Home Tags Carrot halwa recipe in tamil

Tag: carrot halwa recipe in tamil

சுவையான கேரட் அல்வா எப்படி செய்வது

carrot halwa recipe

கேரட் அல்வா

carrot halwa recipeதேவையான பொருட்கள்

  1. கேரட்
  2. சர்க்கரை
  3. பால்
  4. ஏலக்காய்
  5. முந்திரிப் பருப்பு

6.உலர்ந்த திராட்சை

  1. நெய்

செய்முறை

  1. காரட்டை தோல் சீவி சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் அதனை நன்கு துருவி எடுத்துக் கொள்ளவும்.
  3. பின்னர் ஒரு அடி கனமான பாத்திரம் அல்லது நான்ஸ்டிக் கடாய் எடுத்துக் கொள்ளவும்.
  4. பாத்திரம் நன்கு சூடானதும் கொஞ்சம் நெய் சேர்த்துக் கொள்ளவும்.
  5. நெய் சூடானதும் அதில் முந்திரி திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  6. அதே பத்திரத்தில் இன்னும் சிறிதளவு நெய் சேர்த்து துருவி வைத்துள்ள கேரட்டை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  7. கேரட்டின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  8. கேரட் நன்கு வதங்கிய பின் அதில் காய்ச்சி ஆற வைத்த பாலை சேர்த்து கொள்ளவும்.
  9. கேரட் மூழ்கும் அளவிற்கு பால் சேர்த்துக் கொள்ளவும்.
  10. பாலுடன் சேர்ந்து கேரட் வேகும் வரை நன்கு கிளறி விடவும்.
  11. கேரட் வெந்தவுடன் அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
  12. சர்க்கரை சேர்த்த பின் நன்கு கிளறி விடவும்.
  13. பால் வற்றி கேரட் நன்கு சுருண்டு வரும்போது கொஞ்சம் நெய் சேர்த்து கிளறி விடவும்.
  14. பின்னர் வாசனைக்காக ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  15. இறுதியாக கொஞ்சம் நெய் சேர்த்து நன்கு பின் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கேரட் அல்வா ரெடி.