Home Tags Ilanthai pazham medical benefits

Tag: ilanthai pazham medical benefits

இலந்தை பழம் மருத்துவ பயன்கள்

இலந்தை பழம் மருத்துவ நன்மைகள்

இலந்தை பழம்

இலந்தை பழம் சீனாவை தாயகமாக கொண்டது. இது உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. இது இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன் இருக்கும். இதன் காய் பச்சை நிறத்திலும், பழம் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்திலிருக்கும். இப்பழத்தில் கொட்டைப்பகுதியும் அதை சுற்றி சதைப்பகுதியும் இருக்கும். இது மிகவும் சுவை மிகுந்த பழமாகும். இம்மரத்தின் வேர், பட்டை மற்றும் கொழுந்து இலைகள் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகிறது.

இலந்தை பழம் மருத்துவ நன்மைகள்

இலந்தை பழத்தின் வகைகள்

இலந்தை பழத்தில் இருவகைகள் உண்டு. ஒன்று காட்டு இலந்தை. மற்றொன்று நாட்டு இலந்தை. சீமை இலந்தை நாட்டு இலந்தையின் ஒரு பிரிவாகும். ஆனால் இதன் மருத்துவப் பயன்கள் அனைத்தும் ஒன்றே ஆகும்.

இலந்தை பழத்தில் உள்ள சத்துக்கள்

இலந்தை பழத்தில் மாவுசத்து, தாது உப்புகள், இரும்புசத்து, ஏ, சி, பி3, பி6 வைட்டமின்களும், தாமிரம், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும், கார்போ ஹைட்ரேட் மற்றும் புரதமும் உள்ளது. போன்றவை அடங்கியுள்ளது. இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் திறன் கொண்டது.

இலந்தை பழத்தின் மருத்துவ குணங்கள் :

எலும்புகள் மற்றும் பற்களை உறுதியாக்கும்

உடலில் கால்சியம் சத்து குறைவாக இருப்பவர்களுக்கு எலும்புகள் மற்றும் பற்கள் பலமில்லாமல் இருக்கும். இதனால் இவர்கள் சாதரணமாக கீழே விழுந்தால்கூட எலும்புகள் உடையும் ஆபாயம் உண்டு. இவர்கள் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். பற்களும் உறுதிபெறும்.

நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்

இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இலந்தை பழத்தை சாப்பிட்டால் மன அமைதி ஏற்படுவதுடன் ஆழ்ந்த உறக்கம் வரும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.

பித்தத்தை குறைக்கும்

உடலில் உள்ள பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தை பழத்துக்கு உண்டு. இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.

இலந்தை பழம் மருத்துவ நன்மைகள்

பசியின்மையை போக்கும்

ஒரு சிலருக்கு சில காரணங்களால் பசியின்மை ஏற்பட்டு, சரியாக சாப்பிட முடியாத நிலை உண்டாகிறது. இலந்தை பழம் பசியின்மை பிரச்சனையை சுலபத்தில் தீர்க்கும். எனவே இதை அவ்வபோது சாப்பிடுவது நல்லது.

மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்கும்

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ரத்த போக்கு அதிகம் ஏற்பட்டு பெண்களை உடலளவிலும் மனதளவிலும் களைப்படைய செய்யும். இக்காலத்தில் பெண்கள் இலந்தை பழங்களை சாப்பிட்டு வந்தால் ரத்த போக்கு அதிகம் ஏற்படாது.

வாந்தி குமட்டலை தடுக்கும்

மலைப்பாங்கான இடங்களிலோ, நீண்ட தூரம் பேருந்தில் பயணம் செய்யும்போதும் சிலருக்கு குமட்டல், வாந்தி, தலைச்சுற்றல் போன்றவை உண்டாகும். இவர்கள் இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படாது.

உடல் வலியை போக்கும்

சிலருக்கு அடிக்கடி உடல்வலி, அசதி போன்றவை ஏற்படும். இவர்கள் சிறிது நேரம் வேலை செய்தால் கூட அதிகளவு உடல்வலி தோன்றும். இந்த உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.

இரத்தத்தை சுத்தமாக்குகிறது

இலந்தை பழத்தில் உள்ள சபோனின், ஆல்காய்டுகள் ரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி ரத்தத்தை சுத்தமாக்குகிறது. இலந்தையில் உள்ள ஆன்டி ஆக்ஸிஜென்ட்கள் உடலில் உள்ள கோளாறுகளையும், நோய்களை நீக்கவும், நிணநீர் மண்டலத்தின் மீதுள்ள அழுத்தத்தையும் குறைக்கின்றன

செரிமான சக்தியை தூண்டும்

இலந்தைப் பழம் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.

காயங்களை ஆற்றும்

இரத்தக் காயம் பட்ட இடத்தில் இலந்தை பழத்தின் இலளைகளை நன்றாக அரைத்து காயத்தின் மீது கட்டினால் விரைவில் ஆறிவிடும். உடல் சூட்டினால் உடலில் ஏற்படும் கட்டிகளை கரைக்கவும் இலந்தை பழம் பெரிதும் பயன்படுகிறது.

குறிப்பு: குளிர்ச்சியான உடல் அமைப்பை கொண்டவர்கள் மதிய வேளைகளில் மட்டும் இதனை உண்ணலாம்.