Home Tags Building kanavu palangal

Tag: building kanavu palangal

கட்டிடங்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

கனவு பலன்கள் வீடு

கட்டிடங்கள் கனவில் வந்தால்

கனவுகள் காணாதவர் இவ்வுலகில் எவரும் இல்லை. அதற்கேற்றார் போல நாம் நம் தூக்கத்தில் எண்ணற்ற கனவுகளை காண்கிறோம். ஒரு சில சமயங்களில் அதிசயக்க வைக்கும் கனவுகளும் உண்டு. ஆனால் அந்த கனவுகளுக்கான பலன்கள் தெரியாமல் குழம்பி போகிறோம். அந்த வகையில் இந்த கட்டுரையில் கனவில் கட்டிடங்கள் கனவில் வந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்று தெரிந்து கொள்வோம்.

கனவு பலன்கள் வீடு1. அணைக்கட்டு நிறைந்து அதிலிருந்து நீர் வழிவது போல் கனவு கண்டால் வந்தால் அதிக செலவுகள் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
2. அணை உடைவது போல் கனவு கண்டால் நண்பர்கள் வழியில் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
3. ஆராய்ச்சிகள் செய்யும் ஆராய்ச்சிகூடம் கனவில் வந்தால் நீங்கள் செய்யும் புதிய முயற்சிகள் வெற்றி அடையும் என்று அர்த்தம்.
4. ஆசிரமம் கனவில் வந்தால், உங்களின் மனம் அமைதி இழந்து இருக்கிறது என்று அர்த்தம்.
5. நீங்கள் வீடு கட்டுவது போல கனவு கண்டால், பல சோதனைகள் வரப்போகிறது என்று பொருள்.
6. உங்கள் கனவில் சிறை வந்தால் புதிய பிரச்சனை உருவாக போகிறது என்று அர்த்தம்.
7. மருத்துவமனை கனவில் வந்தால் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம்.
8. நினைவுச் சின்னங்கள் இருக்கும் இடத்தில் நாம் நடந்து செல்வது போல கனவு வந்தால், ஏமாற்றம் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
9. தோரணத்தோடு கூடிய வாசலை கனவில் கண்டால் ஒரு
நல்ல செய்தி வரப்போகிறது என்று அர்த்தம்.
10. பாழடைந்த அல்லது சிதிலமடைந்த வீடு கனவில் வந்தால் உங்கள் குடும்பத்தில் வீணான குழப்பங்கள் ஏற்பட்டு துன்பங்கள் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
11. வீடு இடிந்து விழுவது போல கனவு கண்டால் உங்களின் உறவினர்களால் துன்பம் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
12. புதிய வீடு ஒன்றை வாங்குவது போல் கனவு கண்டால் சுப காரியங்கள் நடக்கும் என்று அர்த்தம்.
13. புதிய கட்டிடம் ஒன்றை கனவில் கண்டால் உத்தியோக மாற்றம், நற்பலன்கள் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
14. தொழிற்சாலை கனவில் வந்தால் நீங்கள் புதிதாக ஒரு வியாபாரம் தொடங்க போகிறீர்கள் அல்லது பரம்பரை சொத்து வரபோகிறது என்று அர்த்தம்.
15. ஆடம்பரமான மாட மாளிகை கனவில் வந்தால் சமுதாயத்தில் உள்ள பெரிய பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்க போகிறது என்று அர்த்தம்.
16. குடிசையில் வசிப்பது போல கனவு வந்தால் ஏழ்மையான நிலை ஏற்படும் என்று அர்த்தம்.

கனவில் குடிசை வந்தால்
17. குடிசை தீப்பற்றி எரிவதுபோல் கனவு கண்டால், வீட்டில் திருடு போகலாம் என்று அர்த்தம்.
18. குடிசை கனவில் வந்தால், உங்களுக்கு ஏற்பட்டிருந்த பொருளாதார சிக்கல்கள் ஒரு முடிவுக்கு வரபோகிறது என்று அர்த்தம்.
19. நீதிமன்றம் கனவில் வந்தால் வழக்குகள் ஏற்படும் அல்லது அதனால் செலவுகள் ஏற்படும் என்று அர்த்தம்.
20. ஒரு உயரமான கட்டிடம் கனவில் வந்தால் உங்களுக்குள் இருக்கும் உள் பிரச்சினைகளை இருப்பதை குறிக்கிறது.
21. நீங்கள் வீட்டை விட்டு வெளியேறுவது போல் கனவு வந்தால் நோய்கள் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
22. ஜன்னலே இல்லாத ஒரு வீட்டை கனவில் கண்டால் தேவையில்லாத சிந்தனைகள் உங்கள் மனதில் தோன்றியுள்ளது என்று அர்த்தம்.