்தால் காசநோயின் கடுமை நீங்கும்.

புற்று நோயின் வீரியத்தை குறைக்கும்

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் புற்று நோய் செல்கள் தொடர்ந்து உற்பத்தியாகிக் கொண்டேயிருக்கும். சிறு பசலை கீரையை புற்று நோயாளிகள் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் புற்று நோய் செல்கள் மீண்டும் உருவாகாமல் தடுத்து, அந்நோயின் கடுமையை குறைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது வயது ஏற ஏற குறைந்து கொண்டே வரும். வயதானவர்கள் சிறு பசலை கீரை சாப்பிட்டு வந்தால் அதிலிலுள்ள சத்துகள் ரத்தத்தில் கலந்து உடலின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது.