Home Tags Ketta kanavu varamal iruka

Tag: ketta kanavu varamal iruka

கெட்ட கனவுகள் ஏற்படாமல் தடுக்க பரிகாரம்

கெட்ட கனவு வந்தால் என்ன செய்ய வேண்டும்

கெட்ட கனவுகள் மற்றும் அதற்கான பரிகாரங்கள்

மனிதனின் ஆயுட்காலத்தில் பெரும்பான்மையான நேரம் தூக்கத்தில் தான் கழிகிறது. அந்த தூக்கத்தில் ஒரு சில கெட்ட கனவுகள் வந்து வந்து நம்மை பாடாய்படுத்திவிடும். அந்த கெட்ட கனவுக்கான காரணம் தெரியாமல் பலரும் நிம்மதி இழந்து தவிக்கிறோம். அது போன்ற கெட்ட கனவுகளை நாம் எந்த நேரத்தில் காண்கிறோம் என்பதை பொருத்து, அது பலிக்குமா அல்லது பலிக்காதா என்று நம்மால் அறிய முடியும். கெட்ட கனவுகள வந்தால் எல்லோருக்கும் ஒரு வித படபடப்பு இருக்கும். இந்த கனவு ஏன் நமக்கு வந்தது, இதற்கு அர்த்தம் என்ன, பரிகாரம் என்ன என தெரியாமல் அல்லல்படுகிறோம். எந்த மாதிரியான கெட்ட கனவுகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை பின்வருமாறு பார்ப்போம்,

கெட்ட கனவு வந்தால் என்ன செய்ய வேண்டும்

  1. பாம்பு மற்றும் பிற விஷ ஜந்துகள் நம் கனவில் தொடர்ந்து வந்து நம்மை பயமுறுத்தி கொண்டே இருந்தால் கருடன் மீது அமர்ந்து இருக்கும் விஷ்ணுவின் படத்தை வழிபட்டால் விஷ ஜந்துகள் தொடர்பான கனவுகள் ஏற்படாது.
  2. நோய், வியாதிகள் சம்பந்தமான கனவுகள் நம் கனவில் தொடர்ந்து வந்தால் தன்வந்திரி மந்திரம் கூறி தன்வந்திரியை வழிபட்டு வர வேண்டும். இதற்கு ஆஞ்சநேயர் வழிபாடு செய்வதும் சிறந்தது.
  3. நாம் ஊனமானதை போல கனவு வந்தால் சோகமான செய்தி வந்து சேரும்.
  4. பேய், பிசாசு பற்றிய கனவுகள் மற்றும் நம் செய்யும் காரியங்கள் தடைபடுவது போல கனவு வந்தால் ஆனைமுகனை வழிபடவேண்டும். விநாயகருக்கு அர்ச்சனை செய்து அவரின் அகவலை படித்து வந்தால் இது போன்ற கெட்ட கனவுகள் ஏற்படாது.
  5. பண கஷ்டம், பண இழப்பு, பண நஷ்டம் போன்ற கனவுகளை கண்டால் மகாலக்ஷ்மியை வழிபட்டு வர வேண்டும்.
  6. நிர்வாண கோலம் கனவில் வந்தால், அவமானம் ஏற்படும்.
  7. படிப்பு தடைப்படும்படியான கனவுகள் வந்தால் சரஸ்வதி மற்றும் ஹயகிரீவர் மந்திரங்களை சொல்லி வழிபாட்டு வரலாம்.
  8. ஒரு குறிப்பிட்ட தெய்வம் நமது கனவில் அடிக்கடி தோன்றினால் அந்த தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபட்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கும்.
  9. இறந்தவர்கள் அடிக்கடி நமது கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் பெருமாளுக்கு ஏகாதசி விரதம் இருந்து வழிபட வேண்டும். தெய்வத்திற்கு பொங்கல் வைத்தும், இறந்த நம் முன்னோர்க்கு திதி கொடுத்தும் வழிபட்டு வரலாம்.

பொதுவாக கெட்ட கனவுகள் கண்டால் காலையில் எழுந்து குளித்து விட்டு பெருமாளை (அல்லது நமக்கு பிடித்த இஷ்ட தெய்வம்) மனதில் நினைத்து வழிபட வேண்டும். இவ்வாறு வழிபட்டால் நமது மனம் தெளியும். மேலும் கோவிலுக்கு சென்று ஒரு அர்ச்சனை செய்து விட்டு வருவது மிகவும் நல்லது.

காக்கும் கடவுளான பெருமாளை கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி வழிபடுவதன் மூலம் கெட்ட கனவுகளில் இருந்து தப்பிக்கலாம்.

“அச்சுதா! கேசவா! விஷ்ணுவே! சத்ய சங்கல்பரே! ஜனார்த்தனா! ஹம்ஸ நாராயணா! கிருஷ்ணா! என்னை காத்தருள வேண்டும்” என சொல்லி பெருமாளை வணங்க வேண்டும். இவ்வாறு இரவில் படுக்க போகும்முன் இந்த மந்திரத்தை கூறி வழிபட்டு வருவதன் மூலம் கெட்ட கனவுகள் நம்மை அண்டாது.