Home Tags Pineapple benefits in tamil

Tag: pineapple benefits in tamil

அன்னாசி பழம் மருத்துவ பயன்கள் | அன்னாசி பழம் நன்மைகள்

அன்னாசி பழத்தின் பயன்கள்

அன்னாசி பழம்

அன்னாசி பழம் பிரேசில் மற்றும் ஆகிய இடங்களைத் தாயகமாக கொண்டது. இதன் அறிவியல் பெயர் `அனாஸ் சாட்டிவிஸ் ஸ்கல்ட்’ (Annas sativis schult) என்பதாகும். இது பிரமிலசே இனத்தைச் சேர்ந்த ஒரு வகை தாவரம் ஆகும். அன்னாசி பழம் செதில்கள் போன்ற சொரசொரப்பான மேல் தோலையும், சாறு நிறைந்த மஞ்சள் நிறச் சதைப்பகுதியையும் கொண்டது. அன்னாசி என்ற பெயர் போர்த்துகீசிய மொழியில் இருந்து பெறப்பட்டது.

அன்னாசி பழத்தின் பயன்கள்

அன்னாசி பழத்தின் வேறு பெயர்கள்

அன்னாசி பழத்திற்கு ‘செந்தாழை’, `பூந்தாழப் பழம்’ என வேறு பெயர்களும் உண்டு.

அன்னாசிப்பழத்தில் உள்ள சத்துக்கள்

அன்னாசிப்பழத்தில் கலோரி – 82%, புரத சத்து – 0.89 கிராம், நார்ச்சத்து – 2.3 கிராம், இரும்பு சத்து – 0.48 மில்லி கிராம், கால்சியம் – 21 மில்லி கிராம், சோடியம் – 1 மில்லி கிராம், பொட்டாசியம் – 103 மில்லி கிராம், சர்க்கரை – 10 கிராம் மற்றும் வைட்டமின் C போன்றவை இதில் அடங்கியுள்ளன. இதில் கொழுப்புச்சத்து குறைந்த அளவிலும், நார்ச்சத்து அதிகமாகவும் நிறைந்துள்ளது.

அன்னாசி பழத்தின் மருத்துவ குணங்கள்

உடலில் புது இரத்தம் உருவாகும்

அன்னாசி பழத்தில் வைட்டமின் B என்னும் உயிர்சத்து அதிக அளவில் உள்ளது, பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் அன்னாசி விளங்குகிறது. உடலில் போதுமான ரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு மிக சிறந்த டானிக்.

பித்தம் குணமாகும்

நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் உலர்த்தி வற்றல்களாக செய்து தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பித்தம் தொடர்பான அனைத்து கோளாறுகளும் நீங்கும்.

வெள்ளைபடுதல் குணமாகும்

பெண்களுக்கு ஏற்படும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று வெள்ளைபடுதல் ஆகும். இந்த பிரச்சனை உள்ள பெண்கள் அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல் போன்ற நோய்கள் குணமாகும்.

எலும்புகள் வலிமையாகும்

அன்னாசி பழத்தில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கின்றது. அன்னாசி பழத்தில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் ஜீரண மண்டலத்தினை வலுப்படுத்துகிறது.

பார்வை தெளிவடையும்

அன்னாசி பழத்தில் அதிக அளவில் வைட்டமின் A சத்து உள்ளது. வைட்டமின் A சத்தானது பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. மேலும் பார்வை கோளாறு, மாலை கண் நோய் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட அன்னாசிபழம் உதவுகிறது.

அன்னாசி பழம் மருத்துவ குணங்கள்

மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணம்

அன்னாசி பழத்தில் ‘ப்ரோமெலைன்’ என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது மூட்டுகளில் தேய்மானம் ஏற்படும்போது ஏற்படும் வலியினை கட்டுப்படுத்த உதவுகிறது.

தொண்டை பிரச்சனைகளை குணமாக்கும்

தொண்டைப் புண், தொண்டையில் ஏற்படும் சதை வளர்ச்சி, நல்ல குரல் வளம் பெற அன்னாசிப்பழச் சாறு அருந்தி வரலாம். அன்னாசி பழ சாற்றால் வாய் கொப்பளித்தால் தொண்டை அழற்சி குணமாகும்.

குறிப்பு

1. பழுக்காத அன்னாசிப்பழம் சாப்பிட்டால் வாய் வீக்கம், கடுமையான வாந்தி போன்றவை ஏற்படும்.
2. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். அதனால் இதை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.
3. ஆன்டிபயாடிக், வலிப்புத் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்துவோர் அன்னாசி பழத்தை சாப்பிட கூடாது.
4. அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிட்டால் பற்களில் கறை உண்டாகும். பற்களின் மேலுள்ள எனாமலின் மீது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.