Home Tags Brain fry

Tag: brain fry

மூளை மிளகு வறுவல் செய்வது எப்படி?

மூளை வறுவல்

மூளை மிளகு வறுவல்

மட்டன் உணவுகள் ஆரோக்கியம் நிறைந்தவையாகும். மட்டனை வைத்து விதவிதமாக உணவுகள் சமைக்கப்படுகிறது. மட்டன் மூளை வைத்து செய்யப்படும் உணவுகள் ருசி நிறைந்தவையாகும். அந்தவகையில் மட்டன் மூளை மிளகு வறுவல் எவ்வாறு செய்வதை என்பதை பார்ப்போம்.

மூளை வறுவல்

தேவையான பொருட்கள்

1. ஆட்டு மூளை – 2
2. மஞ்சள் தூள் – ¼ மேஜைக்கரண்டி
3. உப்பு – தேவையான அளவு
4. இஞ்சி பூண்டு விழுது – 2 மேஜைக்கரண்டி

5. வெங்காயம் – 2

அரைக்க தேவையான பொருட்கள்

  1. மிளகு – 10
  2. சீரகம் – ½ மேஜைக்கரண்டி
  3. பட்டை – 2 துண்டு
  4. கிராம்பு – 3
  5. ஏலக்காய் – 3
  6. சோம்பு – ¼ மேஜைக்கரண்டி
  7. முழு தனியா – 1 மேஜைக்கரண்டி

தாளிக்க தேவையான பொருட்கள்

  1. எண்ணெய் – தேவையான அளவு
  2. கடுகு – 1 மேஜைக்கரண்டி
  3. டால்டா – தேவையான அளவு
  4. கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு

செய்முறை

1. மூளையை நன்றாக கழுவி கொள்ளவும். மூளையின் மேலே உள்ள மெல்லிய தோலை வெட்டி விட கூடாது.

2. மூளையுடன் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு குக்கரில் தேவையான அளவு தண்ணீர் விட்டு இரண்டு விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும்.

3. பொடி செய்ய வேண்டிய பொருட்களை வெறும் வணலியில் வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.

4. ஒரு இரும்பு வாணலியில் எண்ணெய், டால்டா இரண்டையும் ஊற்றி வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.

  1. அதனுடன் அரைத்த மசாலா பொடி முழுவதும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி கொள்ளவும்.
  2. அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.
  3. பின்பு அதனுடன் வேக வைத்த மூளையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.
  4. தண்ணீர் முழுவதும் சுண்டியதும் அதை சிறு துண்டுகளாக போட்டு நல்ல முறுகலாக வறுத்தெடுத்து அதன் மேல் மிளகு பொடியை தூவி விடவும்.
  5. பின்பு கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான மூளை மிளகு வறுவல் ரெடி.