Home Tags ரோட்டுக்கடை சிக்கன் பக்கோடா

Tag: ரோட்டுக்கடை சிக்கன் பக்கோடா

சிக்கன் பக்கோடா எளிதாக செய்வது எப்படி

சிக்கன் பக்கோடா செய்வது எப்படி

சிக்கன் பக்கோடா

சிக்கன் என்றாலே அனைவருக்குமே மிகவும் பிடித்த உணவுதான். சிக்கன் பக்கோடா என்றால் சொல்லவே வேண்டாம் நினைக்கும் போதே நாவில் உமிழ் நீர் சுரக்கும். அதிலும் சாலையோர தள்ளுவண்டி கடைகளில் கிடைக்கும் சிக்கன் பக்கோடா மிகவும் ருசியாக இருக்கும்.  அதே சுவையில் நம் வீட்டிலேயே சிக்கன் பக்கோடா எளிதில் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

சிக்கன் பக்கோடா செய்வது எப்படி தேவையான பொருட்கள்

  1. கோழிக்கறி – ½ கிலோ
  2. கடலை மாவு – ¼ கப்
  3. சோள மாவு – 2 ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
  5. கரம் மசாலா – ½ ஸ்பூன்
  6. மிளகாய் தூள் – ½ ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  8. முட்டை – 1
  9. எலுமிச்சை சாறு – சிறிதளவு
  10. கேசரி கலர் – சிறிதளவு
  11. எண்ணெய் – தேவையான அளவு
  12. உப்பு – தேவையான அளவு
  13. கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

  1. முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து பக்கோடா செய்வதற்கு ஏற்றார் போல் சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, மஞ்சள் தூள் மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  3. பின்னர் 1 முட்டையை உடைத்து சேர்த்து கொள்ளவும்.
  4. தேவையான அளவு உப்பு மற்றும் கேசரி கலர் சேர்த்து பின் வெட்டி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  5.  1 மணி நேரம் நன்கு ஊறிய பின் வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் சிக்கனை சேர்த்து பொறித்து எடுக்கவும்.
  6. அதே எண்ணெயில் கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து பொறித்து எடுத்து சிக்கனுடன் சேர்த்து பரிமாறினால்சுவையான சிக்கன் பக்கோடா தாயார்.