Home Tags 1ம் எண் குணங்கள்

Tag: 1ம் எண் குணங்கள்

1ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

1ம் எண்ணில் பிறந்தவர்கள்

1ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள்

இந்த 1ம் எண் சூரிய பகவானுக்கு உரிய எண்ணாகும். ஒவ்வொரு மாதத்திலும் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்றாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவர்கள்.

1ம் எண்ணில் பிறந்தவர்கள்

முதலாம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

இந்த எண்ணில் பிறந்தவர்கள் கம்பீரமான தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். தன்னம்பிக்கை இவர்களிடம் நிறைந்து காணப்படும். இவர்கள் மற்றவர்களைக் கடுமையாக வேலை வாங்குவார்கள். ஆனால் அதே சமயம் மனித நேயத்துடனும் அவர்களுடன் நடந்து கொள்வார்கள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். தங்களின் பிரச்சினைகளைக் கூடத் தாங்களே சமாளித்துக் கொள்ளும் திறமையுடையவர்கள்.

எல்லா செயல்களிலும் யோசித்து முடிவெடுக்கும் தன்மை இவர்களிடம் காணப்படும். பின்வாங்கும் நோக்கம் இவர்களிடம் எள்ளளவும் கிடையாது. கபடம், வஞ்சகம் போன்ற தீய எண்ணங்கள் இவர்களிடம் அறவே இருக்காது. யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்ப மாட்டார்கள்.

கடின உழைப்பாளிகள், இதனால் இவர்கள் தலைமை ஸ்தானத்தை விரைவில் அடைவார்கள். திடமான மனதும், எதையும் தாங்கும் மனோபலமும் கொண்டவர்கள். செய்யும் செயல்களில் தோல்விகள் ஏற்பட்டாலும் மீண்டும் மனத் துணிவுடனும், புதிய திட்டத்துடனும் சலிக்காமல் செயலாற்றுவார்கள். நேர்மையான முறையிலேயே எதையும் அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். தாங்கள் உடுத்தும் உடைகள் மற்றும் அணியும் பொருள்கள் மிகவும் மதிப்பாகத் தெரிய வேண்டும் என்று அதற்காகச் செலவு செய்வார்கள். மன மகிழ்ச்சிக்காக தாராளமாகச் செலவு செய்யத் தயங்காதவர்கள்.

இவர்கள் புகழின் உச்சத்திற்கு செல்லும் வரை அயராது உழைப்பார்கள். தனக்கு எதிரியாய் இருப்பவர்களை கூட தன் பேச்சாற்றலின் மூலம் நண்பர்களாக்கி கொள்வார்கள். இவர்கள் ஒருபோதும் மற்றவர்களின் பொருள் மீது ஆசை கொள்ள மாட்டார்கள். மற்றவர்களின் பணத்திற்காகவும், பதவிக்காகவும் எப்போதும் ஆசைப்படமாட்டார்கள். இவர்கள் ஒரு துறை மட்டுமின்றி பல துறைகளில் வெற்றி பெற்று புகழுடன் விளங்குவார்கள்.

மிகுந்த ரோஷமும், எதையும் எடை போடும் குணமும் உண்டு. வாக்குறுதி கொடுத்துவிட்டால் எப்பாடு பட்டாவது அதை நிறைவேற்றுவார்கள். படிப்பறிவை விடப் பட்டறிவு (அனுபவம்) அதிகம் உண்டு. இந்த எண் சுறுசுறுப்பையும், படிப்பில் ஆர்வத்தையும் கொடுக்கும். பெருந்தன்மை நிறைந்தவர்கள், தங்களின் பொருட்களை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து விடுவார்கள். ஆனால் மற்றவர்கள் இவர்களை அலட்சியம் செய்தால் மட்டும் இவர்களால் தாங்கி கொள்ள முடியாது. அவர்களை உண்டு அல்லது இல்லை எனச் செய்து விடுவார்கள். ஆனால் நேர்மையான வழியில்தான் நடப்பார்கள்.

உடல் அமைப்பு

நடுத்தரமாக உயரம், கம்பீரமான பார்வை, எடுப்பான நெற்றி கொண்டவர்கள். இவர்களுக்கு நீண்ட தோள்களும் நன்கு வளைந்த புருவமும் உண்டு. உறுதியான பற்கள் உண்டு. ஆண்தன்மை உடைய தோற்றம் உண்டு. நடையில் ஒரு கம்பீரம் காணப்படும். பெண்களாக இருந்தால் ஓரளவு ஆணாதிக்க உடல் அமைப்பும், குணங்களும் உண்டு. அவரை நல்ல வழியில் உயர்த்தி விடுவார்கள். கூர்மையான பார்வை திறன் கொண்டவர்கள்.

தோள்பட்டை அகன்று கம்பீரத்துடன் இருக்கும். மெல்லிய தேகம் பிறவியிலிருந்தே இருக்கும். உடலில் இருக்கும் எலும்புகள் அனைத்தும் சக்தி படைத்ததாக இருக்கும். மிகக் கடினமான காரியங்களையும் தன் உடல் வலிமையினை உபயோகித்து வெகு விரைவில் செய்து முடிப்பார்கள்.

இவர்களுக்கு உடலில் உஷ்ணம் எப்போதும் அதிகரித்து இருக்கும். உடலில் ரத்த ஓட்டம் அதிகம் இருக்கும். இவர்களது இருதயம் பலம் பொருந்தியதாக காணப்படும். பெண்கள் சிலர் தங்களது வயதுக்கு மீறிய வளர்ச்சியுடன் காணப்படுவார்கள்.

குடும்பம்

தன்னை பெற்றெடுத்த தாய், தந்தையின் மீது அதிக பக்தி கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்கள். கணவன், மனைவி, பிள்ளைகள் மேல் அதிக பாசம் கொண்டவர்கள்.

நண்பர்கள்

இவர்கள் நட்புக்கு இலக்கணமாக இருக்க கூடியவர்கள். நட்பு என்ற சொல்லுக்கு மிக பொருத்தமான அடையாளம் இவர்கள்தான். தான் கஷ்டப்பட்டாலும் தன்னுடன் நட்பு கொள்ளும் நண்பர் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைப்பார்கள்.
இவர்களுக்கு தங்கள் ஊரில் இருக்கும் நண்பர்களை விட வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களே அதிகமாக இருப்பார்கள். இவர்கள் தனது உயிருக்கு உயிரான நண்பர்களுக்காக எதையும் செய்யும் எண்ணம் கொண்டவர்கள். எதிலும் உறுதியும், கட்டுப்பாடும் உள்ளவர்கள்.

திருமண வாழ்க்கை

வாழ்க்கை துணையிடம் ‘நாம் இருவர் நமக்கு இருவர்” என்ற பழமொழிக்கு ஏற்ப ஒற்றுமையுடன் வாழ்வார்கள். இவர்களுக்கு காதல் திருமணம் அவ்வளவு சிறப்பை தராது. ‘கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்” என்று பழமொழிக்கேற்ப இந்த எண்ணில் பிறந்த பெண்கள் தனது வாழ்க்கை துணையிடம் இருப்பார்கள்.

இவர்களுக்கு எப்பேற்பட்ட கடினமான எதிர்ப்புகள், எதிரிகள் இருந்தாலும் இவர்கள் தங்களது புத்திக்கூர்மை மற்றும் சாமர்த்தியத்தால் காதல் திருமணம் செய்து கொள்ளக்கூடியவர்கள். இவர்களுக்கு வரும் துணைவர் அழகாகவும், புத்திசாலியாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

இவர்களுக்கு பிறவியிலேயே ஒருவிதமான கோணல் புத்தியும், பிடிவாத குணமும் அமைந்திருக்கும். இதனை கட்டுப்படுத்தினால் இவர்களின் மண வாழ்க்கை சிறப்பாக அமையும். ‘ஈருடல் ஓருயிர்” என்று இவர்கள் வாழ்க்கை துணையுடன் நல்வாழ்க்கை வாழ்வார்கள். தம்பதிகள் இருவரும் மனம் ஒத்து மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை வாழ்வார்கள்.

தொழில்

அரசாங்க உத்தியோகத்தில் பல சாதனைகள் புரிவார்கள். உள்ளுரில் இருந்து செய்யும் தொழில்களை விட வெளியூரில் செய்யும் தொழிலில் இவர்கள் அதிகம் லாபம் அடைவார்கள். மருத்துவத்துறை, தொழில்துறை, விஞ்ஞானத்துறை, பொறியியல் துறை, இரசாயனத்துறை, நீதித்துறை போன்றவை இவர்களுக்கு ஏற்ற துறையாகும்.

மூலிகைகள் சம்பந்தப்பட்ட வியாபாரங்கள், பிராணிகள், பறவைகள் பராமரிப்பு, வெங்காயம், புகையிலை, கொள்ளு, உளுந்து, கோதுமை, பழவகைகள், காய்கறி வகைகள், செயற்கை நூலிழைகள், தங்கம் சம்பந்தப்பட்ட தொழில்களும் இவர்களுக்கு உகந்த தொழில்கள் ஆகும்.

அதிர்ஷ்ட நாட்கள்

ஒவ்வொரு மாதத்திலும் 1, 10, 19 மற்றும் தேதி மாதம் ஆண்டு கூட்டினால் 1 வரும் தினங்கள் அதிர்ஷ்டமானவை 28ம் தேதி நடுத்தரப் பலன்களே.

எண் கணிதம் எப்படி பார்ப்பது

அதிர்ஷ்ட இரத்தினம்

1. தங்க மோதிரம், ஆபரணங்கள் அணிவது இவர்களுக்கு நன்மை தரும்.
2. மாணிக்கம், புஷ்பராகம், மஞ்சள் புஷ்பராகம் அணிவது மிகுந்த நன்மை தரும்.
3. சிவப்பு இரத்தினத்தில், சூரிய காந்தக்கல் ஆகியவையும் மிகுந்த நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறங்கள்

பொன்னிற உடைகளும், மஞ்சள், லேசான சிவப்பு நீலம் ஆகிய நிறங்களும் நன்மை தரும். கருப்பு மற்றும் பிரவுன் நிற உடைகளையும், வர்ணங்கள் உபயோகங்களையும் தவிர்க்க வேண்டும்.

தேதி வாரியாக பொதுவான பலன்கள்

1-ம் தேதி பிறந்தவர்கள்

பொதுவாக இவர்கள் தங்கள் விருப்பபடியே நடப்பார்கள். இவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து போகும் குணம் மிகவும் குறைவு. பொறுமையுடன், மற்றவர்களையும் அரவணைத்துச் சென்றால், வாழ்க்கையில் பெரும்வெற்றி அடையலாம். தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்கள். அரசு மற்றும் அதிகார மிக்க உத்தியோகங்களில் அமர்வார்கள்.

10-ம் தேதி பிறந்தவர்கள்

இவர்களுக்கு சூரிய ஆதிக்கம் ஓரளவு குறைந்துள்ளதால், மற்றவர்களை அனுசரித்து அன்புடன் நடந்து கொள்வார்கள். எதிலும் நிதானத்தோடு செயல்படுவார்கள். எப்படியும் புகழ் அடைந்து விடுவார்கள். மனோ சக்தியும், தன்னம்பிக்கையும் உண்டு. பொருளாதாரத்தில் மட்டும் அடிக்கடி ஏற்றத்தாழ்வுகள் இவர்களுக்கு ஏற்படும். பணம் நிர்வகிக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

19-ம் தேதி பிறந்தவர்கள்

இவர்களுக்கு மிகுந்த அதிர்ஷ்டமான வாழ்க்கை ஏற்படும். தான் கொண்ட கொள்கையில் ஈடுபாடும், பிடிவாதமும் கொண்டவர்கள். தங்களது நடை, உடை பாவனைகளில் நாட்டம் அதிகம் கொண்டவர்கள். பல தரப்பட்ட செய்திகளையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் உண்டு. அன்பால் மற்றவர்களை வெற்றி கொண்டு தன் காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள். வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றம் அடைவார்கள்.

28-ம் தேதி பிறந்தவர்கள்

இவர்களுக்கு சூரிய ஆதிக்கம் மிகவும் குறைவு. பொருளாதாரத்தில் மாற்ற, ஏமாற்றங்கள் அடிக்கடி ஏற்படும். இவர்களிடம் மென்மை உணர்வுகள் மேலோங்கி இருக்கும். மற்றவர்களை அனுசரித்துச் செல்வதாலும், பாசமுடன் பழகுவதாலும், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் அதரவு இவர்களுக்கு நிறைய உண்டு. 2, 8 இணைந்து வருவதால் வீண் கர்வம், டம்பப் பேச்சு ஆகியவைகளைக் குறைத்துக் கொண்டால், பண இழப்புகளையும், விரயங்களையும் தவிர்த்துக் கொள்ளலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் பண விஷயங்களில் ஏமாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.