Home Tags Pineapple sweet recipe

Tag: pineapple sweet recipe

பைனாப்பிள்  கேசரி செய்முறை

pineapple kesari recipe

பைனாப்பிள்  கேசரி செய்முறை 

pineapple kesari recipe தேவையான பொருட்கள்

  1. ரவை – 1 கப்
  2. சர்க்கரை – ¾ கப்
  3. தண்ணீர் – 2 கப்
  4. கேசரி கலர் – சிறிதளவு
  5. அன்னாசிபழத் துண்டுகள் – ½ கப்
  6. நெய் – தேவையான அளவு
  7. முந்திரி, திராட்சை –  சிறிதளவு

செய்முறை

  1. முதலில் ஒரு நான்ஸ்டிக் கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளவும்.
  2. நெய் சூடானதும் அதில் முந்திரி திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  3. பின் அதே கடாயில் 1 கப் ரவை சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும்.
  4. பின்னர் ஒரு பேனில் சிறிது நெய் சேர்த்து அதில் அன்னசிபழத்தை சேர்த்து சிறது நேரம் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
  5. பின் பேனில் 2 கப் தண்ணீர் சேர்த்து அத்துடன் கேசரி கலர் சேர்த்து கொள்ளவும்.
  6. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் வறுத்து வைத்துள்ள ரவையை சேர்த்து கை விடாமல் கிளறவும்.
  7. ரவையை வெந்ததும் அதில் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும்.
  8. சர்க்கரை கரைந்தவுடன் வதக்கி வைத்துள்ள அன்னசிபழத்துண்டுகள் மற்றும் சிறிதளவு அன்னாசி பழ ஜூஸ் சேர்த்து சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  9. பின்னர் வறுத்த முந்திரி திராட்சை, சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  10. கடைசியாக கொஞ்சம் நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால் சுவையான பைனாப்பிள்  கேசரி ரெடி.