Home Tags Wheezing home remedies in tamil

Tag: wheezing home remedies in tamil

மூச்சிரைப்பு ஏன் ஏற்படுகிறது? அதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள்

மூச்சுத்திணறல் வர காரணம்

மூச்சிரைப்பு, மூச்சுத்திணறல்

நம் இதயத்துக்கு தேவையான அளவு ஆக்சிஜனை நுரையிரலால் அனுப்ப முடியாதபோது மூச்சிரைப்பு மூச்சு திணறல் போன்றவைகள் ஏற்படுகிறது. இது ஒரு வகையான ஒவ்வாமை நோய்.

நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள சில தூசுகளால் நமது மூச்சு குழாய் சுருங்கியும், அழற்சியின் காரணமாக அதன் உட்பகுதி தடித்தும் விடுகிறது. இதன் விளைவாக மூச்சு குழாய் வழியாக காற்று உள்ளே செல்வதும், வெளியே வருவதும் கடினமாகிறது. இதனால் மூச்சிரைப்பு, இருமல் ஏற்படுகிறது.

மூச்சிரைப்பு வருவதற்கு காரணங்கள்

மூச்சுத் திணறலுக்கு முதன்மையான காரணமாக ஆஸ்துமா இருக்கிறது. மூச்சுக்காற்று சென்று வரும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு நுரையீரலுக்கு தேவையான காற்றை கொண்டு செல்லாதது தான் இதற்கு காரணமாகும்.

மூச்சிரைப்பு நோய் நுரையீரலுக்கும் மார்பு கூட்டிற்கும் இடையில் அளவுக்கு அதிகமான காற்று சேர்ந்திருப்பதைத் தான் நிமோதெராக்ஸ் என்கிறார்கள். அதிகமாக புகை பிடிப்பவர்கள், மற்றும் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிமோதெராக்ஸ் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவர்களுக்கு மூச்சுத்திணறல் மட்டுமல்லது நெஞ்சு அடைப்பது போன்ற உணர்வு, அதீத வியர்வை ஆகியவை ஏற்படும்.

ஒருவர் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வது, உடலால் தாங்கிக் கொள்ள முடியாத வெப்பத்தில் இருப்பது, உயரமான இடங்களுக்கு பயணிப்பது, உடற்பருமன் ஆகியவை காரணமாகும்.

நுரையீரலில் ஏற்படுகிற ஓர் பாதிப்பு தான் நிமோனியா. வைரஸ் பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்றினால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை இதன் அறிகுறிகள்.

நுரையீரலில் இரத்த உறைவு ஏற்பட்டாலும் மூச்சுத் திணறல் ஏற்படும். இதன் ஆரம்பக்கட்டத்தில் எந்த அறிகுறிகளும் தெரியாது. நோய் முற்றி தீவிரமடையும் போது தான் நமக்கே தெரியவரும். இந்தப் பிரச்சனை மரபு ரீதியாகவும் ஏற்படக்கூடும். இரத்தத்தில் போதுமான உயிரணுக்கள் இல்லாதவர்களுக்கும் மூச்சுத் திணறல் ஏற்படும்.

மூச்சிரைப்பு மூசுத்திணறலை தீர்க்கும் எளிய முறைகள்

மூச்சிரைப்பு உள்ளவர்கள் வெள்ளைப் பூண்டை நசுக்கி அதன் சாற்றை மூக்கில் வைத்து உறிஞ்சிக் கொண்டிருந்தால் மூச்சிரைப்பு மட்டுப்படும்.

ஆடாதோடை வேரையும், கண்டங்கத்திரி வேரையும் தண்ணீரில் விட்டு, அதில் திப்பிலிப் பொடி சேர்த்துக் கொடுக்க, மூச்சிரைப்பு நீங்கும்.

தூதுவளை கீரையை காயவைத்து தூளாக்கி அரை தேக்கரண்டி எடுத்து தினம் ஒரு வேளை சாப்பிட மூச்சிரைப்பு, சளி தொல்லை நீங்கும்.

இஞ்சி துண்டுகள் சிலவற்றை ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீருடன் சிறிது தேன் கலந்து சூடாக அருந்தினால் மூச்சிரைப்பு குறையும்.

ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தய விதைகளை எடுத்து அதை நான்கு முதல் ஐந்து நிமிடம் வரை நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டிய பிறகு தினமும் ஒன்று அல்லது இரண்டு கப்புகள் இந்த வெந்தய நீரை குடித்து வர வேண்டும்.

மூச்சுப் பயிற்சி மற்றும் யோகா செய்வது மூச்சிரைப்பு பிரச்சனைக்கு மிகவும் நல்ல தீர்வாக அமைகிறது. மேலும், உடலிலுள்ள பலவித பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வாகிறது.

அடிக்கடி ஆவி பிடிப்பதன் மூலம் உடலிலுள்ள கெட்ட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் வெளியேறி உடலுக்கு நன்மை விளைகிறது.

உடனடி நிவாரணம்

மூச்சிரைப்பு வந்தபின் உடனடியாக நிவாரண மருந்தை எடுத்து கொள்வதை காட்டிலும், நோய் கட்டுப்படுத்தும் மருந்தை தொடர்ந்து உபயோகிப்பதால் மூச்சு குழாய் அழற்சி குறைந்து நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

மூச்சுத்திணறல் வர காரணம் ப்ரிவென்டர்ஸ் மற்றும் ரிலீவர்ஸ் என்ற நோய் கட்டுப்படுத்தும் மருந்து, காற்று குழாயில் ஏற்படும் பாதிப்பை கட்டுப்பாட்டில் வைத்து இருமல் மற்றும் மூச்சிரைப்பு வராமல் தடுக்கிறது. இதை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மூச்சுப் பயிற்சி மற்றும் யோகா செய்வது மூச்சிரைப்பு பிரச்சனைக்கு மிகவும் நல்ல தீர்வாக அமைகிறது. மேலும், உடலிலுள்ள பலவித பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வாகிறது.

அடிக்கடி ஆவி பிடிப்பதன் மூலம் உடலிலுள்ள கெட்ட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் வெளியேறி உடலுக்கு நன்மை விளைகிறது.

மூச்சிரைப்பு உள்ளவர்களுக்கு வீடு, அலுவலகம், தெரு, சுற்றுச்சூழல் இவை எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டியது மிகமிக அவசியம். தூசு, குப்பை, அழுகிய உணவுப்பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

மூச்சிரைப்பு உள்ளவர்கள் செய்ய வேண்டியவை

மூச்சிரைப்பு உள்ளவர்களுக்கு வீடு, அலுவலகம், தெரு, சுற்றுச்சூழல் இவை எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டியது மிகமிக அவசியம்.

தூசு, குப்பை, அழுகிய உணவுப்பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

படுக்கை விரிப்புகளையும் தலையணை உறைகளையும் அடிக்கடி மாற்றிவிட வேண்டும்.

கம்பளிப் போர்வையைப் பயன்படுத்தக் கூடாது. சில்லென்ற காற்று நேரடியாக அறைக்குள் வருவதைத் தடுக்க வேண்டும்.

இவர்கள் சுழல் விசிறிக்கு நேராகப் படுக்கக் கூடாது. வாசனை திரவியங்களை அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது.

இரண்டு சக்கர வாகனங்களில் வெளியில் செல்வதாக இருந்தால், முகத்தில் சுகாதார மாஸ்க் (முக கவசம்) அணிந்து கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

பால், தயிர், முட்டை, மீன், கருவாடு, நண்டு, கடல் மீன், கடலை, பருப்பு வகைகள், கொட்டை வகைகள், வாழைப்பழம், திராட்சைப்பழம், எலுமிச்சை, நெல்லிக்காய், கத்திரிக்காய், கொய்யா, தக்காளி, டால்டா, குளிர்பானங்கள், போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.

வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. எளிதாகச் செரிக்கும் வகையில் உணவு இருக்க வேண்டும். உறங்கச் செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும்.