Home Tags மதுரை மட்டன் மசாலா செய்வது எப்படி

Tag: மதுரை மட்டன் மசாலா செய்வது எப்படி

மதுரை மட்டன் மசாலா 

மட்டன் மசாலா

மதுரை மட்டன் மசாலா

மட்டன் மசாலா தேவையான பொருட்கள்

  1. மட்டன் – ½ கிலோ
  2. வெங்காயம் – 2  ( பொடியாக நறுக்கியது )
  3. தனியாத்தூள் – 2 ஸ்பூன்
  4. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  5. மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் – ½  டீஸ்பூன்
  7. உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

  1. எண்ணெய் – தேவையான அளவு
  2. கொத்தமல்லி இலை – ½  கப்
  3. புதினா இலை- ¼  கப்
  4. சோம்பு – 1 ஸ்பூன்
  5. கறிவேப்பிலை – சிறிதளவு
  6. காய்ந்த மிளகாய் – 4
  7. இஞ்சி – 1 துண்டு
  8. தேங்காய் விழுது – ¼ கப்
  9. கரம்மசாலா  – 1 ஸ்பூன்

செய்முறை

  1. மட்டனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. இத்துடன் வெங்காயம், தனியாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, புதினா , கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

3.வேகவைத்த மட்டனைச் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.

  1. தண்ணீர் வற்றியவுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதைச் சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  2. பின்னர் உப்பை சரிபார்த்து கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான மணக்கும் மதுரை மட்டன் மசாலா தயார்.