Home Tags Prawn kuzhambu

Tag: prawn kuzhambu

இறால் கிரேவி செய்வது எப்படி

இறால் கிரேவி செய்முறை

இறால் கிரேவி செய்வது எப்படி

இறால் கிரேவி செய்முறை இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது. ஆனால் அவற்றில் கார்போஹைட்ரேட் கிடையாது. அதனால் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், இந்த கடல் உணவை தாரளமாக சாப்பிடலாம். இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தசைகள் வலுவடையும். கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய இறால் பெரிதும் பயன்படுகிறது. இப்போது சுவையான இறால் கிரேவி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  1. இறால் – ½ கிலோ
  2. வெங்காயம் – 2 ( பொடியாக நறுக்கியது )
  3. தக்காளி – 1 ( பொடியாக நறுக்கியது )
  4. குடைமிளகாய் 1
  5. தேங்காய் பால் – ¼ கப்
  6. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  7. மிளகாய் தூள் – ½ ஸ்பூன்
  8. கடுகு – ¼ ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
  10. கரம் மசாலா – ½ ஸ்பூன்
  11. பச்சை மிளகாய் 2
  12. கொத்தமல்லி தழை –  1 கைப்பிடி
  13. எண்ணெய் – தேவையான அளவு
  14. உப்பு – தேவையான அளவு

செய்முறை

  1. இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு,கறிவேப்பிலை  வெங்காயம்,பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் ஒரு கண்ணாடி பதத்திற்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. தக்காளி நன்கு குழைவாக வதங்கிய பின் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  5. குடைமிளகாய் ஓரளவிற்கு வதங்கியவுடன் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்த்து 5 நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.
  6. இத்துடன்  இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  7. பின்  மிளகாய் தூள் , கரம் மசாலா ,தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
  8. மிதமான தீயில் வைத்து இறாலை வேக விடவும்.
  9. இறால் வெந்து தண்ணீர் கொஞ்சம் வற்றியவுடன் தேங்காய் பால் சேர்க்கவும்.
  10. தேங்காய் பால் சேர்த்த பின்னர் அதிக நேரம் கொதிக்க வைக்காமல் ஒரு கொதி வந்தவுடன் கொஞ்சம் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான இறால் கிரேவி தயார்.