Home Tags பெப்பர் சிக்கன்

Tag: பெப்பர் சிக்கன்

செட்டிநாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி

செட்டிநாடு பெப்பர் சிக்கன்

செட்டிநாடு பெப்பர் சிக்கன் வறுவல்

நம் பாரம்பரிய உணவு முறைகளில் செட்டிநாடு உணவு முறைகென்று ஒரு தனி இடம் உண்டு. செட்டிநாடு உணவுகளின் மணமும், சுவையும் இதற்க்கு சான்று. செட்டிநாடு உணவு முறைகளில் அசைவு உணவுகள் ஆளை சுண்டி இழுக்கும். அந்த வகையில் செட்டிநாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

செட்டிநாடு பெப்பர் சிக்கன்

தேவையான பொருட்கள்

  1. சிக்கன் – ½ கிலோ
  2. எண்ணெய் – தேவையான அளவு
  3. மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
  4. உப்பு – தேவையான அளவு
  5. தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

தாளிக்க

  1. வர மிளகாய் – 3
  2. மிளகு – ½ ஸ்பூன்
  3. பூண்டு பல் – 10
  4. கறிவேப்பிலை – சிறிதளவு

அரைக்க

  1. வர மிளகாய் – 2
  2. மிளகு – 1 ஸ்பூன்
  3. தனியா தூள் – 2 ஸ்பூன்
  4. சீரகம் – ½ ஸ்பூன்

செய்முறை

  1. முதலில் சிக்கனை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
  2. ஒரு அகன்ற பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை சேர்க்கவும்.
  3. சிக்கனுடன் மஞ்சள் தூள், உப்பு, தயிர், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து ஊற வைத்துக் கொள்ளவும்.
  4. மசாலாவை வறுக்க ஒரு வாணலியை எடுத்துக் கொள்ளவும்.
  5. அதில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  6. வறுத்த பொருட்களை நன்கு ஆற வைத்து பின் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  7. ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு, பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
  8. தாளித்த பின் அதில் ஊற வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  9. ஒரு 2 நிமிடத்திற்கு மூடி போட்டு வேக விடவும்.
  10. 2 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து சிறிதளவு மிளகு தூள், கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சுவையான செட்டிநாடு பெப்பர் சிக்கன் வறுவல் ரெடி.