Home Tags How to make appam recipe

Tag: how to make appam recipe

இனிப்பு அப்பம் செய்வது எப்படி

அப்பம் செய்யும் முறை

அப்பம்

இறைவனுக்கு படைக்கும் நெய்வேத்தியங்களில் முக்கியமான ஒன்று இனிப்பு அப்பம் ஆகும். இந்த அப்பம் சுவையானது மட்டுமல்லாமல் செய்வதும் மிகவும் எளிதான ஒரு பலகாரம் ஆகும். சுவையான இனிப்பு அப்பம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்

  1. மைதா மாவு – 1 கப்
  2. ஏலக்காய் – சிறிதளவு
  3. அரிசி மாவு – ½ கப்
  4. வெல்லம் – ½ கப்
  5. வாழைப்பழம் – 2
  6. தண்ணீர் – தேவையான அளவு
  7. எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

  1. முதலில் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதித்து பின் வெல்லம் கரைந்த பின் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  2. இரண்டு வாழைப்பழத்தையும் மசித்து வைத்துக் கொள்ளவும்.
  3. வேறு ஒரு பாத்திரத்தில் மைதா மாவு , அரிசி மாவு, ஏலக்காய், மசித்த வாழைப்பழம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. கரைத்து வைத்துள்ள வெல்லக் கரைசைலை மாவுடன் சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
  5. மாவு அதிக தண்ணீராகவும் இல்லாமல் கெட்டியாகவும் இல்லாமல் சரியான பதத்தில் இருக்க வேண்டும்.
  6. ஒரு வாணலியில் அப்பம் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.
  7. எண்ணெய் சூடானதும் குழிக்கரண்டியில் எடுத்து ஒவ்வொரு கரண்டியாக எண்ணெயில் சேர்க்கவும்.
  8. இரண்டு பக்கமும் சிவந்து வெந்த பின் எடுத்தால் சுவையான அப்பம் தயார்.