Home Tags Vilangugal kanavu

Tag: vilangugal kanavu

வீட்டு விலங்குகளை கனவில் கண்டால் என்ன பலன்

கனவு பலன்கள் நாய்

வீட்டு விலங்குகளை கனவில் கண்டால்

பூனை கனவில் வந்தால்

1. வீட்டு அடுபாங்கரையில் பூனை தூங்குவது போலவோ அல்லது பூனைக்குட்டி போட்டுள்ளது போலவோ கனவு வந்தால் அது நல்ல சகுனம் அல்ல என்று அர்த்தம்.
2. பூனை வலமிருந்து இடமாக செல்வது போல கனவு கண்டால் அது அபசகுனம் ஆகும்.

பூனை கனவு பலன்கள்3. பூனை இடமிருந்து வலமாக செல்வது போல கனவு கண்டால் நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலைகள் தாமதம் ஆகலாம் என்று அர்த்தம்.
4. பூனை இறந்துவிட்டது போல கனவு கண்டால் வழக்கு விவகாரங்கள் வெற்றி பெறும் என்று அர்த்தம்.
5. பொதுவாக பூனையை கனவில் கண்டால் செய்து கொண்டிருக்கும் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும் என்று அர்த்தம்.

நாய் கனவில் வந்தால்

1. நாயை கனவில் காண்பது மிகவும் நல்லது, நினைத்த காரியங்கள் வெற்றி அடையும் என்று அர்த்தம்.
2. நாய் படுத்து கொண்டிருப்பது போலவே, அமர்ந்திருப்பது போலவே, அல்லது குரைப்பது போல கனவு கண்டால் நன்மைகள் ஏற்படும் என்று அர்த்தம்.

கனவு பலன்கள் நாய்3. நாய் உங்களை கடிப்பது போல கனவு கண்டால் உங்களின் உடல் நிலை பாதிக்கப்படும் என்று அர்த்தம்.
4. பொதுவாக நாயை கனவில் கண்டால் கனவு காண்பவரின் கல்வியில் மேம்பாடு, உத்தியோக உயர்வு, தனவரவு போன்றவை அதிகரிக்கும் என்று அர்த்தம்.
5. நாய் இறந்துபோனது போல கனவு கண்டால் துன்பங்கள் ஏற்படும் என்று அர்த்தம்.

ஆடு கனவில் வந்தால்

கனவு பலன்கள் ஆடு

1. ஆடு கனவில் வந்தால் மிகவும் நல்லது. இது கனவு கண்டவருக்கு பொருள் செல்வத்தை அதிகரிக்கும். ஆட்டு மந்தை கனவில் வந்தால் நன்மைகள் ஏற்படும்.
2. ஆடு நம்மை பார்த்து கத்துவது போல கனவு கண்டால் விரைவில் ஒரு நல்ல செய்தி வரும் என்று அர்த்தம்.
3. செம்மரி ஆட்டை கனவில் கண்டால் செல்வம் நிலை மேம்படும் என்று அர்த்தம்.
4. ஆட்டை கோயிலில் பலியிடுவது போல கனவு கண்டால் கனவு கண்டவரின் வேண்டுதல்கள் பலிக்கும் என்று அர்த்தம்.

காளை, பசு, எருமை போன்றவை கனவில் வந்தால்

1. காளைகள் கனவில் வருவது நல்லதல்ல. இதனால் துன்பங்கள் ஏற்படும் என்று அர்த்தம்.
2. காளை நம்மை துரத்துவது போல கனவு கண்டால் மரண பயம் உண்டாகும்.
3. காளை நம்மை முட்டுவது போல கனவு கண்டால் விபத்துகள் ஏற்படும், மேலும் மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.
4. காளை நம்மை மிதிப்பது போல் கனவு வந்தால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து மகிழ்ச்சி உண்டாகும் என்று அர்த்தம்.
5. காளை சீறுவது போல் கனவு வந்தால் கண்டால் பிறரின் மேல் நமக்கு இருந்த அதிகாரங்கள் குறையும் என்று அர்த்தம்.
6. இளங்காளைகள் கனவில் வந்தால் குழந்தைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும் என்று பொருள்.
7. பசுமாடு கன்று போடுவது போல கனவு வந்தால் செல்வ நிலை மேலும் பெருகும் என்று அர்த்தம்.
8. பசு மாட்டை கனவில் காண்பது மிகவும் நல்ல பலனை கொடுக்கும்.
9. பசு மாடு வீட்டுக்குள் வருவது போல கனவு வந்தால் மிகவும் நல்லது.
10. பசு விரட்டுவதை போல் கனவு வந்தால் உடல் நலம் பாதிக்கபட்டு வியாதிகள் ஏற்படும் என்று அர்த்தம்.

கனவு பலன்கள் பசு, எருமை11. பசுவும், அதன் கன்றும் ஒன்றாக கனவில் வருவது வீட்டில் சுபச் செய்திகள் வருவதற்கான அறிகுறியாகும்.
12. வெள்ளை நிற பசுவை கனவில் கண்டால் உங்களின் வாழ்க்கையில் மிக பெரிய நல்ல மாறுதல்கள் மாற்றங்கள் ஏற்படும் என்று அர்த்தம்.
13. எருமை கனவில் வந்தால் அது நல்ல சகுனம் அல்ல.
14. எருமை வீட்டில் நுழைவது போல கனவு வந்தால் நல்லதல்ல. இதனால் வீட்டில் துக்க நிகழ்ச்சிகள் ஏற்படலாம் என்று அர்த்தம்.
15. எருமை முட்டுவது போல் கனவு கண்டால் வாகனங்களில் செல்லும்போது விபத்துக்கள் ஏற்படும் என்று அர்த்தம்.
16. எருமை நம்மை நோக்கி வருவது போல் கனவு வந்தால் கனவு கண்டவருக்கு பிரச்னை மேல் பிரச்னை வரும் என்று அர்த்தம். ஆனால், சில நாட்களிலேயே பிரச்சனைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
17. காளை மாடு, பசுமாடு, , குதிரை போன்றவற்றை கனவில் கண்டால் கனவு கண்டவரின் குடும்பம் மென்மேலும் மேன்மைகள் பெறும் என்று அர்த்தம்.
18. பசு கன்று போடுவது போல கனவு காண்பது நல்லதல்ல. துன்பங்கள் வந்தடையும் என்று அர்த்தம்.
19. கன்று ஈன்ற பசுவைக் கனவில் பார்ப்பது செல்வ வளத்தை உண்டாக்கும் என்று அர்த்தம்.

கழுதை, குதிரை போன்றவை கனவில் வந்தால்

கனவு பலன்கள் கழுதை1. கழுதை கனவில் வந்தால் நன்மைகள் பெருகும். கௌரவம் அதிகரிக்கும் என்று அர்த்தம்.
2. கழுதை விரட்டுவது போல கனவு வந்தால் பயம் நீங்கும் என்று அர்த்தம்.
3. கழுதை அல்லது குதிரை கனவில் வந்தால் வழக்குகள் சாதகமாக முடியும் என்று அர்த்தம்.
4. குதிரை கனவில் வந்தாலோ அல்லது குதிரையின் மீது சவாரி செய்வது போல கனவு வந்தாலோ வாழ்க்கை முன்னேற்ற பாதையில் செல்லும் என்று அர்த்தம்.

எலி, முயல் போன்றவை கனவில் வந்தால்

1. சுண்டெலி கனவில் கண்டால், செய்து கொண்டிருக்கும் முயற்சிகள் மிக தாமதமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது என்று பொருள்.
2. பெருச்சாளி கனவில் வந்தால் துன்பங்கள் ஏற்படும் என்று அர்த்தம்.
3. எலி கனவில் வந்தால் எதிரிகள் பலம் பெருகும் என்று பொருள்.
4. முயல் கனவில் வந்தால் பொருள் வரவு ஏற்படும் என்று அர்த்தம்.
5. முயலை கனவில் கண்டால் நல்ல பொருள் சேர்க்கை ஏற்படும் என்று பொருள்.
6. முயல் விளையாடுவது போல கனவு வந்தால் புதிய நண்பர்கள் சேர்க்கை ஏற்படும் என்று அர்த்தம்.
7. முயல் கறி சாப்பிடுவது போல கனவு வந்தால் பொருள் இழப்பு ஏற்படும் என்று அர்த்தம்.