Home Tags Coconut cake

Tag: coconut cake

எளிமையான முறையில் தேங்காய் பர்ஃபி செய்வது எப்படி ?

coconut barfi preperation

தேங்காய் பர்ஃபி

coconut barfi preperation தேவையான பொருட்கள்

  1. துருவிய தேங்காய் – 1 கப்
  2. சர்க்கரை – 1 கப்
  3. தண்ணீர் – 1/4 கப்
  4. முந்திரி – 1 டேபிள் ஸ்பூன்
  5. நெய் – 4 டீஸ்பூன்
  6. ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்

செய்முறை

  1. ஒரு வாணலியில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றவும்.
  2. நெய் சூடானதும் அதில் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
  3. பின் ஒரு தட்டில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி தடவி தனியாக வைத்துக் கொள்ளவும்.
  4. பின்னர் ஒரு நான்-ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் சர்க்கரை மற்றும் ¼ கப் தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கொதிக்க விடவும்.
  5. சர்க்கரை நன்கு கரைந்து, ஓரளவு கெட்டியாக வரும் போது, ​​அதில் துருவிய தேங்காயை சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
  6. அப்படி கிளறிவிடும் போது, ​​நுரைக்க ஆரம்பிக்கும் தருணத்தில் முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து கிளறிவிடவும்.
  7. ஓரளவு கெட்டியாகி வரும் போது அடுப்பை அணைத்து, நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தவும்.
  8. பின்னர் சூடு கொஞ்சம் குறைந்தது கத்தியால் உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் வெட்டி எடுத்தால் சுவையான தேங்காய் பர்ஃபி ரெடி..