Home Tags Thala kari kuzhambu seivadhu eppadi

Tag: thala kari kuzhambu seivadhu eppadi

தலைக் கறிக்குழம்பு

ஆட்டு தல கறி குழம்பு

தலைக் கறிக்குழம்பு

ஆட்டு தல கறி குழம்பு தேவையான பொருட்கள்

  1. ஆட்டுத்தலை – 1
  2. தேங்காய் – ½ கப்
  3. சின்ன வெங்காயம் – 1 கப்
  4. தக்காளி – 2
  5. உப்பு – தேவையான அளவு
  6. மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
  7. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  8. மல்லி தூள் – 1 ஸ்பூன்
  9. கரம் மசாலா – ½ ஸ்பூன்
  10. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  11. காய்ந்த மிளகாய் – 2
  12. சீரகம் – ¼ ஸ்பூன்
  13. சோம்பு  – ¼ ஸ்பூன்
  14. கறிவேப்பிலை – சிறிதளவு
  15. கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை

  1. ஆட்டுத்தலையை சுத்தம் செய்து வெட்டிக் கொள்ளவும்.
  2. ஒரு குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
  3. எண்ணெய் காய்ந்ததும் அதில் சீரகம், சோம்பு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை பொட்டு தாளிக்கவும்.
  4. தாளித்தவுடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. பின் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  6. தக்காளியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  7. வெங்காயம் தக்காளி வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  8. பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  9. வெட்டி வைத்துள்ள தலைகறியை சேர்த்துக் கொள்ளவும்.
  10. கறியுடன் மசாலாவை நன்கு கலந்து விடவும்.
  11. ½ கப் தேங்காயை மிக்சி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
  12. அத்துடன் சிரிதளவு சோம்பு சேர்த்துக் கொள்ளவும்.
  13. கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  14. அரைத்த தேங்காய் விழுதை கறியுடன் சேர்த்து கொள்ளவும்.
  15. தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  16. கடைசியாக கொஞ்சம் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
  17. குக்கரை மூடி 4 முதல் 5 விசில் விட்டு இறக்கினால் சுவையான தலைக்கறி குழம்பு தயார்.