Home Tags Long and healthy hair

Tag: long and healthy hair

தலை முடி மென்மையாகவும் அடர்த்தியாகவும் வளர கேரட் ஹேர் பேக்

கேரட் ஹேர் பேக்

தலை முடி மென்மையாகவும் அடர்த்தியாகவும் வளர கேரட் ஹேர் பேக்

ஆண், பெண் இருவருக்குமே தலை முடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். குறிப்பாக பெண்களுக்கு தலைமுடிதான் அழகு. நீண்ட அடர்த்தியான கூந்தலை கொண்ட பெண்கள் தன்னம்பிக்கை  மற்றும் தைரியம் அதிகம் உள்ளவர்களாகவே இருப்பார்கள்.

அடர்த்தியான கூந்தலுக்குஆனால் இன்றைய நவீன காலத்தில் தலைமுடியை பரிமாறிக்க நேரம் இல்லாமல் அனைவரும் மிக வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறோம். முடியின் 80-85 சதவிகிதம் நமது முடியின் ஆரோக்கியத்திற்கு அவசியமான கெரட்டின் என்ற புரதத்தால் ஆனது. புரதத்தின் பற்றாக்குறையால் முடி உடைதல், முடி உதிர்வது போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, ஆரோக்கியமான உணவு மற்றும் நல்ல முடி பராமரிப்பு முறையை செய்வதன் மூலம் நமது புரத மேம்பட்டாடை அதிகரிக்க முடியும்.

தலை முடியின் வளர்ச்சியை அதிகரிக்க தலைமுடிக்கு புரதச்சத்து மிகுந்த உணவை நாம் உட்கொள்வதின் மூலம் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம். ஆரோக்கியமான உணவை உட்கொள்வதோடு மட்டுமல்லாமல் தலை முடியின் வேர்கால்களுக்கும் புரதச் சத்தை அளிக்க வேண்டும்.

முடியின் வளர்ச்சியை மேம்படுத்தி அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான கூந்தலை பெற செய்வதில் கேரட் முக்கிய பங்கு வகிக்கிறது. கேரட்டை நம் தலை முடிக்கு எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

கேரட் ஹேர் பேக்கேரட் ஹேர் பேக்

கேரட் – 1

தேங்காய் பால் – சிறிதளவு

பாதாம் எண்ணெய் – 1 ஸ்பூன்

முதலில் கேரட்டை தோல் சீவி ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து பின் வடிகட்டி கேரட் சாறினை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் கேரட் ஜூஸுடன் சிறிதளவு தேங்காய் பால், 1 ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும்,

கேரட் ஹேர் பேக்கினை நன்கு முடியின் வேர்கால்களில் படும்படி தடவி நன்றாக மசாஜ் செய்து கொள்ளளவும்.

பின்னர் ஷாம்புவினை பயன்படுத்தி தலைமுடியை அலசிக் கொள்ளவும்.

இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால் தலைமுடி வலுப்பெற்று கூந்தல் அடர்த்தியாக வளரும்.