Home Tags இறால் உணவுகள்

Tag: இறால் உணவுகள்

சுவையான இறால் வடை

இறால் வடை செய்முறை

இறால் வடை

தேவையான பொருட்கள்இறால் வடை செய்முறை

  • இறால் – 100 கிராம்
  • கடலைபருப்பு – 250 கிராம்
  • வெங்காயம் – 2 ( பொடியாக நறுக்கியது )
  • பச்சை மிளகாய் –  5 ( பொடியாக நறுக்கியது )
  • பூண்டு –  6 பல்
  • இஞ்சி –  1 துண்டு
  • கறிவேப்பிலை –  சிறிதளவு
  • சோம்பு – 1 ஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

  • முதலில் இறாலை உரித்து சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • இறாலில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  • கடலை பருப்பை நன்கு கழுவி ½ மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் வேக வைத்த இறாலை மிக்சியில் சேர்த்து கொரகொரப்பாக  அரைத்துக் கொள்ளவும்.
  • ஊற வைத்த கடலை பருப்பை தண்ணீர் வடித்து மிக்சி ஜாரில் சேர்த்து தண்ணீர் அதிகம் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும்.
  • அரைத்த கடலைபருப்பை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.
  • பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளவும்.
  • பின் இஞ்சி, பூண்டு, சோம்பு ஆகியவற்றை தட்டி சேர்த்துக்  கொள்ள வேண்டும்.
  • பின் அரைத்து வைத்துள்ள இறாலை சேர்த்துக் கொள்ளவும்.
  • பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.
  • தேவையான அளவு உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  • எண்ணெய் காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மாவை சிறு சிறு வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் சிவந்த பின் எடுத்து பரிமாறினால் சுவையான இறால் வடை ரெடி.

ஹோட்டல் ஸ்டைல் இறால் 65

how to make prawn 65 recipe

இறால் 65

how to make prawn 65 recipe தேவையான பொருட்கள்

  1. இறால் – ½ கிலோ
  2. சோளமாவு – 1 ஸ்பூன்
  3. மைதா மாவு – 1 ஸ்பூன்
  4. முட்டை – 1
  5. தயிர் – 2 ஸ்பூன்
  6. இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  7. எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
  8. சீரக தூள் – ½ ஸ்பூன்
  9. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் – சிறிதளவு
  11. தனியா தூள் – 1 ஸ்பூன்
  12. எண்ணெய் – தேவையான அளவு
  13. உப்பு – தேவையான அளவு

செய்முறை

  1. இறால் 65 செய்வதற்கு கொஞ்சம் பெரிய இறாலாக பார்த்து வாங்கிக் கொள்ளவும்.
  2. முதலில் ஈரலை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
  3. பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், தனியா தூள், சோளமாவு, மைதா, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, முட்டை மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
  5. தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.
  6. இவை அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து ½ மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
  7. ½ மணி நேரம் ஊறிய பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் ஊற வைத்த இறாலை எண்ணெயில் பொறித்து எடுத்தால் சுவையான இறால் 65 ரெடி.

இறால் குழம்பு

prawn recipes

இறால் குழம்புஇறால் குழம்பு செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

  1. இறால் – ½ கிலோ
  2. உருளைக்கிழங்கு –  1 ( பெரியது )
  3. முருங்கைக்காய் – 1
  4. கொத்தமல்லி – சிறிதளவு
  5. மிளகாய் தூள் –  2 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் – ¼  ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  8. எண்ணெய் – தேவையான அளவு
  9. உப்பு – தேவையான அளவு

அரைக்க

  1. தேங்காய் துருவல் – ¼ கப்
  2. தக்காளி – 1
  3. இஞ்சி – 1 துண்டு
  4. பூண்டு – 10 பல்
  5. பட்டை – 2
  6. சோம்பு – ½ ஸ்பூன்

தாளிக்க

  1. கடுகு – ½ ஸ்பூன்
  2. சீரகம் – ½ ஸ்பூன்
  3. கறிவேப்பிலை – சிறிதளவு

prawn recipes செய்முறை

  1. இறாலை சுத்தம் செய்து  உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஊற வைக்கவும்.
  2. உருளைக்கிழங்கு மற்றும் முருங்கைக்கையை வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  3. தேங்காய் துருவல், தக்காளி, சோம்பு, பட்டை ஆகியவற்றை மிக்சியில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
  5. பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை நன்கு வதக்கவும்.
  6. வெங்காயம் வதங்கியவுடன்  இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  7. பின் அரைத்த தேங்காய் விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், முருங்கைக்காய்  உருளைக்கிழங்கு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  8. பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும். வேறு ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இறாலை சேர்த்து வதக்கவும் (இறாலை வதக்கி சேர்ப்பதால், குழம்பு சுவையாக இருக்கும்).
  9. வதக்கிய இறாலை குழம்பில் சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்தவுடன் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். சுவையான இறால் குழம்பு தயார்.

இறால் சீஸ் ரோல் – Prawn Cheese Roll

இறால் சீஸ் ரோல்

இறால் சீஸ் ரோல்

இறால் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறால் உணவு பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. காரணம் இது சுவை, மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவாகவும் திகழ்கிறது. அப்படிப்பட்ட இறாலை வைத்து இறால் சீஸ் ரோல் செய்வது எப்படி என பார்ப்போம்.

இறால் சீஸ் ரோல்

தேவையான பொருட்கள்

சப்பாத்தி செய்ய

  1. கோதுமை மாவு – 2 கப்
  2. எண்ணெய் – சிறிதளவு
  3. தண்ணீர் – தேவையான அளவு (வெதுவெதுப்பான நீர் )
  4. உப்பு – தேவையான அளவு

ஸ்டஃப்பிங் செய்ய

  1. இறால் – 250 கிராம்
  2. சீஸ் – 100 கிராம்
  3. பெரிய வெங்காயம் – 2 ( பொடியாக நறுக்கியது )
  4. தக்காளி – 1 ( பொடியாக நறுக்கியது )
  5. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  6. குடைமிளகாய் – 1/4 கப்
  7. கரம் மசாலா – ½ ஸ்பூன்
  8. மிளகாய்த்தூள் – ½ ஸ்பூன்
  9. சிக்கன் மசாலாத்தூள் – ½ ஸ்பூன்
  10. மல்லித்தழை – சிறிதளவு ( பொடியாக நறுக்கியது )
  11. வெண்ணெய் – சிறிதளவு
  12. உப்பு – தேவையான அளவு
  13. எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் கோதுமை மாவினை சேர்த்துக் கொள்ளவும்.
  2. கோதுமை மாவுடன் தேவையான அளவு உப்பு, சிறிதளவு எண்ணெய், கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. 2 மணி நேரத்திற்கு பின் ஊறிய மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பின் சப்பாத்திக் கட்டையில் வைத்து தேய்த்து எடுக்கவும்.
    பின்னர் சப்பாத்தியை தோசைக் கல்லில் பொட்டு சுட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  4. இறாலை சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
    ஸ்டப்பிங் செய்வதற்கு ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  5. எண்ணெய் சூடானதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு குழைவாக வதக்கவும்.
  6. பின் 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.
    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  7. பின்னர் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  8. குடைமிளகாய் வதங்கியவுடன் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்க்கவும்.
  9. இறால் சிறிதளவு வதங்கியதும் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள், சிக்கன் மசாலா சேர்த்து நன்கு கிளறவும்.
  10. மசாலாவின் பச்சை வாசனை போன பின் சிரிதளவு தண்ணீர் தெளித்து கலந்து விடவும்.
  11. கடைசியாக பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி கிளறி இறக்கவும்.
  12. இப்போது சுட்டு வைத்துள்ள சப்பாத்தியில் கொஞ்சம் வெண்ணெய் தடவி அதற்க்கு மேல் இறால் கலவையை வைக்கவும்.
    பின்னர் அதன் மேல் சீஸ் துருவல் சேர்த்து ரோல் செய்து பரிமாறவும்.
    சுவையான இறால் சீஸ் ரோல் தயார்.

சுவையான செட்டிநாடு சில்லி இறால் – Chettinadu Chilli Iraal

செட்டிநாடு சில்லி இறால் எப்படி செய்வது

செட்டிநாடு சில்லி இறால் (Chettinadu Chilli Iraal)

இறாலை வைத்து செய்யப்படும் நாவு வகைகள் சுவை மிகுந்தவை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறாலை விரும்பி சாப்பிட காரணம் அது சத்தானது, சுவை மிகுந்தது, மற்றும் எலும்பில்லாதது. அத்தகைய சிறப்பு வாய்ந்த இறாலை வைத்து செட்டிநாடு சில்லி இறால் எப்படி செய்வது என பார்ப்போம்.

செட்டிநாடு சில்லி இறால் எப்படி செய்வது

சில்லி இறால் செய்ய தேவையான பொருட்கள்,

  1. இறால் – ½ கிலோ
  2. மிளகாய் பொடி – 1 ஸ்பூன்
  3. தக்காளி – 1
  4. மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்
  5. சோம்பு பொடி – ½ ஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  7. வெங்காயம் – 2
  8. பச்சை மிளகாய் – 3
  9. கறிவேப்பிலை – சிறிதளவு
  10. எண்ணெய் – தேவையான அளவு
  11. உப்பு – தேவையான அளவு

செய்முறை

  1. முதலில் இறாலை தோல் நீக்கி நடுவில் உள்ள குடலை எடுத்து விட்டு சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கழுவ வேண்டும்.
  2. பிறகு அதனுடன் மிளகாய் தூள் , சோம்பு தூள் , தேவையான அளவு உப்பு , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிசறி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  3. வெங்காயம், தக்காளியை மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  4. பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  5. அடுப்பில் வாணலியை வைத்து கொஞ்சம் எண்ணை ஊற்றி ஊற வைத்துள்ள இறால் மசாலாவை சேர்த்து வதக்க வேண்டும்.
  6. மிதமான தீயில் வைத்து வதக்கவும், வதக்கும் பொழுது இறாலில் இருந்து தண்ணீர் விடும், அந்த தண்ணீர் முற்றிலும் வற்றும் வரை அடுப்பில் வைத்து கிளறவும்.
  7. இறால் ஓரளவிற்கு வவதங்கியதும் வெளியே எடுத்துவிடவும்.
  8. அதே வாணலியில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  9. இவை அனைத்தும் நன்கு வதங்கியதும் வதக்கி வைத்துள்ள இறாலை சேர்க்கவும்.
  10. இறாலை சேர்த்து 10 நிமிடத்திற்கு நன்கு வேக விடவும்.
  11. பின் கடைசியாக கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான செட்டிநாடு சில்லி இறால் தயார்.