Home Tags Mutton liver pepper fry

Tag: mutton liver pepper fry

ஈரல் மிளகு வறுவல் செய்வது எப்படி

ஈரல் வறுவல் செய்வது எப்படி

ஈரல் மிளகு வறுவல்

ஈரல் வறுவல் செய்வது எப்படி தேவையான பொருட்கள்

  1. ஈரல் – ½ கிலோ
  2. பட்டை – 1
  3. கிராம்பு – 2
  4. வெங்காயம் – 1 கப் ( பொடியாக நறுக்கியது )
  5. பச்சை மிளகாய் – 1 ( பொடியாக நறுக்கியது )
  6. இஞ்சி – 1 துண்டு ( பொடியாக நறுக்கியது )
  7. பூண்டு – 10 பல் ( பொடியாக நறுக்கியது )
  8. கரம் மசாலா – 1 ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
  10. மிளகு தூள் – 2 ஸ்பூன்
  11. உப்பு – தேவையான அளவு
  12. எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

  1. முதலில் ஈரலுடன் சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து நன்கு சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளவும்.
  2. சுத்தம் செய்த ஈரலுடன் சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. இப்போது ஒரு கடாயில் 2 முதல் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  4. எண்ணெய் சூடானதும் 1 துண்டு பட்டை, 2 கிராம்பு சேர்த்துக் கொள்ளவும்.
  5. பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை, மிளகாய் மூன்றையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  6. பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.
  7. வெங்காயம் பொன்னிறம் ஆகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  8. வெங்காயம் பொன்னிறம் ஆனதும் வேக வைத்த ஈரலை சேர்த்துக் கொள்ளவும்.
  9. ஈரலை சேர்த்து 2 நிமிடத்திற்கு நன்கு வதக்கி கொள்ளவும்.
  10. பின்னர் மஞ்சள் தூள், மிளகு தூள், கரம் மசாலா ஆகிவற்றை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  11. தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
  12. ஈரலை வேக வைக்கும் போது நாம் உப்பு சேர்த்திருப்பதால் உப்பின் அளவை சரிபார்த்து சேர்த்துக் கொள்ளவும்.
  13. உப்பு சேர்த்த பின் நன்கு ஒரு முறை கிளறி மூடி போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.
  14. 5 நிமிடம் ஆன பிறகு மூடியை திறந்து நன்கு கிளறி சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கினால் சுவையான ஈரல் மிளகு வறுவல் தயார்.