Home Tags Banana halwa recipe

Tag: banana halwa recipe

வாயில் வைத்த உடன் கரையும் வாழைப்பழ அல்வா

banana halwa recipe

வாழைப்பழ அல்வா

banana halwa recipeதேவையான பொருள்கள்

  1. வாழைப்பழம் – 3
  2. பால் – 1 கப்
  3. சர்க்கரை – ½ கப்
  4. நெய் – ¼ கப்
  5. ஏலக்காய் தூள் – சிறிதளவு
  6. சோள மாவு – 3 ஸ்பூன்
  7. முந்திரி –  சிறிதளவு

செய்முறை

  1. வாழைப்பழ அல்வா செய்வதற்கு பழத்தை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும் அரைத்த வாழைபழத்தை சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும்.
  3. பின்னர் 3 ஸ்பூன் சோளமாவினை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதில் சிறிதளவு தண்ணீர் கலந்து கரைத்து சேர்த்துக் கொள்ளவும்.
  4. கட்டி தட்டாமல் நன்கு கலந்து விடவும்.
  5. பின் ½ கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
  6. சர்க்கரை சேர்த்த பின் நாம் எடுத்து வைத்துள்ள நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் வரை நன்கு கிளறவும்.
  7. வாசனைக்காக சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
  8. கேசரி கலர் சிறிதளவு தண்ணீரில் கலந்து சேர்த்து நன்கு கிளறவும்.
  9. முந்திரி பருப்பை பொடியாக நறுக்கி சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான வாழைப்பழ அல்வா தயார்.